என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சட்டம், மரபு, நிர்வாகம் பற்றி ரங்கசாமிக்கு அக்கறை இல்லை-முன்னாள் எம்.பி. ராமதாஸ் தாக்கு
    X

    கோப்பு படம்.

    சட்டம், மரபு, நிர்வாகம் பற்றி ரங்கசாமிக்கு அக்கறை இல்லை-முன்னாள் எம்.பி. ராமதாஸ் தாக்கு

    • 13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்த மத்திய அரசு புதுவைக்கும் முழு நேர கவர்னரை நியமித்திருக்க வேண்டும்.
    • மத்திய அரசு ஏன் புதுவைக்கு முழு நேர கவர்னரை நியமிக்கவில்லை என முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    மத்திய அரசு புதிதாக 13 மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கு கவர்ன ர்களை நியமித்தி ருப்பது பாராட்டுக்குரியது. 13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்த மத்திய அரசு புதுவைக்கும் முழு நேர கவர்னரை நியமித்திருக்க வேண்டும். பொறுப்பு கவர்னர் தமிழிசை பதவியேற்று 2 ஆண்டாகிறது.

    மத்திய அரசு ஒரு முழு நேர கவர்னரை நியமிக்காமல் சட்டத்தை மீறுவது சரியல்ல. புதுவையில் மக்கள் அரசு உள்ளது என மத்திய அரசு மதிக்கவில்லை. இருப்பவரை வைத்து தமது அரசியல் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என எண்ணுவதாக தோன்றுகிறது.

    மத்திய அரசு ஏன் புதுவைக்கு முழு நேர கவர்னரை நியமிக்கவில்லை என முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும். தன் காரியங்கள் சரியாக முடிந்தால் போதும். சட்டம், மரபு, பற்றியோ நிர்வாகம் பற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அக்கறை இல்லை.

    புதுவையை மத்திய அரசு எப்படி வேண்டுமானாலும் யாரை வைத்து வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×