என் மலர்
புதுச்சேரி
- குருசுகுப்பத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
குருசுகுப்பத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை குருசுகுப்பம் மேட்டுதெரு பகுதியில் ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்தும் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிர காசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் லாஸ்பேட்டை ஜிஞ்ஜர் ஓட்டல் பின்புறமுள்ள அர்ச்சுணன் தெருவை சேர்ந்த அருண்(வயது27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர்.
- பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தன்னம்பிக்கையோடு தேர்வை சந்திக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
- நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியை ஆல்பர்ட் ரமனா வரவேற்று பேசினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடந்தது.
பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் மேல்நிலை ப்பள்ளி மாணவிகள் தன்ன ம்பிக்கை யோடு தேர்வை சந்திக்க ஆலோசனை வழங்கப்ப ட்டது.
கருத்தரங்கிற்கு திட்ட அலுவலர் ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியை ஆல்பர்ட் ரமனா வரவேற்று பேசினார்.
தாகூர் கலைக்கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் தேர்வும் தன்னம்பிக்கையும் என்ற தலைப்பி்ல் சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் தங்கள் கருத்துகளை பதிவு செய்த மாணவிகளுக்கு பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் பரிசாக வழங்கினார்.
முடிவில் திட்ட அலுவலர் டாக்டர் குமரன் நன்றி கூறினார்.
- தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை.
- பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள்.
புதுச்சேரி:
அழிவின் விளிம்பிலிருந்து அன்னை தமிழைக் காப்பதற்காக டாக்டர் ராமதாஸ் 8 நாள் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் 3-ம் நாள் பரப்புரை கூட்டம் புதுவை கம்பன் கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே. மணி தலைமை தாங்கினார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார், பொறுப்பாளரும் பா.ம.க. மாநில அமைப்பாளருமான கணபதி வரவேற்றார்.
சென்னையை விட புதுவையில் தமிழ் சங்கங்கள் அதிகம், அதற்காக புதுவை தமிழ் அறிஞர்களை பாராட்டுகிறேன். புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல்களை படிக்கும்போது நமக்கு உத்வேகம் வரும், அதுபோல் பாரதியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களது பொய் வழக்குகளால் அவர் 10 ஆண்டு காலம் புதுவையில் தங்கியிருந்தார்.
அப்போதுதான் குயில்பாட்டு, பெண் விடுதலை பாடல்கள் ஆகியவற்றை பாடினார். பாரதியார் சுதந்திர பற்றை வளர்த்தார்.
பாரதிதாசன் தமிழ் பற்றை வளர்த்தார். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் பிற மொழிகலப்பு குறைவு தனித்தமிழ் இயக்கங்கள் தோன்றிய முன்னோடியான இடம் புதுவை. அதனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழை மீட்க அறிஞர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை. அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.
திரைப்படங்களிலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது, முழுமையான தமிழ் வசனங்களுடன் திரைப்படங்கள் வர வேண்டும். தமிழை வளர்க்க நாங்கள் பாடுபட்டதை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், தமிழ் இசையை வளர்க்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
பிரான்ஸ் நாட்டிற்குள் ஒரே ஒரு ஆங்கில சொல் நுழைந்துவிட்டது. பிரெஞ்ச் இளைஞர்கள் கொதித்து போனார்கள் அந்த சால் தேங்க்யூ அதற்கு பதிலாக மெர்சி என கூறி நன்றியை தெரிவிக்கின்றனர். தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள், ஆனால் அதற்கு 15 நாட்களுக்கு முன்பே அதை தெரிவித்துவிடுங்கள்.
பெயர் பலகையில் எப்படி எழுத வேண்டும் என வழிகாட்டுங்கள் அதற்கு பிறகும் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு மை பூச வருகிறேன், பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள். நாம் பிற மொழிக்கு எதிரி அல்ல. தமிழை மீட்போம்.
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் வடிவேலு, ஜெயக்குமார், மதியழகன், பிரபாகரன் தேவமணி, புதுவை தமிழ் சங்க துணைத்தலைவர் ஆதிகேசவன், புதுவை தமிழ் இலக்கிய ஆய்வுக் கழக நிறுவனர் வேல்முருகன், தமிழர் தேசிய முன்னனி துரை மாலிறையன், தனித்தமிழ் கழக சீனு அரிமாப் பாண்டியன், தனித்தமிழியக்கம் தமிழ்மல்லன், தமிழர் தேசிய முன்னனி தமிழ்மணி, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் பூங்கொடி பராங்குசம் , பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி கலைமாமணி ராசன் பாவலர் பயிற்சி பட்டறை இலக்கியன், என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட ஏராளமான தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
- பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார்.
- தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கடந்த 12 ஆண்டாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.
கடந்த மாதம் கவர்னர் தமிழிசை தலைமையில் திட்டக்குழு கூடி 2023-24-ம் ஆண்டுக்கு பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை நிர்ணயம் செய்தது.
இதற்கான அனுமதிகோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதி புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.
தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.
13-ந் தேதி காலை 9.45 மணிக்கு நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
கவர்னர் உரைக்கு பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என முடிவு செய்யும். சட்டசபை நீண்டநாட்கள் நடைபெறும். வித்தியாசமான சட்டமன்றமாக இருக்கும். 10 சதவீத அரசு அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறிவந்தேன்.
அதேநிலை தற்போதும் நீடிக்கிறது. இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் உரிய தண்டனை அளிக்கப்படும். திட்டங்களை கெடுப்பது உள்ளூர் பி.சி.எஸ். அதிகாரிகள்தான். அவர்கள் திட்டங்களுக்கான கோப்புகளில் எதிர்மறையான கருத்துகளை எழுதுகின்றனர். இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் தண்டனை அளிக்கப்படும்.
3 அரசு துறைகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை செலவு செய்துள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மார்ச் மாதம் இறுதிக்குள் நிதியை முழுமையாக செலவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். சிறப்புக்கூறு நிதியும் முழுமையாக செலவிடவில்லை. இதையும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை ரோடியர் மில் தெருவில் அரசு சார்பில் 3 நாள் வேளாண் விழா நடைபெற்றது.
- விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை ரோடியர் மில் தெருவில் அரசு சார்பில் 3 நாள் வேளாண் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மலர் அலங்காரத்தில் புதுவை திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி சைமா சைனாப் முதலிடமும், மற்றொரு மாணவியான கோபிகா தானிய ரங்கோலி பிரிவில் 2-ம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு விரிவுரையாளர் தேவகுமாரி வழிகாட்டியாக இருந்து போட்டியில் பங்கு பெற செய்தார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளியின் துணை முதல்வர் கலாவதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
- இந்திய தேசிய அளவிலான கர்லிங் போட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மர்கில் நடைபெற்றது.
- வீரர்களுக்கு இன்ஸ்பெக்டர் இனியன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
புதுச்சேரி:
இந்திய தேசிய அளவிலான கர்லிங் போட்டி கடந்த 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மர்கில் நடைபெற்றது. இதில் புதுவை வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் புதுவையை சேர்ந்த ஷினிவாஸ், தேவதர்ஷினி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்கள் கர்லிங் சங்க கவுரவ தலைவர் மாஸ்டர் வினோத் தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு இன்ஸ்பெக்டர் இனியன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின் போது புதுவை கர்லிங் பயிற்சியாளர்கள் ஹேமா, வசந்த் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொருளாளர் ஜெயஸ்டூ செய்திருந்தார்.
- புதுவை பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு என்ஜினீயர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சிறப்பு தனி அதிகாரி புகழேந்திக்கு கடந்த 2-ந் தேதி வெளியிட்ட ஆணையை வாபஸ் பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு என்ஜினீயர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் எழில்வண்ணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ராமன், அன்பழகன் கண்டன உரையாற்றினர்.
சிறப்பு தனி அதிகாரி புகழேந்திக்கு கடந்த 2-ந் தேதி வெளியிட்ட ஆணையை வாபஸ் பெற வேண்டும். காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பதவிகளை நிரப்ப வேண்டும்.
சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 5 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்குகளை பைசல் செய்ய வேண்டும். அனைத்து பிரிவு பொறியாளர்களின் பணி நிரந்தரம், சீனியாரிட்டியை வெளியிட வேண்டும். முறையான மாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் சமுதாய நலக்கூடம் மிகவும் சேதமடைந்திருந்தது.
- புதுவை நகராட்சி மூலம் புதிதாக நவீன வசதியுடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் சமுதாய நலக்கூடம் மிகவும் சேதமடைந்திருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முயற்சியால் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் புதுமையுடன் கூடிய ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சி நகர்ப்புற முதலீட்டு திட்டத்தின் கீழ் புதுவை நகராட்சி மூலம் புதிதாக நவீன வசதியுடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரகாஷ்குமார் எம்.எம்.ஏ, ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி, கலெக்டர் மணிகண்டன், உள்ளாட்சித்துறை செயலர் ஜவகர், இயக்குனர் ரவிதீப்சிங், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொ றியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம், ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், மலர்மன்னன், வைத்திகுப்பம், குருசுகுப்பம் மீனவ பஞ்சாயத்தார், வாழைக்குளம், சின்னையாபுரம் ஊர் பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
- கிரிக்கெட் அசோசியே ஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் துத்திப்பட்டில் உள்ள மைதானத்தில் அகாடமி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- போட்டியில் மொத்தம் 583 ரன்கள் எடுத்து தொடர் நாயகனாக தேர்வானார்.
புதுச்சேரி:
கிரிக்கெட் அசோசியே ஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் துத்திப்பட்டில் உள்ள மைதானத்தில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான 30 ஓவர் இண்டர் அகாடமி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்றது.
இதில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. இந்த அணியில் விளையாடிய பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவன் டி.எஸ். சஞ்சய் 6 போட்டியில் மொத்தம் 583 ரன்கள் எடுத்து தொடர் நாயகனாக தேர்வானார்.
மேலும் சிக்னேச்சர் கிரிக்கெட் அகாடமிக்கு எதிரான ஆட்டத்தில் 102 பந்துகளில் 213 ரன்கள் எடுத்து இரட்டை சதமும் நேயம் கிரிக்கெட் அகாடமிக்கு எதிரான ஆட்டத்தில் 94 பந்துகளில் 181 ரன்களும் எடுத்து மாணவன் சஞ்சய் இந்த 2 ஆட்டத்திலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். மேலும் 4 போட்டிகளில் ஆட்ட நாயனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற மாணவனை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டி வாழ்த்தினார்.
- மாணவியின் இந்த படைப்புக்கு புதுவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்தது.
- சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
புதுச்சேரி:
புதுவை வில்லிய னூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தீபிகா.
இவரது அறிவியல் ஆசிரியை அனுசுயா வழிகாட்டுத லோடு தொழிலா ளர்கள் எளிதாக சுமை தூக்குவதற்கான கருவியை உருவாக்கியுள்ளார்.மாணவியின் இந்த படைப்புக்கு புதுவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் தீபிகாவின் படைப்பு புதுவை மாநில அளவில் 3-வது பரிசை வென்றது. இதனையொட்டி மாணவிக்கு பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சணாமூர்த்தி தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
இதுகுறித்து மாணவி தீபிகா கூறியதாவது:-
சுமை தூக்கும் தொழிலா ளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அதிக கனமான பொருட்களை தூக்கும் போது காயமடைகின்றனர். தசை, எலும்பு கோளாறு, கழுத்து வலி, தலை மற்றும் கண் அசைவு கோளாறு, முதுகெலும்பு பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
மிகப்பெரிய அல்லது அதிக எடையுள்ள சுமைகளை சுமப்பதாலும் ஏற்படும் காயங்கள் மற்றும் சுளுக்கு ஆகியவை தொழிலாளர்களுக்கு பொதுவான ஆபத்துகளாகும்.
எனவே, முதுகு மற்றும் தலையில் அதிக எடையை சுமந்து செல்லும் தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் விதமாக எளிதாக சுமை தூக்கும் கருவியை வடிவமைத்தேன்.
கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், துறை முகங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும்.
இது மடிக்கக்கூடியது மற்றும் பணியிடத்துக்கு எடுத்துச் செல்ல எளிதானது. குறைந்த உள்கட்டமைப்புடன் எளிதாக தயாரிக்கலாம்.
என்னுடைய படைப்புக்கு மாநில அளவிலும், தென்னி ந்திய அளவிலும் நடந்த அறிவியல் கண்காட்சியில் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உலகத் தாய்மொழி யொட்டி ராதே அறக்க ட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வுப் பேரணி நடந்தது.
- கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி வந்தனர்.
புதுச்சேரி:
உலகத் தாய்மொழி யொட்டி ராதே அறக்க ட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வுப் பேரணி நடந்தது.
காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணிக்கு ராதே அறக்கட்டளை நிறுவனர் என்ஜினீயர் தேவதாஸ் தலைமை வகித்தார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் தமிழ்நெஞ்சன், புதுவை வலைப்பதிவர் சிறகத் தலைவர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சந்திர பிரியங்கா பேரணியை தொடங்கி வைத்தார். தாகூர் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் இளங்கோ, கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் வேங்கடேசன், கண்ணதாசன் கழக நிறுவுநர் வக்கீல் கோவிந்தராசு, இலக்கியன், துறை.மாலிறையன், வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தினர்.
பேரணியில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன், தமிழர் களம் அழகர், திராவிடர் கழகத் தலைவர், வீரமணி, மண்டலத் தலைவர் அன்பரசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள், கலைஞர்கள் சங்கப் பொறுப்பாளர் ராமச்சந்திரன்,மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜா, தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தமிழ்மணி, தன்னுரிமை கழகத் தலைவர் சடகோபன், அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்.சண்முகம் தலைமையில் 20 தவில், 20 நாதசுர கலைஞர்கள் மேளதாள இசை முழங்கினர்.
தமிழ்த்தாய், ஓளவையார், திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் வேடமணிந்து அணிவகுத்து நாடகக் கலைஞர்கள் வந்தனர். கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழிப்பு ணர்வு பதாகைகள் ஏந்தி வந்தனர். தமிழ் முழக்கங்கள் கொண்ட துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்க ப்பட்டன. பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணி கடற்கரை சாலை காந்தி சிலையில் நிறைவடைந்தது.
- ரோலர்ஸ்கேட்டிங் வீரரான இவர் விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானபோட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.
- தற்போது ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மெர்லின் தனம்அற்புதம். இவர் பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
ரோலர்ஸ்கேட்டிங் வீரரான இவர் விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ேபாட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.
வருகிற செப்டம்ரில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி மெர்லின்தனம் அற்புதம் கூறும்போது, 3-ம் வகுப்பு படிக்கும்போது ரோலர்ஸ்கேட்டிங் விளையாட தந்தை ஊக்கம் அளித்தார். தனியார் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறேன்.
இந்தியளவில் 4 தங்கம், 3வெள்ளி பதக்கம் பெற்றுள்ளேன். தற்போது ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டியல் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.
மாணவி மெர்லின் தனம் அற்புதம் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார், உடல்கல்வி இயக்குனர் தனலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.






