search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம்
    X

    கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு, அகில இந்திய கூடோ சங்கத்தின் பொருளாளர் ஜாஸ்மின் மக்வானா, புதுவை மாநில தலைவர் வளவன் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.

    கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம்

    • மாநில அளவிலான கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம் லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
    • முகாமில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு கூடோ தற்காப்பு கலை பற்றிய அறிமுக தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், குறித்து விளக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மாநில அளவிலான கூடோ தற்காப்பு கலை பயிற்சி முகாம் லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடத்த இந்த பயிற்சி முகாமை, புதுவை மாநில கூடோ சங்கம் மற்றும் அகில இந்திய கூடோ சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.

    மாநில கூடோ சங்க தலைவர் வளவன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தோஷ்குமார், சேர்மன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனியர் பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், செல்வம், சுரேஷ், அசோக், பாலச்சந்தர், செந்தில் வெங்கடேஷ், சுப்பிரமணி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    முகாமில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு கூடோ தற்காப்பு கலை பற்றிய அறிமுக தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், குறித்து விளக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    அகில இந்திய கூடோ சங்க பொருளாளர் ஜாஸ்மின் மக்வானா, சீனியர் பயிற்சியாளர் பிரியங் ராணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    முகாமில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் வருகிற மே மாதத்தில் நடக்க உள்ள அகில இந்திய கூடோ போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பிளாக் பெல்ட் ஆகியவற்றை அகில இந்திய கூடோ சங்கத்தின் பொருளாளர் ஜாஸ்மின் மக்வானா, புதுவை மாநில தலைவர் வளவன் ஆகியோர் வழங்கினார்.

    இணைச் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×