என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளி மாணவிகளுக்கு முதலிடம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார்
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமி முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காட்சி.

    அரசு பள்ளி மாணவிகளுக்கு முதலிடம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார்

    • புதுவை ரோடியர் மில் தெருவில் அரசு சார்பில் 3 நாள் வேளாண் விழா நடைபெற்றது.
    • விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரோடியர் மில் தெருவில் அரசு சார்பில் 3 நாள் வேளாண் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் மலர் அலங்காரத்தில் புதுவை திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி சைமா சைனாப் முதலிடமும், மற்றொரு மாணவியான கோபிகா தானிய ரங்கோலி பிரிவில் 2-ம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவிகளுக்கு விரிவுரையாளர் தேவகுமாரி வழிகாட்டியாக இருந்து போட்டியில் பங்கு பெற செய்தார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளியின் துணை முதல்வர் கலாவதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×