என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
இலவச மருத்துவ முகாம்-ஓம் சக்தி சேகர் ஏற்பாடு
- தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி புதுவை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
- இந்த மருத்துவ முகாமை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு நாளை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி புதுவை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
அதன் ஒரு நிகழ்ச்சியாக புதுவை மாநில அ.தி.மு.க. மற்றும் புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து புதுவை நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமை அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்து சிகிச்சை அளிப்பதோடு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
Next Story






