என் மலர்
புதுச்சேரி
- புதுவை அரும்பார்த்தபுரம் புது தெருவை சேர்ந்தவர் மணிமாலா என்ற மணிமேகலை. இவரது கணவர் கார்த்திகேயன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
- கலையரசன் மற்றும் அவரது நண்பர்களான ஜெ.ஜெ.நகரை சேர்ந்த மாடசாமி மற்றும் லேம்பர் சரவணன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர்களுடன் தக்ககுட்டை சுடுகாடு அருகே மது குடித்து கொண்டிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்த புரம் புது தெருவை சேர்ந்தவர் மணிமாலா என்ற மணிமேகலை(வயது39). இவரது கணவர் கார்த்தி
கேயன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகள் கலைவாணிக்கும் திருமணமாகி பெரிய காட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.
மணிமேகலையுடன் மற்ற இரு மகன்களும், ஒரு மகளும் வசித்து வருகின்றனர். இளைய மகன் கலையரசனுக்கும், பக்கத்து வீட்டாருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இதனால் கலையரசன் இங்கு இருந்தால் மீண்டும் தகராறு ஏற்படும் என நினைத்து மணிமேகலை கலையரசனை நெற்குன்றத் தில் உள்ள அவரது சகோதரி மகாநதி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கலையரசன் மற்றும் அவரது நண்பர்களான ஜெ.ஜெ.நகரை சேர்ந்த மாடசாமி மற்றும் லேம்பர் சரவணன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர்களுடன் தக்ககுட்டை சுடுகாடு அருகே மது குடித்து கொண்டி ருந்தனர். இதையடுத்து கலையரசனுக்கும் மாடசாமி மற்றும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து வந்த மணிமேகலை கலை யரசனை அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்க வில்லை.
பின்னர் விசாரித்த போது தக்ககுட்டையில் உள்ள ஒரு குளத்தில் யாரோ குதித்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிமேகலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் தீயணைப்பு துறையினர் கலையரசனின் உடலை குளத்தில் இருந்து மீட்டனர். இதைய டுத்து மணிமேகலை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பின்னர் போலீசார் மாடசாமி மற்றும் மணிகண்டன் தாக்கியதில் கலையரசன் பயந்து போய் குளத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.
ஆழ்கடல் அழகை ரசிக்க நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தற்போது இதற்கு மாற்றாக செமிசப் மெரின்' என் றழைக்கப்படும் விசைப் படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கலாம்.
கடலை காணும் வகையில் இரு புறமும் நீர் புகாத கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் செல்லும் போது படகில் கீழடுக்கு 1.4 மீட்டர் அளவில் ஆழ்கடலில் பயணிப்பதால் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் அரிய வகை நீர் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.
இவ்வகை படகுகளில் செல்ல, பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த படகுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம், உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு தயாரித்து வருகிறது. சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் 16 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இதில், மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்கலாம். ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் செல்லும்போது படகு ஆடாமல் பயணிக்க இருபுறமும் இறக்கை போன்ற அமைப்புடன் படகு கட்டப்பட்டு வருவதால் இதன் பெயர் 'டிரை மரான்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
- குடிமை பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நல சங்கம் இணைந்து நடத்தியது.
- சிறந்த சுய உதவி குழு பெண்களுக்கு நினைவு பரிசு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப துணிப்பையினை வழங்கினார்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உலக நுகர்வோர் தினத்தையொட்டி வாகன பிரச்சாரம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை குடிமை பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நல சங்கம் இணைந்து நடத்தியது.
நிகழ்ச்சியை ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் புதுவை அரசு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நுகர்வோர் கையேடு, சிறந்த சுய உதவி குழு பெண்களுக்கு நினைவு பரிசு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப துணிப்பையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சங்கத் தலைவர் நாராயணன் , சங்கத் துணைத் தலைவர் பாரதி ஆகியோர் செய்திருந்தார்.
இதில் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நலசங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலுக்கு பெரிய அளவிலான கிராம தெய்வ சிலைகள் உருவாக்கப்படுகிறது.
புதுச்சேரி:
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பெரியசாமி கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு தனி கட்டிடமோ கல் சிற்பங்கள் எதுவும் கிடையாது. மணல் சிற்பங்கள் மட்டுமே சிறிய அளவில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த கோவிலுக்கு பெரிய அளவிலான கிராம தெய்வ சிலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த சிலைகளை புதுவை வில்லியனூர் டெரகோட்டா கலைஞர் முனுசாமி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர்
ஓராண்டாக எந்திரங்கள் உதவி இல்லாமல் கைளை பயன்படுத்தி மட்டுமே உருவிக்கியுள்ளனர். 25 அடி உயரத்தில் 100 டன் மண் கொண்டு வைக்கோல், இரும்பு, அலுமினியம், தாமிரம் போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 800 டிகிரியில் சிற்பங்கள் சுடு வைக்கப்படும். ஆனால் இந்த சிற்பங்கள் அனைத்தும் 1200 டிகிரி வேக வைத்துள்ளனர்.
இதனால் கோவில் இருக்கும் பகுதியில் இடி விழுந்தாலும் இந்த சிலைகள் தாங்கி பூமிக்குள் செலுத்தும். பெரியசாமி, செல்லியம்மாள், விநாயகர், ஆற்றடியார், கிணத்தடியார், சிங்கமலையான், பொன்னுசாமி, நாடசன்னியாசி என கிராம தெய்வங்களின் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- காரைக்கால் அரசலாற்றில் உள்ள மீன்பிடி விசைப்படகு செல்லும் வழித்தடத்தில் பாறைகளை அகற்றுதல் மற்றும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது.
- ரூ.33 லட்சம் மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
காரைக்கால் அர சலாற்றில் உள்ள மீன்பிடி விசைப்படகு செல்லும் வழித்தடத்தில் பாறைகளை அகற்றுதல் மற்றும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் அமைத்தல் ஆகிய 2 பணிகளுக்கான நிதியானது மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ள மேற்கண்ட பணிகளுக்கான பூமி பூஜை பொதுப் பணி துறை நீர் பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு மூலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.
அதே சமயம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், திருமுருகன், நிரவி, தியாகராஜன், துணை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், முதன்மை பொறியாளர் சத்திய மூர்த்தி, மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணி, கண்கா ணிப்பு பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் வீரசெல்வம், துணை இயக்கு னர்கள் சவுந்தரபாண்டியன், ஷாஜீமா மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அரசலாற்றில் உள்ள மீன்விசைப்படகு செல்லும் வழித்தடத்திலுள்ள பாறைகளை அகற்றுத லுக்கான திட்ட மதிப்பு கான்கிரீட் தரைத்தளம் அமைத்தலுக்கான திட்ட மதிப்பு ரூ.33 லட்சம் மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
- புதுவை முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- மேலும் வருகிற 3-ந் தேதி கோவிலில் 12 மணிக்கு மேல் ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி 28-ம் ஆண்டு ராமநவமி உற்சவம் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
உற்சவம் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவ நாட்களில் பெருமாளுக்கு காலை, மாலையில் விசேஷ திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் அலங்காரமும், பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.
மேலும் வருகிற 3-ந் தேதி கோவிலில் காலை 12 மணிக்கு மேல் ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் கும்ப பூஜை, பூர்ணாஹூதி அதன் பிறகு மங்களாசாசனம், சாற்றுமுறை ஆகியவை நடைபெறுகின்றன.
முன்னதாக 2-ந் தேதி 6 மணிக்கு மேல் அனுச்சை, கும்ப பிரதிஷ்டை ஹோமம், பூர்ணாஹூதி, சாத்துமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில் கைங்கரிய சபா செய்து வருகிறது.
- புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உள்ளாட்சித் துறை முடுக்கிவிட்டுள்ளது.
- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அரசு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உள்ளாட்சித் துறை முடுக்கிவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை துல்லியமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நகராட்சி, கொம்யூன் சட்டத்தில் உள்ளாட்சி துறை திருத்தங்களை செய்துள்ளது.
கடந்த ஜனவரியில் புதுவையின் 30 தொகுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதை வார்டுவாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அரசு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக படிவம் 20-ஐ உள்ளாட்சித்துறை அறிமுகம் செய்ய உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இடமாறுதலுக்கும் ஆதார் எண் கோரப்படும். புதுவையில் 74.61 சதவீதத்தினர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
ஆனால் மத்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆதார் எண் வழங்க சட்டத்தில் இடமில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடம் மீண்டும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வேண்டிய நிலை உள்ளது.
மத்திய, மாநில தேர்தல் ஆணையம் இணைந்துசெயல்பட்டால் இந்த பணிகள் எளிதாகும். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
- நெல்லித்தோப்பு வட்டார காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது.
- பேரணியாக சென்ற ராஜிவ்காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜனதா விற்கு எதிராக கோஷமிட்டனர்.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு வட்டார காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது.
நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பெரியார் நகர், நெல்லித்தோப்பு சிக்னல் பெரியார் சிலை வழியாக ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் நிறைவடைந்தது.
பேரணிக்கு மாநில தலைவர் ஏ.வி. சுப்பி ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் எம்.எல்.ஏ.க்கள் வைத்திய நாதன், ரமேஷ்பரம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ் நிர்வாகிகள் பழனி மருதுபாண்டி, திருமுருகன், தனுசு, இளையராஜா, செல்வ நாதன், செந்தில்குமார், ராஜ்குமார், முத்துராமன், ஜெகவீரப்பாண்டியன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பேரணியாக சென்ற ராஜிவ்காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர், அப்போது பா.ஜனதா விற்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சமாதானப்படுத்தி கலைந்து போக வலிறுத்தினார். ஆனால் காங்கிரசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை கைது செய்து செய்தனர்.
மறியல் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மீது கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் திறமையின்மையால் நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை, விலைவாசி அதிக ரித்துள்ளது, இதனை எடுத்து கூறி ராகுல்காந்தி பாதயாத்திர மேற்கொண்டர்.
மக்கள் அனைத்து பகுதிகளிலும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்திக்கு பெருகி வரும் செல்வாக்கை பார்த்து, அதனை குறைக்க வேண்டும் என பிரதமர் நினைத்தார் அதற்கு நேரம் பார்த்து இருந்தார்.
மோடியின் பினா மியே அதானி தான் இதனை நாடாளு மன்றத்தில் ராகுல்காந்தி எடுத்துரைத்தார் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஜனநாயக படுகொலை மோடி ஆட்சியை தூக்கி எரியும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கால்நடைகளின் கண்காட்சி நடைபெறும்.
- கண்காட்சியில் கால் நடைத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
புதுச்சேரி:
புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கால்நடைகளின் கண்காட்சி நடைபெறும்.
கடந்த 6 ஆண்டுகளாக கால்நடை கண்காட்சி புதுவையில் நடைபெற வில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கால்நடை துறை சார்பில் மங்கலம் கிராமத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் சுற்றுபுற கிராம பகுதியைச் சேர்ந்த கிடாரி, ஜெர்சி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகள் மற்றும் சண்டை சேவல் நாட்டுக்கோழி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோழிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியில் கால் நடைத் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 46 கால்நடைகள், கோழிகளுக்கு சிறப்பூ பரிசும் கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து கால்நடைக ளுக்கும் ஆறுதல் பரிசும் வளர்ப்போருக்கு வழங்கி னார். நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இயக்குனர் லதா மங்கேஸ்கர், கால்நடை மருத்துவர்கள் அனந்தராமன் ஆர்த்தி சரளாதேவி மற்றும் கால்நடை விவசாயிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஏழை மாரியம்மன் கோவில் நாவிதர் மடத்தில் நடந்த வில்லியனூர் கொம்யூன் மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கொம்யூன் தலைவர் பெர்னோ தலைமை தாங்கினார்.
- வில்லியனூர் பகுதியில் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைத்து அனைத்து பாடப்பிரிவுகளுடன் தனி வளாகத்தில் செயல்படுத்திட வேண்டும்.
புதுச்சேரி:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் வில்லியனூர் கொம்யூன் மாநாடு நடந்தது. ஏழை மாரியம்மன் கோவில் நாவிதர் மடத்தில் நடந்த வில்லியனூர் கொம்யூன் மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கொம்யூன் தலைவர் பெர்னோ தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்ரீதரன், அருண்குமார், ரியாக்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முன்னாள் தேசிய குழு உறுப்பினர் சரவணன் மாநாட்டு கொடி ஏற்றி உரையாற்றினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் இரா.அந்தோணி மாநாட்டு தொடக்க உரையாற்றினார். கொம்யூன் செயலாளர் பெஞ்சமின் வேலை அறிக்கை வாசித்தார்.
இதில் சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் அந்துவான், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் பெருமாள், துணை செயலாளர் எழிலன், பாலகிருஷ்ணன், உதயராஜ் ,கோவிந்தராஜ், பெருமாள், பிரவீன்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வில்லியனூர் பகுதியில் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைத்து அனைத்து பாடப்பிரிவுகளுடன் தனி வளாகத்தில் செயல்படுத்திட வேண்டும். வில்லியனூர் முழுவதும் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்படுத்திடவும், மீன் மார்க்கெட்டை கட்டி முடித்து திறந்திடவும், கஸ்தூரிபாய் காந்தி திருமண நிலையத்தை திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில கொம்யூன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி.
- கடந்த 20 நாட்களாக சிவக்குமார் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை.
புதுச்சேரி:
புதுவை மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. சிவக்குமார் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களுக்கு சூர்யா, அய்யனார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இதையடுத்து கடந்த 20 நாட்களாக சிவக்குமார் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை. சிவக்குமாரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் உள்ள கால்நடைகோழிகளுக்கு எழில் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- புதுவை அரசானது விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகின்றது.
புதுச்சேரி:
புதுவை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் உள்ள கால்நடை- கோழிகளுக்கு எழில் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அங்காளன் எம்.எல்.ஏ. பங்கேற்று சுமார் 189 - கால்நடைகளான மாடுகள் ,கோழிகள், ஆடுகள், கன்றுகள் , வான்கோழி ஆகிய கால்நடைகளுக்கு முதல் 3 பரிசுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில்:-
புதுவை அரசானது விவசாயிகளின் வாழ்வா தாரமாக விளங்குகின்றது. குறிப்பாக கால்நடைகளை வளர்க்கின்ற விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் துறையின் இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் குமரன், மதகடிப்பட்டு கால்நடை மருத்துவர் செங்கேணி மற்றும் கால்நடை பரிசளிப்பு விழாவின் நடுவர்களாக டாக்டர் பிரீத்தா, டாக்டர் ராஜா மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.






