என் மலர்
புதுச்சேரி
- கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்த ப்பட்டிருக்க வேண்டும்.
- தற்போது நடக்கும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றாலும் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் தோல்வி அடைந்த வர்களாகவே கருதப்படுவர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்த ப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கல்வித்துறை அலட்சியத்தால் மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
ஆனால் கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 11-ம் வகுப்பு அரியர் செய்முறைத் தேர்வு நடத்தியது போலவும், அதில் ஏற்கனவே தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்கள் அனைவரும் வரவில்லை என்று குறிப்பிட்டு செய்முறைத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் உள் ஆய்வாளர் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
இதனால் தற்போது நடக்கும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றாலும் 11-ம்
வகுப்பு செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் தோல்வி அடைந்த வர்களாகவே கருதப்படுவர். இதனால் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு எழுதாத அல்லது வராத ஏறக்குறைய 344 மாணவர்கள் உயர் படிப்புக்குச் செல்ல முடியாமல் 1 ஆண்டு காலம் படிப்பு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை இணை இயக்குநரின் அலட்சியத்தாலும், நிர்வாக தவறினாலும் இப்போது ஏறக்குறைய 344 மாணவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குரியாகி உள்ளது. எனவே, புதுவை அரசு, கல்வித்துறை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆகியவை 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
- வரவு செலவு அறிக்கை, சங்கத்தினுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் சேர்மேன் பிரமோத், தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரவு செலவு அறிக்கை, சங்கத்தினுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது
புதுவையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா (பார்மா பார்க்) அமைப்பதற்கு உத்தரவிட்ட புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வ.உ. சிதம்ப ரம்பிள்ளையை கவுரப்படுத்தும் வகையில் அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், மின் விளக்குகள் அமைத்தும் சிலை உள்ள சதுக்கத்தை அழகுப்படுத்த வேண்டும்.
- இந்த நிதியாண்டில் இவ்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துக்கென்று தனியாக நிதியை ஒதுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்சபையில் மானிய கோரிக்கை விவாதத்தில் வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாள் ஆண்டிலேயே, சட்டசபை எதிரே உள்ள அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், அதன் வளாகத்தை அழகுபடுத்தவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு அது பொதுப்பணித் துறை வரை சென்று நிலுவையில் உள்ளது.
எனவே வ.உ. சிதம்ப ரம்பிள்ளையை கவுரப்படுத்தும் வகையில் அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், மின் விளக்குகள் அமைத்தும் சிலை உள்ள சதுக்கத்தை அழகுப்படுத்த வேண்டும்.
மேலும் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 3 வருடங்களாக சரிவர சம்பளம் வழங்கப்பட வில்லை. 9 மாத சம்பளம் தரப்படாமல் உள்ளது. காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலமாக பொதுமக்களுக்கு மானியம் வழங்கும் சிறப்பாக செயல்பட்டு 2 முறை மத்திய அரசின் விருதினை பெற்று தந்து புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளது.
எனவே இந்த நிதியாண்டில் இவ்வாரி யத்தில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு சம்பளத்துக்கென்று தனியாக நிதியை ஒதுக்க வேண்டும். அதோடு இங்கு பணிபுரியும் தினக்கூலி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் 15 வருடத்திற்கு மேலாக பணி புரிந்தும், பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 2030-க்கு பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிச்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சாலை விரிவாக்க பணியின் போது மின் கம்பங்களை நகர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் பேசியதாவது:-
2030-க்கு பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிச்கை விடுக்கப் பட்டுள்ளது. எனவே குடிநீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி தரும்போது நிலத்தடி நீரை சேகரிக்க அறிவுறுத்த வேண்டும்.
தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர் குடியிருப்பில் மூடப்பட்ட பூங்காக்ககளை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சாலை விரிவாக்க பணியின் போது மின் கம்பங்களை நகர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்டுள்ள பகுதிகளில் பாதாள சாக்காடை அமைத்து தர வேண்டும்.
வேல்ராம்பட்டு ஏரியை படகு குழாமாக மாற்ற வேண்டும். ஒரே செயலியல் புதுவையின் அனைத்து சுற்றுலா தலங்களும் அமையு மாறு வடிவமைக்க வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் எளிதில் சென்று பார்வையிடுவர்.
சேமநல நிதியை உயர்த்தி வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு சம்பத் பேசினார்.
- அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொது செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கலாம் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
- பின்னர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொது செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கலாம் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்று புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளம் தலைமைக் அலுவலகத்தில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலைக்கும், ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர்கள், கருணாநிதி, குணசேகரன், காந்தி, கிருஷ்ணமூர்த்தி, குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட கட்சியினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் முத்தியா ல்பேட்டை மணிக்கூண்டு அருகே மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில்அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், விக்னேஷ் காசிநாதன், வில்லியனூர் மணி, கோபால், செல்வம், பரமசிவம், நாராயணசாமி, மோகன், செல்வம், விஸ்வநாதன், அந்துவான், மண்ணாங்கட்டி, தனலட்சுமி, ராதா, ஹரிகிருஷ்ணன், முனியாண்டி, வாசு, நடராஜன், ஆறுமுகம், பஞ்சவர்ணம், பச்சையப்பன், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொரோனா தடுப்பு பணிக்கு கடந்த 9.9.2020ல் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர், ஏ.என்.எம். ஆகியோர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி செய்து வருவதை அரசு அறியுமா?
- நீண்டகாலமாக தேசிய ஊரக சுகாதார இயக்கத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
பிரகாஷ்குமார்(சுயே): கொரோனா தடுப்பு பணிக்கு கடந்த 9.9.2020ல் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர், ஏ.என்.எம். ஆகியோர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி செய்து வருவதை அரசு அறியுமா? அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?
முதல்-அமைச்சர் ரங்கசாமி: அவர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அவர்களை 3 முறை ஒப்பந்தம் நீட்டித்துள்ளோம். வாய்ப்பிருந்தால் பணி நிரந்தரம் பற்றி ஆலோசிக்கலாம்.
அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் நேரு, கல்யாணசுந்தரம், நாஜிம், வைத்தியநாதன், நாக.தியாகராஜன், ஜான்குமார், ரிச்சர்டு, ரமேஷ், ஆகியோர் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், சுகாதாரத்துறையில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு, ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஆஷா பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி: நீண்டகாலமாக தேசிய ஊரக சுகாதார இயக்ககத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்ளனர். சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களில் சுகாதார இயக்கக ஊழியர்களை நிரப்ப உள்ளோம். அதன்பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கு வாய்ப்புக்கேற்ப பணி அளிக்கப்படும்.
எதிர்கட்சித்தலைவர் சிவா: மல்லாடிகிருஷ்ணாராவ் அமைச்சராக இருந்தபோது வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என ஏஎன்எம்களை பணிக்கு எடுத்தனர். தற்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிகராக சாலைதோறும் சென்று பணிகளை செய்கின்றனர். அவர்கள் முழுநேரமும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 சம்பளம் வழங்கப்படுகிறது. இதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கொடுங்கள். முதல்-அமைச்சர் இதை மனசாட்சியோடு அணுக வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- மீனவர்களுக்கு அடிப்படை வசதியை மேம்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
- மக்களுக்கு குடிநீர் கட்டணத்தை அதிகப்படுத்துவதால், பொறுப்புடன் குடிநீரை குறைவாக பயன்படுத்துவார்கள்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் ஜான்குமார் எம்.எல்.ஏ. (பா.ஜனதா ) பேசியதாவது:
மீனவர்களுக்கு அடிப்படை வசதியை மேம்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. புதுவையில் முன்மாதிரி மீனவ கிராமம் அமைக்க மத்திய அரசிடமிருந்து நிதி பெறும் திட்டம் மீனவர்களுக்கு நன்மை அளிப்பதாகும்.
புதுவை ஆட்சி பரப்பில் மீன் உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு குடிநீர் கட்டணத்தை அதிகப்படுத்துவதால், பொறுப்புடன் குடிநீரை குறைவாக பயன்படுத்துவார்கள். அப்போதுதான் எதிர்கால சந்ததி யினருக்கு நாம் தண்ணீரை கொண்டு சேர்க்க முடியும். எனது தொகுதியில் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கால்வாயில் வீணாக செல்கிறது.
புதுவையில் பெரிய வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்களை போடு பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும். தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.250 கொடுக்க வேண்டும். கேசினோவை புதுவைக்கு கொண்டு வர வேண்டும். கவர்ச்சியான குதிரை வண்டிகள் மூலம் சுற்றுலா பயணிகள் புதுவையை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். நவீன சுற்றுலா சார்ந்த திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடற்கரை மண்டல ஒழுங்காற்று ஆணையம் என்ற பெயரில் மீனவ மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அரசு துணை போக கூடாது.
- மீனவர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கென்னடி எம்.எல்.ஏ பேசியதாவது:-
கடற்கரை மண்டல ஒழுங்காற்று ஆணையம் என்ற பெயரில் மீனவ மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அரசு துணை போக கூடாது.
மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரமாக அறிவிக்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியத்தை உயர்த்தி தர வேண்டும். மீனவர் நல வாரியத்தை அமைக்க வேண்டும். பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்க்க வேண்டும்.
மீனவர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும். வம்பாகீரப் பாைளயத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மீனவர்கள் கலப்பு திருமணம் செய்தால் அப்பெண்களுக்கு கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதனை அரசு சரி செய்ய வேண்டும்.
மறைமலை அடிகள் சாலையில் இருந்து அம்ேபத்கர் சாலை வரை உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். சாலைகளில் மழை நீர் சேமிப்பை உருவாக்க வேண்டும். அதிக நோய்களை உருவாக்கும் கொசுவை ஒழிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள ஆறுகளில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். உப்பளம் தொகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- அமைச்சர்கள் துறை மூலம் அறிவிக்கும் திட்டங்களை செய்ய வேண்டும். அதேபோல், செய்ய முடியும் என்ற விஷயங்களை மட்டுமே அறிவிக்க வேண்டும்.
- உள்ளூர் மீனவர்களுக்கு இந்த உரிமத்தை வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பேசியதாவது:-
அமைச்சர்கள் துறை மூலம் அறிவிக்கும் திட்டங்களை செய்ய வேண்டும். அதேபோல், செய்ய முடியும் என்ற விஷயங்களை மட்டுமே அறிவிக்க வேண்டும். ஏரி, குளம், குட்டை, வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியத்தை ரூ.15 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
படகு சவாரிக்கான உரிமம் வெளியூர் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்களுக்கு இந்த உரிமத்தை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 வழங்குவது போதாது. எனவே, மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வீதம் அரிசி வழங்க வேண்டும். மீனவ சொசைட்டிகளுக்கு தலைவர்களை நியமிக்க வேண்டும்.
புதுவையில் மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமத்தை தவிர்த்து சுற்றுலா என்று எதுவும் இல்லை. நிறைய ரெஸ்டோ பார்களை தான் திற ந்துள்ளீர்கள்.
ஒரு நாளைக்கு மேல் சுற்றுலா பயணிகள் பொழுது போக்குவதற்கு சுற்றுலா தலங்கள் இல்லை. எனவே, கனகன் ஏரி, வேல்ராம்பட்டு உள்ளிட்ட ஏரிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றி படகு சவாரியை ஆரம்பிக்க வேண்டும்.
வேளாண்துறையில் காலியாக உள்ள கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி நடைபெற்றது.
- கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி கடந்த 17-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து நிறைவடைந்தது.
நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கைவினைப் பொருட்கள் விற்பனையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் அமைத்த அரங்கில் அதிகப்படியான விற்பனை நடந்து முதலிடத்தையும், உத்தர பிரதேசம் 2-ம் இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் 3-ம் இடத்தையும், ஆந்திரா 4-வது இடத்தையும் பிடித்து விற்பனையில் சாதனை படைத்தது.
விற்பனையில் சாதனை படைத்த அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி அமைச்சர் பேசுகையில், பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் கிராமப்புற மக்களின் மேம்பாடு குறித்து அவரது ஒவ்வொரு திட்டமும் கிராமத்தை நோக்கியே உள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார்.
மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு நிதியையும் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பொது மக்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்ற ஆசையோடு உள்ளார். இவ்வாறு பேசினார். இதில், இளநிலை பொறியாளர் ராமன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக் பாகி, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதல்-அமைச்சர் 3-வது முறையாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
- ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும் அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு மார்க்சிஸ்டு வரவேற்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதல்-அமைச்சர் 3-வது முறையாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் 5 மாத ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும் என பல கட்ட போரட்டங்களை மார்க்சிஸ்டு கட்சி நடத்தியுள்ளது.
சட்டமன்றத்திலும், வெளியிலும் பல முறை முதல்-அமைச்சர், ரேஷன்கடைகளை திறப்போம் என அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை. நீண்ட போராட்டத்தால் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3-வது முறையாக மீண்டும் ரேஷன் கடைகளை திறக்கப் போவதாகவும், ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும் அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு மார்க்சிஸ்டு வரவேற்கிறது.
முதல்-அமைச்சர் வாக்குறுதிப்படி ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 55மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம்பேட், பிப்டிக் தெருவில் உள்ள செல்வகுமார் மனைவி பொற்க்கலை கூலித் தொழிலாளி.
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் ேபட், பிப்டிக் தெருவில் உள்ள செல்வகுமார் மனைவி பொற்க்கலை கூலித் தொழிலாளி.
இவரது குடிசை வீட்டில் மின்கசிவால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும் அரசு சார்பில் வீடு கட்ட இழப்பீடு தொகையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
இந்நிகழ்ச்சியின் போது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் பங்கேற்று இருந்தனர்.






