என் மலர்
புதுச்சேரி
- ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்க வேண்டும். சைபர் க்ரைமில் எப்.ஐ.ஆர். போட அதிகாரம் வழங்க வேண்டும்.
- போலீஸ் சூப்பிரண்டு பதவி வெளியூரை சேர்ந்வர்க ளுக்கே கொடுக்கப்படுகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.களை மதிப்பதில்லை.
புதுச்சேரி:
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கல்யாணசுந்தரம் பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்க வேண்டும். சைபர் க்ரைமில் எப்.ஐ.ஆர். போட அதிகாரம் வழங்க வேண்டும். காவலர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
காவல்துறை உயரதி காரிகள் வசதியானர்கள், வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு செய்வதில்லை. போலீஸ் சூப்பிரண்டு பதவி வெளியூரை சேர்ந்வர்க ளுக்கே கொடுக்கப்படுகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.களை மதிப்பதில்லை.
புதிய கல்விக்கொள்கை யை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர் பஸ் தரமில்லாமல் உள்ளது. பி.ஆர்.டி.சி. மூலமாக இ-பஸ் வாங்கி இயக்க வேண்டும்.
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள ஆட்சிக்குழுவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. கள் உறுப்பினர்களாக இல்லை. புதுவைக்கு வரும் வெளிமாநில அதிகாரிகளும் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துங்கள்.
தண்டனை காலம் முடித்து சிறையில் இருக்கும் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். சிறை காவலர்களுக்கு பதவி உயர்வும், இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு கல்யாண சுந்தரம் பேசினார்.
- புதுவை குடிமைப்பணி அதிகாரியாக பதவி உயர்வை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கியுள்ளார்.
- கலை பண்பாட்டு துறை இயக்குனராக பணியாற்றி வரும் கலியபெருமாள் கூடுதல் பொறுப்பாக பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இளங்கோவன், ராஜு, கலியபெருமாள், வருவாய்த்துறையில் தாசில்தாராக பணியாற்றி வந்த குமரன் மற்றும் சவுந்தரி ஆகிய 5 பேருக்கும் புதுவை குடிமைப்பணி அதிகாரியாக பதவி உயர்வை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கியுள்ளார்.
பதவி உயர்வு பெற்ற இளங்கோவன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனராகவும், ராஜு காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், சமூக நலத்துறை இயக்குனராக பணியாற்றியவரும் குமரன் பதவி உயர்வு பெற்ற நிலையில் அவருக்கு கூடுதலாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராகவும், கலை பண்பாட்டு துறை இயக்குனராக பணியாற்றி வரும் கலியபெருமாள் கூடுதல் பொறுப்பாக பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் பதவி உயர்வு பெற்ற சவுந்தரி புதுவை மாநில பேரிடர் மேலாண்மை முகமையும் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் இதற்கான ஆணையை தலைமை செயலர் ராஜீவ் வர்மா மேற்பார்வையில் அரசு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
- ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாராவில் 45-வது அகில இந்திய மாணவர்க–ளுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
- இவர்களுக்கு வழியனுப்பும் விழாவுக்கு சங்க வாழ்நாள் தலைவர், முன்னாள் அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாராவில் 45-வது அகில இந்திய மாணவர்க–ளுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 27-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்கிது.
இதில் புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் சார்பில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வழியனுப்பும் விழாவுக்கு சங்க வாழ்நாள் தலைவர், முன்னாள் அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்தார். முன்னாள் வீரர் கொரிதம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சீருடை வழங்கினர்.
ஹேண்ட்பால் சங்க பொதுச்செயலாளரும், ஒலிம்பிக் சங்க பொருளாளருமான நாராயணசாமி,. உழவர்கரை மாவட்ட தலைவர் சசிக்குமார், புதுவை மாவட்ட இணை செய–லாளர் சிவா, அரியாங்குப்பம் மாவட்ட செயலாளர் ழான்பியர், வில்லியனூர் மாவட்ட செயலாளர் கருணைபிர–காசம், அருள், விஜயராஜா ஆகியோர் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்த––னர்.
அணிகளின் பயிற்சியாள–ராக டேனியல், காப்பாளராக வீரன் உடன் சென்றனர்.
- புதுவை அருகே வில்லியனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குருபாதம் லிப்ட் ஆப்ரேட்டர். இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் குருபாதத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குருபாதம் (வயது47). லிப்ட் ஆப்ரேட்டர். இவரது மனைவி குணவதி (வயது38). விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு மீனாட்சி சுந்தரம்(வயது16), ஆதித்யா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
குருபாதத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். குணவதி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குணவதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த குருபாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் குருபாதத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே குருபாதம் இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி குணவதி வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை வர்த்தக மையத்தில் ஐ.சி.டீ. அகாடமியின் பிரிட்ஜ் 2023-ன் 50-வது விழா நடைபெற்றது.
- மாநில ஐ.சி.டீ. அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பால சந்திரன் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.
புதுச்சேரி:
சென்னை வர்த்தக மையத்தில் ஐ.சி.டீ அகாடமியின் பிரிட்ஜ் 2023-ன் 50-வது விழா நடைபெற்றது.
விழாவில் கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மென் பொருள் பாட் சமர்ப்பித்தலில் தேசிய அளவில் 8-வது இடத்துக்கான விருது, பெஸ்ட் பார்ட்டிசிபேஷன், நேஷனல் லெவல் கோஆர்டினேட்டர் என்ற விருது கணினி அறிவியல் துறை பேராசிரியர் வரலட்சுமிக்கு வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ்நாடு மாநில ஐ.சி.டீ. அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பால சந்திரன் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.
விருதுகள் பெற்றவர் களை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், கல்லூரி முதல்வருமான மலர்கண், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் பாராட்டினார்.
- பிம்ஸ் மருத்துவ மனையில், தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
- கருத்தரங்கில் தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ மனையில், தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு உலக சுகாதார இயக்கத்தின் புதுவை கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாயிரா பானு கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். புதுவை மாநில சுகாதார துறையின் இைண இயக்குனர் தடுப்பூசி பிரிவு டாக்டர் ராஜாம்பாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் இயக்குனர் அனில் ஜே.பூர்த்தி தலைமை வகித்தார். அறிவியல் கருத்தரங்கு துறையின் தலைவர் டாக்டர். சஜீவ் ஸ்லேட்டர் முன்னிலை வகித்தார்.
இந்த கருத்தரங்கில் தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கில், போலியோ, தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, தொண்டை அடைப்பான் நோய், கக்குவான் இருமல், தசை விறைப்பு நோய்களை கண்காணிக்கும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது.
இதில் உலகளாவிய தடுப்பூசி அட்டவணை மற்றும் அதில் மேம்படுத்தப்பட்டுள்ள சமீப சமுதாய மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு நன்றிரையாற்றினார்.
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ப-வடிவ வாய்க்கால் முழுவதும் சாக்கடையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன் தி.மு.க. கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளித்திருந்தார்.
- தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஒத்தவாடை வீதி, பாரதிமில் ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை இருபுறமும் உள்ள யூ-ட்ரைன் (ப-வடிவ வாய்க்கால்) முழுவதும் சாக்கடையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன் தி.மு.க. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளித்திருந்தார்.
இது சம்பந்தமாக தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்து தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினரின் துரித நடவடிக்கையால் தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அப்பணி மேற்கொள்ளும் போது டாக்டர் அம்பேத்கர் சாலையில் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்கள் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
உடனே அப்பகுதிக்கு நிர்வாகிகள் உடன் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து சாலைகளை ஆய்வு மேற்கொண்டார், அப்பொழுது இளநிலை பொறியாளர் ராமன் அழைத்து வந்து வாய்க்காலில் கழிவுநீர் போகாமல் இருக்கும் இடங்களையும், மண்கொட்டி வாய்க்கால் அடைத்து இருக்கும் அனைத்து இடங்களையும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. காண்பித்தார்.
நேரில் சென்று பணிகளை பார்வையிட்டப் பின்னர் அதிகாரிகளிடம் வேலைகளை முழுமையாக பாரபட்சம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி முழுமையாக மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வண்ணம் தூர் வாரி செயல் புரிய வேண்டும் என்று அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்,
அவருடன் அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி தங்கவேல், இளைஞர் அணி விநாயகம், அம்மா ஆறுமுகம், சுரேஷ், கிளை செயலாளர்கள் செல்வம்,ராகேஷ், தி.மு.க. நிர்வாகிகள் ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் சங்கராபரணி நதிக்கரையோரம் பிரசித்தி பெற்ற காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
- பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் சங்கராபரணி நதிக்கரையோரம் பிரசித்தி பெற்ற காமாட்சி மீனாட்சி உடனுறை
ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு சங்கராபரணி மேஷ குரு ஆதி புஷ்கரணி விழா அடுத்த மாதம் 22-ந் தேதி தொடங்கி, மே மாதம் 3-ந்தே தி வரை நடக்கிறது.
இந்த விழா குறித்து பொதுமக்கள், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புஷ்கரணி விழாவுக்கான
'லோகோ'-வை முதல்-அமை ச்சர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், நாக.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- தென் மாநிலத்திற்கான போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது.
- முன்னதாக அமித்ஷாவை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து வழங்கினார்.
புதுச்சேரி:
தென் மாநிலத்திற்கான போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புதுவை மாநிலம் சார்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.
முன்னதாக அமித்ஷாவை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து வழங்கினார்.
தொடர்ந்து நடந்த மாநாட்டில், அமைச்சர் நமச்சிவாயம் புதுவையின் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு ஒழுங்கு நடவடிக்கையில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.
- புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
- வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-
புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்த பதவிக்கு வெளியில் இருந்து பொறியாளரை நியமிப்பதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.
பொதுப்பணி த்துறை யிலேயே பல ஆண்டுகள் பணியாற்றிய தகுதி வாய்ந்த பொறியாளர்கள் இருக்கும் நிலையில் வெளியில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
தலைமை பொறியாளர் பதவிக்கு பொதுப்பணி துறையில் உள்ள மூத்த பொறியாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூறுவதை புரிந்து செயல்பட மாட்டார்கள்.
எனவே உள்ளூர் நிலைமையை நன்கு அறிந்த பொதுப்பணித்துறை சார்ந்த மூத்த பொறியாளரையே தலைமை பொறியாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.
- இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி குழுமத் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர் இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், போராசிரியர் ஏழுமலை, உதவி பேராசிரியர் டாக்டர் நடராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முடிவில் உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன்னெடுக்கும் கொள்கை திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக தலைமை செயலகம் இருக்க வேண்டும்.
- செயல்படாத அதிகாரிகள் மீது சபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரின் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன்னெடுக்கும் கொள்கை திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக தலைமை செயலகம் இருக்க வேண்டும்.
ஆனால், கவர்னருடன் இணைந்து அமைச்சரவை முடிவுக்கும், திட்டங்களுக்கும் முரணாகவே தலைமை செயலகம் செயல்பட்டு வருவது அன்றாட சட்டமன்ற நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது. தலைமைச் செயலரும், ஐ.ஏ.எஸ். செயலாளர்களும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
நிதிச் செயலர் தன்னுடைய அதிகாரத்தை காட்ட மாநில வளரச்சியை முடக்கிப் போடுகிறார். செயல்படாத அதிகாரிகள் மீது சபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை அரசு மறந்துவிட்டது. உள்ளாட்சி ஊழியர்களுக்கு நேரிடையாக அரசு சம்பளம் வழங்க வேண்டும். நில அளவைத் துறை மற்றும் நகரக் குழுமம் மிகப் பெரி செல்வந்தர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
போலி பத்திரப் பதிவுகள் அதிகரித்துள்ளன. இதனை வரன்முறைப்படுத்த வேண்டும். போலிப் பத்திரப் பதிவு சார்பதிவாளருக்கு தெரியாமல் நடக்காது. அதுபோன்று நடக்கும் போது ஏதாவது ஒரு சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் போலியாக பத்திரப் பதிவு செய்வோர் அஞ்சி இருப்பார்கள்.
இவ்வாறு சிவா பேசினார்.






