என் மலர்
புதுச்சேரி
- மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் வாயிலாக ஒரு நாள் கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- தனியார் நிறுவன அதிகாரி மணிமாறன் தீவனப்புல் பராமரிப்பு தீவனப் பொருட்களின் வகைகளை பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
புதுச்சேரி:
அரசு வேளாண் மற்றும் விவசாய நலத்துறை கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியகத்தின் சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் வாயிலாக ஒரு நாள் கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கி வரவேற்றார். கால்நடை டாக்டர் பிரீத்தா கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கையாளக்கூடிய உத்திகள் மற்றும் தீவன பராமரிப்பு மேலும் சினை பிடிக்காமல் இருக்கும் மாடுகளுக்கு மருத்துவம் எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கினார்.
தனியார் நிறுவன அதிகாரி மணிமாறன் தீவனப்புல் பராமரிப்பு தீவனப் பொருட்களின் வகைகளை பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். கால்நடை டாக்டர் செல்வமுத்து பால் உற்பத்தியை பெருக்குவதற்கு கால்நடை விவசாயிகள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் பற்றி விளக்கினார்.
இறுதியாக கிராம விரிவாக்க பணியாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவின் ஏற்பாடுகளை தப்பு சாமி செய்திருந்தார்.முகாமில் கால்நடை விவசாயிகளுக்கு ஒரு கிலோ சத்துமாவு இலவசமாக வழங்கப்பட்டது.
- நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது.
- சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச நகருக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்கா கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஜூலியன் என்பவர் புதுவை கடற்கரை சாலையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவரது கையில் வைத்திருந்த பேனரில், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களிடம் 10 நிமிடம் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற செய்து வேலை வழங்கி உணவு அளியுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு புறத்தில் நாம் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 100 பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது. சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுதொடர்பாக கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக நூதன பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவரை பொதுமக்கள் பாராட்டினர்.
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
- திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு தீவிரம் காட்டியது. இதுதொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மாவை சந்தித்தனர்.
- மொழி தெரியாத மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் புதுவையில் பணியமர்த்த வேண்டும் என மனு அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டியில் இயங்கி வரும் எல்.அண்ட்.டி. நிறுவனம் 2 மாதங்களாக தனது உற்பத்தியை எவ்வித காரணமும் இன்றி நிறுத்தி வைத்துள்ளது.
அங்கு பணிபுரிந்து வந்த 83 நிரந்தர தொழிலாளர்களை ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உட்பட பல்வேறு வட மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மாவை சந்தித்தனர்.
அப்போது, எவ்வித காரணமும் இன்றி மூடியுள்ள தொழிற்சாலையை மீண்டும் இயக்க வேண்டும். மொழி தெரியாத மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் புதுவையில் பணியமர்த்த வேண்டும் என மனு அளித்தனர்.
மனுவைப்பெற்ற தொழிலாளர் துறை செயலர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், துணைத் தலைவர்கள் சிவக்குமார், கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் சக்திவேல், செயலாளர் விஜயபாஸ்கர், துணை செயலாளர் ராஜசேகர் மற்றும் பா.ம.க. தொழிற்சங்க செயலாளர் குமார், பொருளாளர் கண்ணன், துணை தலைவர் சரவணன், துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சைன்ஸ் கல்லூரியில் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
- புதுவை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்துகொண்டு விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து ஜி20யின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.
புதுச்சேரி:
புதுவை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சைன்ஸ் கல்லூரி மற்றும் புதுவை நேரு யுவகேந்திரா இணைந்து மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியை நடத்தியது.
கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் மற்றும் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக புதுவை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்துகொண்டு விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து
ஜி20யின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். மேலும் கல்லூரியின் இளைஞர் மன்றம் அமைப்பினையும் தொடங்கி வைத்தார்.
புதுவை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பாகூர் தாசில்தார் பிரிதிவி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், புதுவை இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரப் பிரிவு உதவி பேராசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஜி 20 மாநாடுகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு டீன் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
முடிவில் புதுவை அலைடு ஹெல்த் சயின்ஸ் இயக்குனர் பொறுப்பு ஆண்ட்ரூ ஜான் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியினை கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் வளர்மதி, அனிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் இளைஞர் பாராளுமன்றம் விவாதங்கள் நடைபெற்றன.நேரு யுவகேந்திரா சார்பாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, நேரு யுவகேந்திரா குழு அமைப்பி னர், நாட்டு நலத்திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசூர்யா, தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சுருக்கு மடி வலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா என்றும் சோதனையிட்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
சுருக்கு மடிவலை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 12 நாட்டிகல் மைல் தாண்டியே வலையை பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடிக்கிறார்களா? என கடலோர காவல் நிலைய போலீசார் இன்று சோதனை செய்தனர்.
புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து வீராம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு, பனித்திட்டு, நரம்பை, மூர்த்திகுப்பம் வரை 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரை போலீசார் சென்று சோதனையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட நாட்களை தாண்டி சுருக்குமடி வலை பயன்படுத்தப்பட்டால் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தினார்கள்.
சுருக்கு மடி வலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்றும் சோதனையிட்டனர்.
இந்த சோதனை அடிக்கடி மேற்கொள்ளப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
- சமீப காலமாக பாலு தினமும் சென்டரிங் வேலை செய்து விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
- சித்ரா வீட்டுக்கு வந்த பாலு கணவரை விட்டு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்தார்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா (வயது34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு அவரது சொந்த ஊரான பச்சையாங்குப்பத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பழக்கம் இருந்து வந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே பாலுவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் பாலு அடிக்கடி சித்ரா வீட்டுக்கு வந்து செல்வார். அவரது குழந்தையை சித்ரா பராமரித்து வந்தார்.
சமீப காலமாக பாலு தினமும் சென்டரிங் வேலை செய்து விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சித்ரா வீட்டுக்கு வந்த பாலு கணவரை விட்டு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்தார். வேறு எங்கேயாவது சென்று சந்தோஷமாக வாழலாம் என பாலு கூறினார்.
இதற்கு சித்ரா சம்மதிக்கவில்லை. கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக கூறினார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை சித்ராவின் உடலில் ஊற்றி தீவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தன்னை உயிரோடு தீவைத்த நீயும் இருக்க கூடாது என்று பாலுவை வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமல் அவரை கட்டியணைத்தார். இதில் இருவரும் தீயில் கருகினர். உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
- கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகூர்:
புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 41). தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு தானம்பாளையம் பகுதியில் புதியமனை வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.
இவரது சொந்த ஊரான நல்லவாடு பகுதியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நடந்து வருகிறது. இதனால் வியாபாரம் முடிந்து தினமும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் திருவிழாவுக்கு சென்று வந்தார்.
அதுபோல் நேற்று கோவிலில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றதால் மாலை 6.00 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நல்லவாடு கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமியை தரிசித்து விட்டு இரவு 8.30 மணி அளவில் சத்தியமூர்த்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுகிட்டார்.
2 பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், தாலி சரடு என சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரோ மர்ம நபர்கள் தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி புகார் செய்தார். தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தவளக் குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி தூவி விட்டு மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
புதிய மனைப்பிரிவில் வீடு இருந்ததால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்
தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.
- புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் வீராம்பட்டினத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
- மீனவ மக்களுக்காக அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் வீராம்பட்டினத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் அன்பழகன் சிலைகளை திறந்து வைத்து, ஆயிரத்து 500-க்கும் மேற்ப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு சேலை, வேட்டி மற்றும் அரிசி வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
மீனவ மக்களுக்காக அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும். வருகிற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு மீனவ பஞ்சாயத்தார் முதல்- அமைச்சரை சந்தித்து அதிகப்படியான நிதி ஒதுக்க வேண்டும் என மனு கொடுக்க வேண்டும்.
முதல்- அமைச்சர் மீனவ மக்களுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அதில் ரூ 300 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், மீனவ மக்கள் போராட முன் வர வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் நிச்சயமாக அ.தி.மு.க. போட்டியிடும். அப்படி இல்லாவிட்டால் புதுவை முழுவதும் தனித்து போட்டியிடும்
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், இணை செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, வி.கே.மூர்த்தி, நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நகரச் செயலாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற ெசயலாளர் சிவாலய இளங்கோ, மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாப்புசாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாணவரணி செயலாளர் பிரதீப், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் கணபதி, சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப் பினர்கள் பாலன், செந்தில் முருகன், இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகு கழக செயலாளர்கள் ராஜா, கருணாநிதி, கமல்தாஸ், சம்பத், நடேசன், பாஸ்கரன், வார்டு செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பிள்ளைத்தோட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- அவரது மனைவி சுமதி உடனே கணவரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
புதுச்சேரி:
பிள்ளைத்தோட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுவை பிள்ளை தோட்டம் சின்னசந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜகிருஷ்ணன் (வயது42).
இவர் வில்லியனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சுமதி புதுவை அண்ணாசாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே ராஜகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ராஜகிருஷ்ணன் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுமதி உடனே கணவரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் உப்பளம் திப்புராயப்பேட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
- தொண்டை, எலும்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.
புதுச்சேரி:
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் உப்பளம் திப்புராயப்பேட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
முகாமை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
முகாமில் பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், கண்,தோல், இதயம், காது, மூக்கு, பல், தொண்டை, எலும்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.
மேலும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். மருத்துவ சிகிச்சை பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இலவச சர்க்கரை வழங்கப்பட்டது.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி. திருநாவுக்கரசு, மாநில துணை செயலாளர் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார்,
அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், உப்பளம் தொகுதி செயலாளர் துரை, வார்டு செயலாளர் செல்வம்,சக்திவேல், சுந்தரமூர்த்தி, விஜய், பன்னிர்,வேலு, பரமசிவம், சந்திரசேகர்,சசி, மதிவாணன், முருகன், ரமணன் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
- மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.
- கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.
கிராமப் பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ்,மேலாளர் வீரம்மாள், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






