என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இரட்டை சதம் அடித்து ஆல்பா பள்ளி மாணவர் சாதனை
    X

    கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்துசாதனை படைத்த ஆல்பா பள்ளி மாணவரை பள்ளி இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்து பாராட்டிய காட்சி.

    இரட்டை சதம் அடித்து ஆல்பா பள்ளி மாணவர் சாதனை

    • கிரிக்கெட் அசோசியே ஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் துத்திப்பட்டில் உள்ள மைதானத்தில் அகாடமி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் மொத்தம் 583 ரன்கள் எடுத்து தொடர் நாயகனாக தேர்வானார்.

    புதுச்சேரி:

    கிரிக்கெட் அசோசியே ஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் துத்திப்பட்டில் உள்ள மைதானத்தில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான 30 ஓவர் இண்டர் அகாடமி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்றது.

    இதில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. இந்த அணியில் விளையாடிய பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவன் டி.எஸ். சஞ்சய் 6 போட்டியில் மொத்தம் 583 ரன்கள் எடுத்து தொடர் நாயகனாக தேர்வானார்.

    மேலும் சிக்னேச்சர் கிரிக்கெட் அகாடமிக்கு எதிரான ஆட்டத்தில் 102 பந்துகளில் 213 ரன்கள் எடுத்து இரட்டை சதமும் நேயம் கிரிக்கெட் அகாடமிக்கு எதிரான ஆட்டத்தில் 94 பந்துகளில் 181 ரன்களும் எடுத்து மாணவன் சஞ்சய் இந்த 2 ஆட்டத்திலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். மேலும் 4 போட்டிகளில் ஆட்ட நாயனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

    வெற்றி பெற்ற மாணவனை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டி வாழ்த்தினார்.

    Next Story
    ×