என் மலர்
புதுச்சேரி

சிங்காரவேலர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
சிங்கார வேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை
- புதுவை-கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி துறை சார்பில் சிங்காரவேலர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
புதுவை-கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை மாநில தி.மு.க. சார்பில் சிங்காரவேலர் நினைவு தினத்தையொட்டி, கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி,
செந்தில்குமார், மாநில துணை அமைப்பாளர் அமுதா குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், சீத்தாராமன், சக்திவேல், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மீனவர் அணி அமைப்பாளர் கோதண்டராமன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தாமோ.தமிழரசன், துணை அமைப்பாளர் பாலபாரதி, வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு, கிளைச் செயலாளர்கள் சசிகுமார், வெங்கட், முருகன், இளைஞர் அணி தொகுதி அமைப்பாளர் அரசு, ஆட்டோ சங்கம் அஜிஷ்பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர். மேலும் பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பிலும் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.






