என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியின் 37-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • மாணவ- மாணவிகள் மற்றும் இலக்கிய மன்ற விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியின் 37-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் செல்வ கணபதி எம்.பி. தலைமை தாங்கினார். பள்ளி முதன்மை முதல்வர் பத்மா ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி முதல்வர் கீதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கக்காசு மற்றும் பரிசுகளை வழங்கினார். பொதுத்திறன் அடிப்படையில் பள்ளியில் எல்.கே.ஜி.முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கும், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ- மாணவிகள் மற்றும் இலக்கிய மன்ற விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை பூர்ணிமா நன்றி கூறினார்.

    • புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) ஆகியவை இணைந்து -பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் மகளிர் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.

    கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் வழிக்காட்டுதல் படி சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்ற நிறுவனர் டாக்டர் சர்மிளா நாகராஜன் நிர்வாக இயக்குனர் – மோனீஷ் கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்க்கண், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி நோக்கம் குறித்து கல்லூரி மாணவர்களுடன் விவரித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார். டாக்டர் மெய்யப்பன் மற்றும் டாக்டர் வைத்தீஸ்வரன் தலைமையில் செய்யப்பட்டது. 

    • உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.
    • மின்விசிறி, சில்வர் பாத்திரம், எல்.ஜி.பி. அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, மற்றும் 750 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் அன்பானந்தம், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கு கட்சி கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவ படத்திற்கும்,

    எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலையணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு தள்ளு வண்டி, தையல் மிஷன், கிரைண்டர், குக்கர், மிக்சி, மின்சார அடுப்பு, தவா வாணல், பில்டர் ஹீட்டர், மின்விசிறி, சில்வர் பாத்திரம், எல்.ஜி.பி. அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, மற்றும் 750 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வீரம்மாள், கணேசன், மகாதேவி, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், எம்.ஏ.கே. கருணாநிதி, கணேசன், நாகமணி, மூர்த்தி,

    காந்தி,கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், குமுதன், சித்தானந்தம், பாண்டுரங்கன், சிவாலய இளங்கோ, பாப்புசாமி, மருதமலையப்பன், பிரதீப், ராமசாமி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பொது மக்களுக்கு இனிப்பும், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், மோகன், விஸ்வநாதன், அந்துவான், குப்பன், மண்ணாங்கட்டி, தனலட்சுமி,ராதா, ஹரிகிருஷ்ணன், முனியாண்டி, கார்த்திக், விநாயகமூர்த்தி, ஜான், பஞ்சவர்ணம், பச்சையப்பன் , வினோத்குமார், பிரபா, எத்திராஜ், முரளிதரன், ஆறுமுகம், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதா பன்மொழி பேசக்கூடிய திறமைமிக்கவர். கருணாநிதியின் செயல்களை முறியடித்து, 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர்.
    • எடப்பாடி பழச்சாமி தான் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    புதுச்சேரி:

    உப்பளத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    ஜெயலலிதா பன்மொழி பேசக்கூடிய திறமைமிக்கவர். கருணாநிதியின் செயல்களை முறியடித்து, 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா ஆட்சியில் ஏழை மக்கள் பயன்பெறக்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களை நாட்டிற்கே எடுத்துக் காட்டாக கொண்டு வந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வை முடக்க ஸ்டாலின் சதிவேலை செய்தார். அதை முறியடித்து எடப்பாடி பழனிச்சாமி 5 ஆண்டு காலம் நல்ல ஆட்சி நடத்தினார்.

    நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோத முடியாது எனபன்னீர்செல்வம் போன்ற துரோகிகளை தி.மு.க. பயன்படுத்தியது. அவை அத்தனையும் நீதிமன்ற துணை யோடும் தொண்டர்களுடைய துணையோடும் எடப்பாடி பழனிசாமி முறியடித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் மூலம் பெற்றுள்ளார்.

    எடப்பாடி பழச்சாமி தான் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கட்சியினனுடைய துரோகிகளுக்கு இனி அ.தி.மு.க.வில் இடமில்லை. இந்த தீர்ப்பு என்பது 1½ கோடி தொண்டர்களுடைய விருப்பம். 1½ கோடி தொண்டர்களுடைய எண்ணத்தை இன்றைக்கு பிரதிபலிக்கும் விதத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது போல புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சி எதிர்காலத்தில் மலரும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. புதுவை மாநிலத்தில் நிச்சயமாக போட்டியிடும். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு சூளுரைக்க வேண்டும். ஜெயலலிதா பிறந்த நாளில் புதுவை மா நிலத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர சபதமேற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மருத்துவ முகாமினை ஓம்சக்தி சேகர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார்.
    • மகப்பேறு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், ஆகியவற்றுக்கு இலவசமாக பரிசோதனை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி புதுவை குயவர் பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள கீர்த்தி மகால் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமினை ஓம்சக்தி சேகர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மருத்துவம், காது,மூக்கு, தொண்டை,கண் சிகிச்சை,குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், ஆகியவற்றுக்கு இலவசமாக பரிசோதனை நடைபெற்றது.

    பொதுமக்கள் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அனை வருக்கும் மருந்து,மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.

    முகாமில் நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி, முருகதாஸ், மகேஸ்வரி, விஜயலட்சுமி, கோவிந்தம்மாள், மலை செல்வராஜ், சதாசிவம், சங்கர் உடையார்,முதலியார் பேட்டை பிர காஷ்,இருசப்பன், வெரோனிகா, முருகன், புகழ்பாரி, ராதாகிருஷ்ணன், சேகர், பாஸ்கர், வெங்கடேசன், அப்பாவு, நாக லோகநாதன், கலியபெருமாள், ஏம்பலம் கோவிந்தராஜ், காட்டுக்குப்பம் நடராஜன், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணையை பெற எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
    • இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணை மற்றும் விடுபட்ட 2 மற்றும் 3-ம் தவணைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு விரைந்து நிதியுதவி கிடைக்க எதிர்கட்சி தலைவர் சிவா நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி 23 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.26 லட்சத்து 60 ஆயிரம் அவர்களது பெயர்களில் வங்கிகளில் செலுத்தப்பட்டதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.

    வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில்குமார், ஆய்வாளர் இளங்கோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரில் ஸ்பார்க் 2023-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரில் ஸ்பார்க் 2023-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு மணக்குள விநாயகர் அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்பு ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    விழாவில் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், கல்லூரின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், முத்துலட்சுமி, கோபாலு, சிதம்பரம், முகமது யாசின், சந்திர சேகர் கல்லூரியின் வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ஸர் முதல்வர் மனோகரன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் 4500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எங்கள் திறமையை தமிழக மக்கள் கண்டு கொள்ளவில்லை, மத்திய அரசு அங்கீகரித்து கவர்னர் பதவி வழங்கியுள்ளது என கவர்னர் தமிழிசை கூறியுள்ளது முரண்பாடான தேவையற்ற கருத்து.
    • கட்சிக்காரருக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க வேண்டுமே என்ற காரணத்துக்காகத்தான் கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் திறமையை தமிழக மக்கள் கண்டு கொள்ளவில்லை, மத்திய அரசு அங்கீகரித்து கவர்னர் பதவி வழங்கியுள்ளது என கவர்னர் தமிழிசை கூறியுள்ளது முரண்பாடான தேவையற்ற கருத்து.

    பொறுப்பு கவர்னர் தமிழிசை தமிழகத்தில் 2 சட்டமன்ற தேர்தல்களிலும், 2 எம்.பி. தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

    இவரின் திறமையின் அடிப்படையில்தான் மத்திய அரசு கவர்னர் பதவியை அளித்துள்ளது என்று கூறுவது சரியல்ல. கட்சிக்காரருக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க வேண்டுமே என்ற காரணத்துக்காகத்தான் கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.

    மத்திய அரசு நியமனத்தை திறமையின் அடிப்படையில் நியமிப்பதாக தெரிய வில்லை. திறமையை பற்றி ஆதங்கம் கொள்ளும் கவர்னர் புதுவையில் திறமைக்கு மதிப்பு கொடுக்கிறாரா?

    நியமன உறுப்பினர் பதவிக்கோ, பத்ம விருதுக்கோ, திட்டக்குழுவுக்கோ புதுவையைச் சார்ந்த எல்லா வகையிலும் தகுதி மற்றும் திறமை உள்ளவரை இவர் மதிக்கவில்லை.இவருக்கு உண்மையில் திறமை இருந்தால், புதுவையின் சொத்தான மின் துறையை காப்பதிலும், 5 ராட்சத மதுபான ஆலைகள், மதுக்கடைகள் திறப்பதை தடுப்பதிலும், ரேஷன் கடைகளை திறப்பதிலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலும் காட்டி இருக்க வேண்டும்.

    எனவே இல்லாத திறமையைப் பற்றியும் மதிக்கப்படாத திறமையைப் பற்றியும் ஆதங்கப்படாமல் புதுவையின் உண்மையான ஊழல் அற்ற வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் வி.ஜ.பி. நகரில் உள்ள கூட்டுறவுசங்க பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
    • பாண்லே ஊழியர்கள், தொழிலாளர்களின் வாழ்வுரிமை, பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் வி.ஜ.பி. நகரில் உள்ள கூட்டுறவுசங்க பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

    சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரமேசு முன்னிலை வகித்தார். தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜெயக்குமார், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் சிவக்குமார், யூனியன் தலைவர் மோகன்தாஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாண்லே பால் பற்றாகுறையினை சீரமைக்க வேண்டும். நிர்வாகத்தை நஷ்டத்தில் தள்ளிய நிர்வாக அதிகாரி, இயக்குனர் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்லே ஊழியர்கள், தொழிலாளர்களின் வாழ்வு ரிமை, பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தடையின்றி பால் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்திலிருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    • புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் என்னும் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இம்மனுவை பா.ஜனதா கட்சி பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நிர்வாகிகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் என்னும் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் மூலம் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதன் அடிப்படையில் எந்தெந்த கிராமங்களுக்கு என்னென்ன வசதிகளை சிறப்பு கூறு நிதியின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற கோரிக்கை மனு பட்டியல் அணி சார்பில் தயாரிக்கப்பட்டது.

    இம்மனுவை பா.ஜனதா கட்சி பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நிர்வாகிகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் வழங்கினர்.

    மேலும் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான சுடுகாட்டு பாதை, மின் இணைப்புகள், சைடு வாய்க்கால்கள், நூலக வசதிகளை சிறப்பு கூறு இதில் மூலம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களுடனான ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இந்த மார்ச்

    31-ந் தேதிக்குள் உறுதி செய்யப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா உறுதி அளித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பட்டியலின் மாநில துணைத்தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், சுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர்கள் காமாட்சி, ராஜாராம், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் காத்தவராயன், நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வி. மணவௌி கிராமத்திற்குட்பட்ட மணக்குள விநாயகர் நகருக்கு ரூ. 2 லட்சத்து 7 ஆயிரம் என ரூ. 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மண்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி அந்தந்த நகரில் நடந்தது.
    • அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மண்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கொம்யூனுக்குட்பட்ட ஒதியம்பட்டு கிராமத்திற்குட்பட்ட ரமேஷ் நகரில் ரூ. 4 லட்சத்து 61 ஆயிரம், ரங்கசாமி நகரில் ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் செலவில் மண்சாலை மற்றும் வி. மணவௌி கிராமத்திற்குட்பட்ட மணக்குள விநாயகர் நகருக்கு ரூ. 2 லட்சத்து 7 ஆயிரம் என ரூ. 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மண்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி அந்தந்த நகரில் நடந்தது.

    வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மண்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டப்பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப் பொறியாளர் இராமன், மணவௌி தர்மராஜ், சபாபதி, தட்சிணாமூர்த்தி, பாலகுரு, ஹரி, வாசுதேவன், கலியபெருமாள், சுப்புராயன், முருகன், ஒதியம்பட்டு மூர்த்தி, வேலவன், கந்தன், விசு, ஏழுமலை.

    தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி துணைச் செயலாளர் அங்காளன், ஜலால், அக்பர், சபரி, தட்சிணாமூர்த்தி, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியன், ஏழுமலை, முருகன், காளி, செல்வம், வெங்கடேசன், ராஜேந்திரன், தயாளன், அன்புநிதி, யோகானந்தம், பாலு, பாலமுருகன், விஜயபாலன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி புதுவை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
    • இந்த மருத்துவ முகாமை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு நாளை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி புதுவை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.

    அதன் ஒரு நிகழ்ச்சியாக புதுவை மாநில அ.தி.மு.க. மற்றும் புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து புதுவை நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இந்த மருத்துவ முகாமை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்து சிகிச்சை அளிப்பதோடு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ×