என் மலர்

    புதுச்சேரி

    எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவுக்கு சிலை-அன்பழகன் திறந்து வைத்தார்
    X

    வீராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலிதா சிலைகளை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்த காட்சி.

    எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவுக்கு சிலை-அன்பழகன் திறந்து வைத்தார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் வீராம்பட்டினத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
    • மீனவ மக்களுக்காக அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் வீராம்பட்டினத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    சிலை திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார்.

    மாநில செயலாளர் அன்பழகன் சிலைகளை திறந்து வைத்து, ஆயிரத்து 500-க்கும் மேற்ப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு சேலை, வேட்டி மற்றும் அரிசி வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    மீனவ மக்களுக்காக அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும். வருகிற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு மீனவ பஞ்சாயத்தார் முதல்- அமைச்சரை சந்தித்து அதிகப்படியான நிதி ஒதுக்க வேண்டும் என மனு கொடுக்க வேண்டும்.

    முதல்- அமைச்சர் மீனவ மக்களுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அதில் ரூ 300 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், மீனவ மக்கள் போராட முன் வர வேண்டும்.

    சட்டமன்ற தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் நிச்சயமாக அ.தி.மு.க. போட்டியிடும். அப்படி இல்லாவிட்டால் புதுவை முழுவதும் தனித்து போட்டியிடும்

    இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், இணை செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, வி.கே.மூர்த்தி, நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நகரச் செயலாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற ெசயலாளர் சிவாலய இளங்கோ, மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாப்புசாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாணவரணி செயலாளர் பிரதீப், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் கணபதி, சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப் பினர்கள் பாலன், செந்தில் முருகன், இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகு கழக செயலாளர்கள் ராஜா, கருணாநிதி, கமல்தாஸ், சம்பத், நடேசன், பாஸ்கரன், வார்டு செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×