என் மலர்
புதுச்சேரி
- கண் ஒளியல் பிரிவு சார்பில் மேம்படுத்தபட்ட லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு நடத்தப்பட்டது.
- ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் மிஷ்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறு படைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் கண் ஒளியியல் பிரிவில் மேம்படுத்தபட்ட லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சென்னை கோர் இனவேஷன் நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ்வரி, ஆவடி ஐ ஆப்டோமெட்ரி மருத்துவமனையின் இயக்குனர் சவிதா, ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் மிஷ்ரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இப்பயிலரங்கில் ஜிப்மர் , புதுவை சமுதாயக் கல்லூரி, சென்னை சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி, புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கண் ஒளியியல் பிரிவு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கண் ஒளியியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் தமிழ் சுடர், புதுவை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கண் ஒளியியல் பிரிவு ஒருங்கி ணைப்பாளர், துணை பேராசிரியர் வெண்ணிலா, நிர்வாக அதிகாரி சந்துரு, கண் ஒளியியல் துறையின் விரிவுரையாளர்கள் ஐயம்மா, அன்புநிலவன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மயிலம் கல்வி குழுமத்தின் ஒர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரியில் 2-வது தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.
புதுச்சேரி:
மயிலம் கல்வி குழுமத்தின் ஒர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரியில் 2-வது தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் தொடக்க விழா மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜ ராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்புரை ஆற்றினார். மயிலம் கல்வி குழுமத்தில் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார் முன்னதாக தமிழ்நாடு கிளை பயிற்சி பெற்ற செவிலியர் சங்க செயலாளர் மற்றும் விக்னேஷ் செவிலியர் கல்லூரியின் முதல்வருமான விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவின் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி முதல்வர் முத்தமிழ்செல்வி, பேராசிரியர் பிரியதர்ஷினி, விக்னேஷ் செவிலியர் கல்லூரி பேராசிரியர் ஜெயலட்சுமி, பால்ஸ் கல்லூரி, லதா அபேல், லட்சுமி நாராயணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் மதர் தெரசா கல்லூரி பேராசிரியர் நந்தினி ஆகியோர் தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்கத்தின் சிறப்புகள் குறித்து பேசினர்.
இப்பயிற்சி வகுப்பில் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவமனை செவிலியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். விழா முடிவில் மயிலம் செவிலியர் கல்லூரி இணை பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.
- புதுவை மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
- மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படும் 15 கிலோ அரிசி 30கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 100 சதவீதம் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், 75 சதவீதம் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 40 சதவீதம் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படும் 15 கிலோ அரிசி 30கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை முற்றிலும் நீக்கி அரசாணை வெளியிட வேண்டும்.
இக்கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2-ல் எல் வடிவ வாய்க்கால் மேம்படுத்தும் பணி நேதாஜி நகர் வார்டில் நடைபெற்று வருகிறது.
- பணியினை நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2-ல் எல் வடிவ வாய்க்கால் மேம்படுத்தும் பணி நேதாஜி நகர் வார்டில் நடைபெற்று வருகிறது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சட்டமன்ற நிதியின் கீழ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.அப்பணி தற்பொழுது 80 சதவீதம் நிறைவேறும் நிலையில் உள்ளது. பணியினை நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பொழுது விடுபட்ட பணியினை தொகுதி மக்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்.
உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், செழியன், ரகுமான் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாசிக்கில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
- பாசிக் தலைமை அலுவலகம் எதிரே 12-வது நாள் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாசிக்கில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 113 மாதம் சம்பளம் வழங்கவில்லை.
இதை கண்டித்து சம்பளம் வழங்க வலியுறுத்தியும், பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தக்கோரியும் ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாசிக் தலைமை அலுவலகம் எதிரே 12-வது நாள் போராட்டம் நடந்தது. இதில் ஊழியர்கள் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், கவுரவத் தலைவர் அபிஷேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தாராசு, மகேந்திரன், மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
- வீட்டின் பீரோவில் இருந்த ரூ.38 லட்சம் பணம், 82 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
- அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் எப்போதும் பணம் இருக்கும் என ரியாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி(60), அ.தி.மு.க. நிர்வாகி. இவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 3 நபர்கள் அவரிடம் ஒரு முகவரியை கேட்டு விசாரித்தனர். அதற்கு கருணாநிதி பதிலளித்த போது, 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து, அவரது வீட்டின் முதல் மாடிக்கு அழைத்து சென்றனர்.
அவரை மிரட்டி, வீட்டின் பீரோவில் இருந்த ரூ.38 லட்சம் பணம், 82 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
தகவலறிந்த கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஸ்வாதி சிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.
தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டு, போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரின் முகம் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், கொள்ளையர்களின் மூளையாக கிருஷ்ணகுமார் என்பவர் செயல்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்கு உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள ரியாஸ் என்பவர் கிருஷ்ணகுமாரிடம் தகவல் கொடுத்துள்ளார். அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் எப்போதும் பணம் இருக்கும் என ரியாஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 2 மாதமாக கொள்ளையடிக்க திட்டமிட்டு கருணாநிதியை பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதன்பின் கொள்ளையர்கள் ஒன்றாக அமர்ந்து மதுஅருந்தி திட்டம் தீட்டியுள்ளனர்.
இதன்படி சம்பவத்தன்று முகவரி விசாரிப்பது போல விசாரித்து பின் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர் என தெரியவந்தது.
இதையடுத்து சீனியர் எஸ்.பி. நாராசைதன்யா உத்தரவின்பேரில் 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான கிருஷ்ணகுமார், வெற்றிவேல், மார்க்கெட் கார்த்திக், மெக்கானிக் கார்த்தி, சையது ரியாஸ், ஆனந்து, ஸ்டாலின், முகமது ஆசிக் அலி, ஜான், மணி ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
இத்தகவலை போலீஸ் சூப்பிரெண்டு சுவாதி சிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் ரொக்கம், ஒரு இண்டிகா கார், செயின், மோதிரம் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள், 6 செல்போன்கள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.
- குஜராத் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
புதுச்சேரி:
குஜராத் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதிய பஸ்நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை வகித்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் வக்கீல் மருதுபாண்டி, தனுசு, வேல்முருகன், பஞ்சகாந்தி, சாந்தி, செல்வநாதன், சிலம்பு, கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.
பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்னதாக நேற்று நள்ளிரவில் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமையில் காங்கிரசார் காந்தி சிலைக்கு கீழ் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதேபோல காங்கிரசார் புதுவை, காரைக்காலில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- புதுவை மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் பெண் நீதிபதி பணியாற்றி வருகிறார்.
- தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகளை சட்டம், இயற்கை நியதி, சமூக நீதி அடிப்படையில் நீதி பரிபாலனம் செய்வதில் பலவீனத்தை ஏற்படுத்து வதாக மாநில குழு கவலை தெரிவிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில சி.ஐ.டி.யூ. மாநில செயலளார் சீனு வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் பெண் நீதிபதி பணியாற்றி வருகிறார். இவர் செஞ்சியை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் புதுவைக்கு குடி பெயர்ந்து இங்கேயே சட்டம் பயின்று இங்கேயே மாஜிஸ்தி ரேட்டாக தேர்வாகி தற்போது மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார்கள்.இவர் 5 ஆண்டுகள் புதுவை நீதித்துறையிலேயே தொடர்வது நியாயம் இல்லை.
தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகளை சட்டம், இயற்கை நியதி, சமூக நீதி அடிப்படையில் நீதி பரிபாலனம் செய்வதில் பலவீனத்தை ஏற்படுத்து வதாக மாநில குழு கவலை தெரிவிக்கிறது.
தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இதுவரை வழங்கப்பட்டுள்ள இவரது தீர்ப்புகளை ஆய்வு செய்தால் இதன் உண்மை தன்மை வெளிப்படும். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் சாதாரண தொழிலாளர்கள்
தங்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தால் மட்டுமே வழங்க முடியும் என நம்புகிறார்கள்.
எனவே, புதுவை அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் தலையிட்டு, புதுவை தொழி லாளர் நீதிமன்றம் மற்றும் தொழில் தீர்ப்பாயத்திற்கு பொருத்தமான நீதிபதியை நியமித்து, தொழிலா ளர்களின் நம்பிக்கையை பாதுகாத்து, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
நீதித்துறையில் காலியாக உள்ள மாஜிஸ்திரேட், மாவட்ட நீதிபதி காலி பணியிடங்களை புதுவை மாநில வக்கீல்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் வசந்தி திருநங்கை. இவர் அரியாங்குப்பம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார்.
- பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் வசந்தி(37), திருநங்கை. இவர் அரியாங்குப்பம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 3 காவலர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர். அவர்கள் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.
இதில் காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்த திருநங்கைகள், காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தகவலறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா திருநங்கைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினார். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார்.இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
- சேவாதளம் ரங்கநாதன், கிராம தலைவர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் பெரும்திரளாய் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய மோடி அரசை கண்டித்து அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் காங்கேயன், வட்டார தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மாநில செயலாளர் சூசைராஜ், மாநில மீனவர் அணி தலைவர் பாஸ்கரன், பி.சி.சி. அன்புமணி, சிறப்பு அழைப்பாளர்கள் குகன், வக்கீல் விநாயகமூர்த்தி, சாமிநாதன், இளைஞர் காங்கிரஸ் சசிகுமார், மகிளா காங்கிரஸ் பொன்னி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ ரத்தினம், குருமூர்த்தி, கோவிந்தன், சேவாதளம் ரங்கநாதன், கிராம தலைவர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் பெரும்திரளாய் கலந்து கொண்டனர்.
- புதுவை திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் புஷ்கரணி விழா அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த விழாவினை சிறப்பாக நடத்த அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அரசு செயலாளர்கள் உதயகுமார், ஜவகர், முத்தம்மா, போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் புஷ்கரணி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொருளாளர் இளங்கோவன், ஆகியோர் கவர்னர், அமைச்சர், அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர்.
- பாரதியார் பல்கலைக்கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று பேராசிரியராக பணிபுரிந்து வரும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொருளாளர் இளங்கோவன், தொகுதி தலைவர் சுந்தரவடிவேல், சந்துரு, அன்பரசன் ஆகியோர் கவர்னர், அமைச்சர், அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று பேராசிரியராக பணிபுரிந்து வரும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
குறுகிய கால ஒப்பந்தம் ஒப்பந்த பேராசிரியர்களாக பணிபுரிந்து வரும் பேராசிரியர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும்.
பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். குறுகிய கால பேராசிரியர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தனர்.






