என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Level Seminar"

    • எதிர்கால மருந்துகள் ஆராய்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஜே.எஸ் .எஸ் பார்மசி கல்லூரியில் எதிர்கால மருந்துகள் ஆராய்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஜே.எஸ்.எஸ் கல்லூரியின் முதல்வர் தனபால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மருந்தாக்கியல் துறை தலைவர் கவுதமராஜன் கருத்தரங்கம் குறித்து மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

    பேராசிரியர் சின்னச்சாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். இதில் டாக்டர் மோனிகா, மெடோபார்ம் பிரைவேட், லிமிடெட் தலைமை அதிகாரி, சபாபதி, ஜே.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமத்தின் துணை தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர். மதுசூதன் புரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மருந்தாக்கியல் துறை கல்லூரி ஆசிரியர்கள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாப் லவ்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நன்றி கூறினார்.

    • மயிலம் கல்வி குழுமத்தின் ஒர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரியில் 2-வது தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    மயிலம் கல்வி குழுமத்தின் ஒர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரியில் 2-வது தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    இக்கருத்தரங்கின் தொடக்க விழா மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜ ராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்புரை ஆற்றினார். மயிலம் கல்வி குழுமத்தில் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார் முன்னதாக தமிழ்நாடு கிளை பயிற்சி பெற்ற செவிலியர் சங்க செயலாளர் மற்றும் விக்னேஷ் செவிலியர் கல்லூரியின் முதல்வருமான விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவின் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி முதல்வர் முத்தமிழ்செல்வி, பேராசிரியர் பிரியதர்ஷினி, விக்னேஷ் செவிலியர் கல்லூரி பேராசிரியர் ஜெயலட்சுமி, பால்ஸ் கல்லூரி, லதா அபேல், லட்சுமி நாராயணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் மதர் தெரசா கல்லூரி பேராசிரியர் நந்தினி ஆகியோர் தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்கத்தின் சிறப்புகள் குறித்து பேசினர்.

    இப்பயிற்சி வகுப்பில் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவமனை செவிலியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். விழா முடிவில் மயிலம் செவிலியர் கல்லூரி இணை பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.

    ×