என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலை நாவற்குளத்தில் இளைஞர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலை நாவற்குளத்தில் இளைஞர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளம் இளைஞர்கள் சார்பில் புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில் கோடை காலத்தையொட்டி நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    இதில், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன், ஊராட்சி துணைத் தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நாவற்குளம் வார்டு உறுப்பினர் நவநீத் என்ற நவநீதகிருஷ்ணன், வசந்தபுரம் வார்டு உறுப்பினர் கணேசன், உதயராஜ், நரேஷ்,நகுல், சுந்தரமூர்த்தி, சாமி, ஆகாஷ், ரமேஷ் உள்ளிட்ட நாவர்குளம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    நீர் மோர்- பந்தல்ஏற்பாட்டினை சிங்காரவேல் செய்திருந்தார்.

    • புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
    • புதுவை மாணவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும. அதனால் இளைஞர்கள் பயனடைவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மத்திய உள்துறைச் செயலர் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

    கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. , தலைமைச் செயலர் ராஜூவ் வர்மா, கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சௌத்ரி, கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு ஆகியோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    புதுவை மாணவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும. அதனால் இளைஞர்கள் பயனடைவார்கள். தேர்ந்த வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பட்டய மற்றும் முதுநிலை பட்டைய படிப்புகள் இங்கு நடைபெறும். புதுவை அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் அதிக திறன் கொண்ட இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்.

    நாட்டின் பாதுகாப்பில் பங்கெடுத்துக் கொள்வ தற்கான ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவையில் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் கவியரங்கம் நடைபெற்றது.
    • பொதுச்செயலர் கலியபெருமாள் நெறியாள்கையில் முத்தமிழே வணக்கம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் புதுவை. கோ.செல்வம் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் வீரசேகரன், சுசீலா, மணிமேகலை, காமராஜ், ராஜாராம், விசாலாட்சி, பழனிபாஸ்கரன், பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுச்செயலர் கலியபெருமாள் நெறியாள்கையில் முத்தமிழே வணக்கம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

    தொடர்ந்து நவீன தெருக்கூத்துக் கலைஞர் காந்திமேரி சிறப்புரையாற்றினார். பின்னர் கவிஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்த தமிழ்வளர்ச்சி சிறகத்தை கைவிட்டு தமிழ்வளர்ச்சித்தறையை அறிவிக்க வேண்டும். இதுவரை கொடுக்கப்படாத தமிழ்மாமணி விருதுகளை தலா ரூபாய் ஒரு லட்சம் தொகையுடன் வழங்க வேண்டும். அறிவிக்கப்பட்ட கலைமாமணி, கம்பன், தொல்காப்பியர் , நேரு விருதுகளை அடுத்த மாதம் 29-ந் தேதி நடைபெறும் பாரதிதாசன் விழாவில் முறைப்படி வழங்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆழ்கடலில் வசிக்க கூடிய ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து முட்டை இட்டு செல்கின்றன.
    • 50கிலோ எடைகொண்ட மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களில் சிக்கி அடிபட்டு காயம் அடைந்து இறந்து விடுகின்றன.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை புதுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை யோர பகுதியில் தற்போது ஆழ்கடலில் வசிக்க கூடிய ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து முட்டை இட்டு செல்கின்றன.

    அவ்வாறு கடற்கரையை நோக்கி வரும் ஆமைகளில் ஏராளமான ஆமைகள் 50கிலோ எடைகொண்ட மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களில் சிக்கி அடிபட்டு காயம் அடைந்து இறந்து விடுகின்றன.

    இந்நிலையில் கிருமாம்பாக்கம் போலீசார் கலைமணி, மணிவண்ணன் ஆகியோர் மூ.புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள செடிகொடியில் சிக்கிய நிலையில் ஆலிவ் ரேட்லி ஆமை ஒன்று அங்கிருந்து செல்ல முடியாமல் போராடிக் கொண்டிருந்தது. அதனை கண்ட போலீசார் அதனை பத்திரமாக மீட்டு கடலுக்குள் விட்டனர்.

    • கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது.
    • மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண் மொழி கருத்தரங்கு அறிக்கை வாசித்தார்.

    புதுச்சேரி:

    கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசே கரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராணயசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினா். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண் மொழி கருத்தரங்கு அறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினராக புதுவை பிளே வர்ஸ் இந்தியா நிறுவன தலைவரும் இந்திய தொழிற்சங்க அமைப்பின் முன்னாள் தலைவருமான சுரீந்தர் கலந்து கொண்டு 'சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அதன் அவசியம்' குறித்து மாணவர்களிடையே பேசினார்.

    கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பு, தொழில்நுட்ப திறன் போட்டி, வினாடி-வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முடிவில் தொழில்நுட்ப துறை தலைவர் சிவகுமார் நன்றியுரை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்
    • அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ரங்கசாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

    புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும், நியாய விலைக்கடைகளில் 2 கிலோ சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரங்கசாமி கூறினார்.

    • கொலையை கண்டித்து செந்தில்குமரன் ஆதரவாளர்கள் விழுப்புரம்-புதுவை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
    • கொலை குறித்து வில்லியனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    புதுவை வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 42). மங்கலம் தொகுதி பா.ஜனதா பிரமுகரான இவர் துணிக்கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் தன்னுடைய ஆதரவாளர்களுக்காக போலீஸ் நிலையங்களில் பஞ்சாயத்து செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

    இவர் பிரபல ரவுடி திருக்காஞ்சியை சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தத்தை தனது ஆதரவாளராக உருவாக்கிக் கொண்டார்.

    இந்நிலையில் நேற்று விழுப்புரம் பைபாஸ் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பேக்கரியில் இருந்த போது முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். பின்னர் அவரது கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தை பார்த்த அந்தப் பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமரன் உடலை மீட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையை கண்டித்து செந்தில்குமரன் ஆதரவாளர்கள் விழுப்புரம்-புதுவை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த கொலை குறித்து வில்லியனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது,

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவையாறு பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் முள் காட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை செய்வதை பிரவீன் போலீசில் காட்டிக் கொடுத்ததற்காக சிறைக்குச் சென்று திரும்பிய முகிலன் தலைமையிலான கும்பல் பிரவீனை கொலை செய்தது.

    இந்த கொலையில் நித்தி என்ற நித்தியானந்தருக்கு தொடர்பு இருப்பதாக வில்லியனூர் போலீசார் அவரது பெயரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால் இதுவரை இந்த வழக்கில் நித்யானந்தம் கைதாகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். பிரவீன் கொலையில் நித்யானந்தம் பெயரை சேர்ப்பதற்கு பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் காரணமாக இருந்ததாக நித்தியானந்தம் கருதியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக செந்தில்குமரனும் நித்தியானந்தமும் பேச்சுவார்த்தை இல்லாமல் எதிரும் புதிருமாக இருந்துள்ளனர்.

    இந்நிலையில் நித்தியானந்தம் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் உருவையாறு கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த ராஜவேலு, ராஜாமணி, ஏழுமலை, பிரதீப் உள்ளிட்ட கூலிப்படை கும்பல் மூளையாக செயல்பட்டு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தெரிகிறது.

    மேலும் வில்லியனூர் கொலை நடந்த பகுதியில் கடைகள் மூடப்பட்டுள்ளது. செந்தில்குமரன் வசித்து வரும் வீட்டருகே 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கொலையில் நித்தி என்ற நித்தியானந்தத்தை கைது செய்கின்ற வரையில் உடலை பெற மாட்டோம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து வில்லியனூர் பகுதியில் பதற்றம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • பயணிகள் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நகரப் பகுதியில் சுற்றி வருவது காட்சி பொருள் ஆகிவிட்டது.
    • மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை யினர் இந்த வாகனங்களை கண்காணிக்கிறார்களா?

    புதுச்சேரி:

    புதுவை சட்ட சபையில் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. பேசிய தாவது:-

    புதுவை நகர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நகரப் பகுதியில் சுற்றி வருவது காட்சி பொருள் ஆகிவிட்டது.

    வாடகை விடுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா? அதனை இந்த வாடகை விடும் நிறுவனம் அனைத்தும் முறையாக கடைப்பிடிக்கின்றனவா? அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பொதுவாக வாடகைக்கு விடப்படும் வாகனங்கள் அவை வாடகை வண்டி என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள மஞ்சள் நிற நம்பர் பிளேட் மிக அவசியம்.

    தற்போது எந்த வாடகை வண்டியும் இந்த விதியை கடைப்பிடிப்பது இல்லை. மேலும் வாடகை விடப்படும் வாகனத்துடன் பாதுகாப்பு தலை கவசம் அந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறதா?

    மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை யினர் இந்த வாகனங்களை கண்காணிக்கி றார்களா? அல்லது இந்த வாகனங்களை கண்காணிக்க அவர்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளதா? அவர்களுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதா? இதனையும் போக்குவரத்து அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

    மேலும் தற்பொழுது எத்தனை நிறுவனங்கள் இந்த வாடகை விடும் தொழிலுக்காக போக்கு வரத்து துறை யில் விண்ணப்பி த்துள்ளன என்பதையும் இந்த மாமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

    மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, நகராட்சி மூன்றும் இணைந்து வழிமுறைகளை உடனடியாக வகுத்து இந்த வாடகை விடும் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.

    மேலும் நேரு வீதி மற்றும் மிஷன் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவை அனைத்திற்கும் போக்கு வரத்து துறை அமைச்சர் தகுந்த தீர்வை இந்த மாமன்றத்தில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அம்மா அறக்கட்டளை சார்பில் உப்பளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பிள்ளு கடை சந்திப்பு, துறைமுகம் மெயின் கேட், கல்லரை வீதி சந்திப்பு, அவ்வை நகர் அகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணை செயலாளர் காந்தி, புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன், மாநில எம். ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெங்கடேசன்,ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உப்பளம் தொகுதியை சேர்ந்த சவரிநாதன், சிவா, செல்வம், ரமேஷ், குணாளன், பாக்கியராஜ், ரெமோ, நாகராஜ், சங்கர், சரத், இஸ்மாயில், ரியாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தங்கமயில் வாகன உற்சவமும் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளிக் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலைய சுவாமிகள் திருமடத்தின் கீழ் உள்ள பிரசித்தி பெற்ற மயிலம் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர பெருவிழா பங்குனி திங்கள் 13-ம் நாள் ஆதீனகர்த்தர் 20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள்முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தங்கமயில் வாகன உற்சவமும் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளிக் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

    மறுநாள் 4-ந் தேதி பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருத்தேர் வீதி உலா படம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    5-ம் தேதி காலை பங்குனி உத்திர தீர்த்தவாரியும், இரவு தெப்ப உற்சவமும் 6-ந் தேதி இரவு முத்து பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர நிகழ்ச்சி அனைத்தும் பொம்மபுர ஆதீனம் மடம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் அச்சத்தில் வாழும் சூழல் உள்ளது.
    • அதுவரை அந்த ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, வேறு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தின் உள்துறை அமைச்சரின் தீவிர ஆதரவாளர், மங்கலம் தொகுதி பா.ஜனதா செயலாளர் பொறுப்பில் இருந்தவர் வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் அச்சத்தில் வாழும் சூழல் உள்ளது. கொலையாளிகள் சவுகரியமாக வந்து கொலை செய்துவிட்டு செல்லும் நிலை புதுவையில் தொடர்கிறது.

    கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த கொலையின் பின்னணி குறித்து ஆராய வேண்டும். அதுவரை அந்த ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, வேறு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
    • தினமும் 500 முதல் 800 பேர் வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.

    மொத்தமுள்ள 279 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் காவலர்களுக்காக 14 ஆயிரத்து 173 மற்றும் ஓட்டுனர்களுக்கான 877 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது.தினமும் 500 முதல் 800 பேர் வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. முதலில் உடல் எடை, உயரம், மார்பக அளவு எடுக்கப்படுகிறது.

    பின்னர் முழுமையான கணினி முறையில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 12 நாட்களாக ஆண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து  பெண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு தொடங்கியது.

    முதல்நாளான 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பெண்களுக்கு 30-ந் தேதி வரை ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    இறுதியாக 31-ந் தேதி ஓட்டுநனர்களுக்கான தேர்வு நடக்கிறது.

    ×