என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    X

    தேக்வாண்டோ போட்டிைய முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி. அருகில் தேக்வாண்டோ பெட ரேசன் ஆப் இந்தியாவின் தலைவர் ஐசரி கணேஷ், புதுவை தேக்வாண்டோ சங்க நிறுவனர் ஸ்டாலின் உள்ளனர்.

    தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    • தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
    • தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியா வால் அங்கீகரிக்கப்பட்ட புதுவை உள்பட 35 மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    தேக்வாண்டோ ஆப் இந்தியாவின் 38-வது தேசிய அளவிலான சீனியர் நேஷனல் தேக்வாண்டோ போட்டிகள் புதுவை உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெறுகிறது.

    தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியா வால் அங்கீகரிக்கப்பட்ட புதுவை உள்பட 35 மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் பங்கேற்றனர்.

    தொடக்க நிகழ்ச்சியில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை போலீஸ் ஐ.ஜி.சந்திரன் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபரும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருமான புவனா புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். நேற்று 2-வது நாளாக நடந்த அனைத்து பிரிவுகளின் போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    தேக்வாண்டோ பெட ரேசன் ஆப் இந்தியாவின் தலைவர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் மனுல்கர் முன்னிலை வகித்தார். ஜேஸ்பீர் சிங்கில், ராக்கேஷ் குமார் பாண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க நிறுவனர் ஸ்டாலின், செயலாளர் மஞ்சுநாத், துணை தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் அரவிந்த், அஸ்வின், நந்தகுமார், உதயகுமார், அருள்கோஷ், அஸ்வினி, தனுஷ்பிரியா, பகத்சிங் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி யில் 36 மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கணைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    Next Story
    ×