என் மலர்
புதுச்சேரி

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு என்ஜினீயர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆர்ப்பாட்டம்
- புதுவை பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு என்ஜினீயர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சிறப்பு தனி அதிகாரி புகழேந்திக்கு கடந்த 2-ந் தேதி வெளியிட்ட ஆணையை வாபஸ் பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு என்ஜினீயர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் எழில்வண்ணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ராமன், அன்பழகன் கண்டன உரையாற்றினர்.
சிறப்பு தனி அதிகாரி புகழேந்திக்கு கடந்த 2-ந் தேதி வெளியிட்ட ஆணையை வாபஸ் பெற வேண்டும். காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பதவிகளை நிரப்ப வேண்டும்.
சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 5 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்குகளை பைசல் செய்ய வேண்டும். அனைத்து பிரிவு பொறியாளர்களின் பணி நிரந்தரம், சீனியாரிட்டியை வெளியிட வேண்டும். முறையான மாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.






