என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து சாவு
- பிள்ளைத்தோட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- அவரது மனைவி சுமதி உடனே கணவரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
புதுச்சேரி:
பிள்ளைத்தோட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுவை பிள்ளை தோட்டம் சின்னசந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜகிருஷ்ணன் (வயது42).
இவர் வில்லியனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சுமதி புதுவை அண்ணாசாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே ராஜகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ராஜகிருஷ்ணன் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுமதி உடனே கணவரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






