என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
    X

    ஊட்டி ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

    • எதிர்கால மருந்துகள் ஆராய்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஜே.எஸ் .எஸ் பார்மசி கல்லூரியில் எதிர்கால மருந்துகள் ஆராய்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஜே.எஸ்.எஸ் கல்லூரியின் முதல்வர் தனபால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மருந்தாக்கியல் துறை தலைவர் கவுதமராஜன் கருத்தரங்கம் குறித்து மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

    பேராசிரியர் சின்னச்சாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். இதில் டாக்டர் மோனிகா, மெடோபார்ம் பிரைவேட், லிமிடெட் தலைமை அதிகாரி, சபாபதி, ஜே.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமத்தின் துணை தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர். மதுசூதன் புரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மருந்தாக்கியல் துறை கல்லூரி ஆசிரியர்கள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாப் லவ்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நன்றி கூறினார்.

    Next Story
    ×