search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க சட்ட திருத்தம்
    X

    கோப்பு படம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க சட்ட திருத்தம்

    • புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உள்ளாட்சித் துறை முடுக்கிவிட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அரசு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உள்ளாட்சித் துறை முடுக்கிவிட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலை துல்லியமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நகராட்சி, கொம்யூன் சட்டத்தில் உள்ளாட்சி துறை திருத்தங்களை செய்துள்ளது.

    கடந்த ஜனவரியில் புதுவையின் 30 தொகுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதை வார்டுவாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அரசு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மேற்கொள்ள உள்ளனர்.

    இதற்காக படிவம் 20-ஐ உள்ளாட்சித்துறை அறிமுகம் செய்ய உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இடமாறுதலுக்கும் ஆதார் எண் கோரப்படும். புதுவையில் 74.61 சதவீதத்தினர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.

    ஆனால் மத்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆதார் எண் வழங்க சட்டத்தில் இடமில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடம் மீண்டும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வேண்டிய நிலை உள்ளது.

    மத்திய, மாநில தேர்தல் ஆணையம் இணைந்துசெயல்பட்டால் இந்த பணிகள் எளிதாகும். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×