என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிறப்பு மருத்துவ முகாம்-ஓம்சக்தி சேகர் தொடங்கி வைத்தார்
    X

    ஜெயலலிதா 75-வது பிறந்த நாளையொட்டி ஓம்சக்தி சேகர் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    சிறப்பு மருத்துவ முகாம்-ஓம்சக்தி சேகர் தொடங்கி வைத்தார்

    • மருத்துவ முகாமினை ஓம்சக்தி சேகர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார்.
    • மகப்பேறு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், ஆகியவற்றுக்கு இலவசமாக பரிசோதனை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி புதுவை குயவர் பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள கீர்த்தி மகால் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமினை ஓம்சக்தி சேகர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மருத்துவம், காது,மூக்கு, தொண்டை,கண் சிகிச்சை,குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், ஆகியவற்றுக்கு இலவசமாக பரிசோதனை நடைபெற்றது.

    பொதுமக்கள் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அனை வருக்கும் மருந்து,மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.

    முகாமில் நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி, முருகதாஸ், மகேஸ்வரி, விஜயலட்சுமி, கோவிந்தம்மாள், மலை செல்வராஜ், சதாசிவம், சங்கர் உடையார்,முதலியார் பேட்டை பிர காஷ்,இருசப்பன், வெரோனிகா, முருகன், புகழ்பாரி, ராதாகிருஷ்ணன், சேகர், பாஸ்கர், வெங்கடேசன், அப்பாவு, நாக லோகநாதன், கலியபெருமாள், ஏம்பலம் கோவிந்தராஜ், காட்டுக்குப்பம் நடராஜன், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×