என் மலர்
புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
மணக்குள விநாயகர் எம்.ஐ.டி. கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு நிகழ்ச்சி
- புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) ஆகியவை இணைந்து -பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் மகளிர் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.
கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் வழிக்காட்டுதல் படி சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்ற நிறுவனர் டாக்டர் சர்மிளா நாகராஜன் நிர்வாக இயக்குனர் – மோனீஷ் கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்க்கண், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி நோக்கம் குறித்து கல்லூரி மாணவர்களுடன் விவரித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார். டாக்டர் மெய்யப்பன் மற்றும் டாக்டர் வைத்தீஸ்வரன் தலைமையில் செய்யப்பட்டது.






