search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ப-வடிவ வாய்க்கால் முழுவதும் சாக்கடையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன் தி.மு.க. கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளித்திருந்தார்.
    • தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஒத்தவாடை வீதி, பாரதிமில் ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை இருபுறமும் உள்ள யூ-ட்ரைன் (ப-வடிவ வாய்க்கால்) முழுவதும் சாக்கடையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன் தி.மு.க. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளித்திருந்தார்.

    இது சம்பந்தமாக தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்து தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினரின் துரித நடவடிக்கையால் தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    அப்பணி மேற்கொள்ளும் போது டாக்டர் அம்பேத்கர் சாலையில் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்கள் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

    உடனே அப்பகுதிக்கு நிர்வாகிகள் உடன் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து சாலைகளை ஆய்வு மேற்கொண்டார், அப்பொழுது இளநிலை பொறியாளர் ராமன் அழைத்து வந்து வாய்க்காலில் கழிவுநீர் போகாமல் இருக்கும் இடங்களையும், மண்கொட்டி வாய்க்கால் அடைத்து இருக்கும் அனைத்து இடங்களையும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. காண்பித்தார்.

    நேரில் சென்று பணிகளை பார்வையிட்டப் பின்னர் அதிகாரிகளிடம் வேலைகளை முழுமையாக பாரபட்சம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி முழுமையாக மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வண்ணம் தூர் வாரி செயல் புரிய வேண்டும் என்று அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்,

    அவருடன் அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி தங்கவேல், இளைஞர் அணி விநாயகம், அம்மா ஆறுமுகம், சுரேஷ், கிளை செயலாளர்கள் செல்வம்,ராகேஷ், தி.மு.க. நிர்வாகிகள் ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×