என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அ.தி.மு.க. நிச்சயம் போட்டியிடும்-அன்பழகன் அறிவிப்பு
- ஜெயலலிதா பன்மொழி பேசக்கூடிய திறமைமிக்கவர். கருணாநிதியின் செயல்களை முறியடித்து, 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர்.
- எடப்பாடி பழச்சாமி தான் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
புதுச்சேரி:
உப்பளத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
ஜெயலலிதா பன்மொழி பேசக்கூடிய திறமைமிக்கவர். கருணாநிதியின் செயல்களை முறியடித்து, 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா ஆட்சியில் ஏழை மக்கள் பயன்பெறக்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களை நாட்டிற்கே எடுத்துக் காட்டாக கொண்டு வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வை முடக்க ஸ்டாலின் சதிவேலை செய்தார். அதை முறியடித்து எடப்பாடி பழனிச்சாமி 5 ஆண்டு காலம் நல்ல ஆட்சி நடத்தினார்.
நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோத முடியாது எனபன்னீர்செல்வம் போன்ற துரோகிகளை தி.மு.க. பயன்படுத்தியது. அவை அத்தனையும் நீதிமன்ற துணை யோடும் தொண்டர்களுடைய துணையோடும் எடப்பாடி பழனிசாமி முறியடித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் மூலம் பெற்றுள்ளார்.
எடப்பாடி பழச்சாமி தான் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கட்சியினனுடைய துரோகிகளுக்கு இனி அ.தி.மு.க.வில் இடமில்லை. இந்த தீர்ப்பு என்பது 1½ கோடி தொண்டர்களுடைய விருப்பம். 1½ கோடி தொண்டர்களுடைய எண்ணத்தை இன்றைக்கு பிரதிபலிக்கும் விதத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது போல புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சி எதிர்காலத்தில் மலரும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. புதுவை மாநிலத்தில் நிச்சயமாக போட்டியிடும். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு சூளுரைக்க வேண்டும். ஜெயலலிதா பிறந்த நாளில் புதுவை மா நிலத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர சபதமேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.






