என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
    • விழாவில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ., நலத்துறை செயலர் உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு செலுத்தி அரசு பராமரிப்பில் உள்ள 47 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அஞ்சலக புத்தகத்தை வழங்கினார்.

    துறையின் இணை இயக்குனர் அமுதா நன்றி கூறினார்.

    • உத்ரபிரதேசம், வாரணாசியில் மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் சார்பில் 5-வது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
    • இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் பொதுச்செயலாளர் வினோத்குமார் வழங்கினார்.

    புதுச்சேரி:

    உத்ரபிரதேசம், வாரணாசியில் மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் சார்பில் 5-வது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

    புதுவையில் இருந்து ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி ஊழியர் சுந்தரராமன், புதுவையை சேர்ந்த ஜெயமணி ஆகியோர் 35 வயது உடையவர்களுக்கான இறகு பந்துபோட்டியில் இரட்டையர் பிரிவில் விளையாடினர்.

    இறுதியில் மத்திய பிரதேசம், புதுவை அணிகள் மோதின.

    இதில் புதுவை அணி போராடி தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

    இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் பொதுச்செய லாளர் வினோத்குமார் வழங்கினார்.

    வெள்ளி பதக்கம் பெற்ற சுந்தரராமனை ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி டீன். டாக்டர் கொட்டூர், துணை முதல்வர் டாக்டர் ராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    • புதுவையின் குடிநீர் தேவைக்கு பயன்படுவது மட்டுமின்றி பறவைகள் சரணாலயமாகவும் ஊசுடு ஏரி திகழ்கிறது.
    • சமீப காலமாக ஊசுடு ஏரி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையின் மிகப்பெரிய ஏரியாக ஊசுடு ஏரி உள்ளது. புதுவையின் குடிநீர் தேவைக்கு பயன்படுவது மட்டுமின்றி பறவைகள் சரணாலயமாகவும் ஊசுடு ஏரி திகழ்கிறது.

    இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா வளர்ச்சிக்க ழகத்தின் சார்பில் படகு குழாமும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அமைதியான சூழலில் படகு சவாரி செய்து பறவைகளை கண்டுரசிப்பது வாடிக்கை.

    சமீப காலமாக ஊசுடு ஏரி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குருமாம்பேட் பாண்லே முதல் பத்துக்கண்ணு சந்திப்பு வரை தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு அவ்வழியே திருக்கனூர் செல்லும் பொதுமக்களிடம் ரவுடிகள் வழிப்பறி நடத்தி வருகின்றனர்.  நேரங்களில் இவ்வழியே செல்லவே அச்சப்பட வேண்டியுள்ளது.

    ஊசுடு ஏரியின் கரையோரத்தில் இரவில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் சமூக விரோதிகள் அவ்வழியே வருவோரிடம் தகராறில் ஈடுபடுவது, செல்போன், பணம், நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர். சமூகவிரோதிகளுக்குள் ஏற்படும் தகராறால் சட்ட ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்துக்கு சொந்தமான 3 படகுகளை சமூக விரோதிகள் குடிபோதையில் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அரசுக்கு வீண் பண விரயமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே புதுவை அரசு இப்பகுதியில் அனைத்து தெருவிளக்குகளையும் எரிய செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து இந்த சாலையை வெளிச்சம் மிகுந்த சாலையாக்க வேண்டும்.

    இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து சமூகவிரோதிகளை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஊசுடு ஏரிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளிடையே நிலவும் அச்சத்தை போக்க முடியும். மேட்டுப்பாளையம் வழியாக திருக்கனூர் செல்லும் மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக நல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

    • புதுவை மாநில நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லித்தோப்பு, மணவெளி, மங்கலம் ஆகிய தொகுதிகளில் 5 இடங்களில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
    • ஆயிரம் பேருக்கு மதிய உணவு, பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லித்தோப்பு, மணவெளி, மங்கலம் ஆகிய தொகுதிகளில் 5 இடங்களில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், 500 பெண்களுக்கு சேலைகள், 500 பேருக்கு அரிசி, 300 பேருக்கு சர்க்கரை 200 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ேமலும் ஆயிரம் பேருக்கு மதிய உணவு, பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் ஆகியவற்றையும் அவர் வழங்கினார். புதுவை மாநில செயலாளர் சரவணன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு கொண்டனர்.

    • ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சிக் குட்பட்ட கொம்பாக்கம் வார்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கொம்பாக்கம் பாலாஜி நகரில் ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறி யாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், ஊர் பொதுமக்கள் தேவநாதன், வேலு படையாட்சி, ஜெகன்மோகன், ஜனா, கந்தசாமி, வேல்முருகன், சக்திவேல், அழகிரி, பாஸ்கரன், கனகராஜ், தமிழரசன், மாரிமுத்து, சுரேஷ், ஜீவா, ரமேஷ், வெங்கடேசன், வரதன், சத்தியமூர்த்தி, தனுசு, அருண், தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் சோமு என்ற சோமசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராஜி, சபரி, திலகர், வேதாச்சலம், தங்கராசு, ஏழுமலை, ஹரி கிருஷ்ணன், மிலிட்டரி முருகன், வீரப்பன், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், பாலு, அஞ்சாபுலி, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அபிஷேகப்பாக்கம் வழியாக செல்லும் மடுகரை சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
    • இந்த விபத்துக்கு காரணம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தினால் நடந்ததாக தெரியவந்தது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக செல்லும் மடுகரை சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவும், அபிஷேகபாக்கம் பகுதிகளில் வளைவுகள் அதிகமாக இருப்பதாலும் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்துக்கு காரணம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தினால் நடந்ததாக தெரியவந்தது.

    இதனை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் நடவடிக்கை எடுத்தார். அதன்படி முதல் கட்டமாக அபிஷேகப்பாக்கம் பகுதியில் முக்கிய வளைவுகள் உள்ள 2 இடத்தில் குவி லென்ஸ் கொண்ட 2 பெரிய கண்ணாடிகள் இன்று அமைத்துள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர்கள் செஞ்சி வேல் ராஜசேகரன் ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் பலர் உடன் இருந்தனர்.

    கிராமப்புறத்தில் விபத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தெரிவித்தார்.

    எம்.வி.ஆர் மருத்துவ மையம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை கீழ்கூத்தாப்பாக்கம் அரசு பள்ளியில் நடத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே கீழ்கூத்தாப்பாக்கம் தென்னகரம் ஊராட்சி மன்றம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை எம்.வி.ஆர் மருத்துவ மையம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை கீழ்கூத்தாப்பாக்கம் அரசு பள்ளியில் நடத்தியது.

    மருத்துவ முகாமில், புதுவை பிரபல முதுநிலை பொது மருத்துவம் மற்றும் நீரழிவு நோய் நிபுணர் டாக்டர். எம்.ஆர். வித்யா தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கேற்று முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பொதுநல மருத்துவம், நீரழிவு நோய்க்கான சிறப்பு ஆலோசனை, குழந்தைகள் நல சிகிச்சை ஆலோசனை, சிறுநீர் மற்றும் சிறுநீர் பாதை பிரச்சனைகளுக்கான ஆலோசனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எலும்பு அடர்த்திக்கான ஸ்கேன் பரிசோதனை, சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்பு பரிசோதனை, உடல் எடை உணவியல் நிபுணர்களின் ஆலோசனை, பிசியோதெரபி ஆலோசனை வழங்கினர்.

    மேலும் டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

    முகாம் ஏற்பாட்டினை எம்.வி.ஆர். மருத்துவ மைய மேலாளர் தாஸ், ஊழியர்கள், கூத்தாப்பாக்கம் வக்கீல் வீரபத்திரன் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம் லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
    • முகாமில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு கூடோ தற்காப்பு கலை பற்றிய அறிமுக தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், குறித்து விளக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மாநில அளவிலான கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம் லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடத்த இந்த பயிற்சி முகாமை, புதுவை மாநில கூடோ சங்கம் மற்றும் அகில இந்திய கூடோ சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.

    மாநில கூடோ சங்க தலைவர் வளவன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தோஷ்குமார், சேர்மன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனியர் பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், செல்வம், சுரேஷ், அசோக், பாலச்சந்தர், செந்தில் வெங்கடேஷ், சுப்பிரமணி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    முகாமில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு கூடோ தற்காப்பு கலை பற்றிய அறிமுக தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், குறித்து விளக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    அகில இந்திய கூடோ சங்க பொருளாளர் ஜாஸ்மின் மக்வானா, சீனியர் பயிற்சியாளர் பிரியங் ராணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    முகாமில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் வருகிற மே மாதத்தில் நடக்க உள்ள அகில இந்திய கூடோ போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பிளாக் பெல்ட் ஆகியவற்றை அகில இந்திய கூடோ சங்கத்தின் பொருளாளர் ஜாஸ்மின் மக்வானா, புதுவை மாநில தலைவர் வளவன் ஆகியோர் வழங்கினார்.

    இணைச் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    • தேவநாதன் பின்பக்கமாக சென்று பெண்ணை கட்டியணைத்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.

    மதகடிப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண். கணவரை இழந்த இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    அவருக்கு கணவரின் சகோதரர் உதவி செய்து வந்தார். இதற்கிடையே கணவரின் சகோதரரை சந்திக்க அவரது நண்பரான எம்.என்.குப்பத்தை சேர்ந்த தேவநாதன்(27) என்பவர் அடிக்கடி வருவார்.

    அப்போது நண்பரின் தம்பி மனைவியை தவறான கண்ணோட்டத்தில் தேவநாதன் பார்த்து வந்தார். ஒருமுறை அந்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு தேவநாதன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பெண் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் தேவநாதன் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த பெண் தனது கணவரின் சகோதரர் இங்கு இல்லை என தெரிவித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது தேவநாதன் பின்பக்கமாக சென்று அந்த பெண்ணை கட்டியணைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். இதையடுத்து தேவநாதன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    இதையடுத்து அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.

    • புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் அறை 21-ந்தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    பக்தர்களால் அன்புடன் அன்னை, என்று அழைக்கப்படும் மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, பாரீஸில், துருக்கி எகிப்து யூத தம்பதியின் 2-வது குழந்தையாக பிறந்தார். 1914-ம் ஆண்டு புதுவையில் அரவிந்தரை சந்தித்து, ஆன்மீக பணியில் ஈடுபட்டார்.

    அதை தொடர்ந்து புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் நிறுவி 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்க அடிக்கல் நாட்டி பணியை தொடங்கினார்.

    அன்னை வாழ்ந்த காலத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள தனது அறை அருகில் இருக்கும் பால்கனியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு நின்று, பக்தர்களை ஆசிர்வதித்து தனது தினந்தோறும் பணியை தொடங்குவது வழக்கம்.

    வருகிற பிப்ரவரி 21-ந் தேதி அன்னையின் 145-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் ஆரோவில் நகரம் 55-ம் ஆண்டு விழாவையொட்டி புதுவை ஒயிட்டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், முதலில் ஆசிரம வாசிகளின் சிறப்பு தியானம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அன்னையின் அறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அன்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார்.
    • ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மாணவர்கள் தேர்வுக ளின் போது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க "பரிக்க்ஷா பே சர்ச்சா" என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

    இதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார். மேலும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான அவர்களின் அனுபவங்களையும் உதவிக் குறிப்புக ளையும் பகிர்ந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறார்.

    பிரதமர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி காணொளி காட்சி மூலம் மாணவர்களுடன் உரையாடினார்.

    இந்நிகழ்ச்சியை மையமாக கொண்டு மாணவர்களிடையே கலை மற்றும் ஓவியப் போட்டி ஜனவரி 20-ந் தேதி புதுவையில் நடைபெற்றது. ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

    புதுவையில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சுமார் 3000-க்கும் மேல் அரசு மற்றும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த கலை மற்றும் ஓவிய திறன் கொண்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 157 மாணவர்க ளுக்கு பரிசுகள், தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்) புத்தகம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஓட்டல் சற்குருவில் நடந்த இந்நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பா. ஜனதாகட்சியின் மாநில பொது செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    • மடுகரையை சேர்ந்த போலீஸ்காரர் மலையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுவை காவல்துறையில் பணிபுரியும் மற்ற போலீஸ்காரர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது39). இவர் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற நாகராஜ் அங்கு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோக சம்பவம் மற்ற போலீசாரின் மனதில் மறையாத நிலையில் புதுவையில் மேலும் ஒரு போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது பற்றிய விவரம் வருமாறு:-

    புதுவை நெட்டப்பாக்கம் அருகே மடுகரை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மலையராஜா (வயது48). இவர் மடுகரை மற்றும் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து கடந்த சில மாதங்களாக புதுவை போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகில் உள்ள காவல்கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சமீப காலமாக மலையராஜா நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மலையராஜாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மலையராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டின் பின்புறத்தில் உள்ள சிமெண்ட்டு சீட் போட்ட கூடாரத்தில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

    படுக்கையில் இருந்து வெளியே சென்ற கணவர் வெகுநேரமாக திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி பிரேமா வீட்டின் பின்புறத்துக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு பிரேமா அலறினார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தூக்கில் இருந்து மலையராஜாவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மலைய ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து அவரது மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்றுமுன்தினம் கோரிமேட்டில் போலீஸ்காரர் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட நிலையில் தற்போது மடுகரையை சேர்ந்த போலீஸ்காரர் மலையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுவை காவல்துறையில் பணிபுரியும் மற்ற போலீஸ்காரர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×