என் மலர்
புதுச்சேரி
- புதுவை அருகே சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம் நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சிக்ஷயை கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள் 20 பேருக்கு தலா 2 பெறுவிடை கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம் நடைபெற்றது.
வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி யை கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள் 20 பேருக்கு தலா 2 பெறுவிடை கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது
இந்த செயல்விளக்க முகாமின் ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஷ்வரி செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் விஜயகுமார் , சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மேலாண்மைத் துறை மாணவர்களுக்கானவேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
- எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தா ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி கல்லூரி), சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மேலாண்மைத் துறை மாணவர்க ளுக்கானவேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் மதன் அருண், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் எம்.ஐ.டி கல்லூரி மேலாண்மை துறையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், மேலாண்மைத் துறை தலைவர் பாஸ்கரன், பேரா சிரியர்கள் வைத்தீஸ்வரன் மற்றும் மன்சூர் இப்ராஹிம் ஆகியோர் செய்து இருந்தார்.
- உள்ளூர் அதிகாரிகள் பயன் பெற முடியாமல் உள்ளது. பதவி உயர்வு கூட கிடைப்பதில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருவதில்லை.
- யூ.பி.எஸ்.சி.யில் அடாக்கில் அதிகாரிகள் ஓராண்டுதான் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு:-
ஐ.ஏ.எஸ்.14, ஐ.பி.எஸ். 9, ஐ.எப்.எஸ். 3 பேர் இருந்தும் மக்கள் பணிகளை செய்யவில்லை. 1967 மக்கள் கணக்குப்படி பதவிகள் உள்ளன. உள்ளூர் அதிகாரிகள் பயன் பெற முடியாமல் உள்ளது. பதவி உயர்வு கூட கிடைப்பதில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருவதில்லை.
சி.டி.சி. முறையில் ஊதிய உயர்வு சலுகைகள் இல்லை. கூடுதல் பொறுப்பில் 23 பி.சி.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த இயலாது. துறைத்தலைவர்கள் இல்லை என்றால் ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்ய இயலாது என்றார்
முதல்-அமைச்சர் ரங்கசாமி: தேவைப்பட்ட இடத்தில் அதிகாரிகள் நிரப்புவோம். சி.டி.சி. முறையில் பெரிய குறை உள்ளது. அடாக் மூலம் தர தொடங்கிய. உள்ளோம். யூ.பி.எஸ்.சி.யில் அடாக்கில் அதிகாரிகள் ஓராண்டுதான் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். ரெகுலைஸ் பண்ணாததால் இத்தகைய பிரச்சினை உள்ளது. கே.எஸ்.பி. ரமேஷ்- தலைமைச்செயலர் என்ன முடிவு எடுக்க போகிறார்.?
முதல்-அமைச்சர் ரங்கசாமி: உடன் செய்ய முடியாது. சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் தலைமைச் செயலர் காட்டிய வழியால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே எண்ணத்தில் தற்போதுள்ள தலைமை செய்லாளரும் உள்ளார்.
சட்டப்படி அவர் செய்துள்ளார். பல சங்கடங்கள் இருக்கிறது. அதை வெளிப்படுத்த முடியாது. நடந்து கொண்டுள்ள பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் தெளிவாக கருத்து சொல்லி உள்ளனர். குறைபாடுகள் நிறைய சொல்லி உள்ளனர். நிர்வாகத்தில் உள்ளது உண்மைதான். இதில் கவனம் செலுத்தி நடைமுறை சிக்கல்கள் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- புதுவை அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
- இனிப்புப்பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது:-
புதுவை அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தூக்கு கூபைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள், விரிப்பான்கள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல் தட்டுகள், உணவுப் பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம், தெர்மாக்கோல் அலங்காரப்பொருட்கள், பிளாஸ்டிக் முட்கரண்டி, சிறிய பேக்கேஜிங் போர்த்திய தாள்கள், இனிப்புப்பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
ஆகையால் புதுவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு சட்டப்பேரவை அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 14 வகையான பொருட்களை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் மே 1-ந் தேதி முதல் பயன்படுத்தக்கூடாது. எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆக்கி மைதானம் 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பயிற்சியே செய்ய முடியாமல் உள்ளது. நம்முடைய தேசிய விளையாட்டை பாதுகாக்க என்ன செய்தீர்கள்.?
- சர்வதேச விளையாட்டு மைதானத்தை தனியார் பங்களிப்புடன் காலாப்பட்டில் கொண்டு வரவுள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:
நேரு (சுயேட்சை): ஆக்கி மைதானம் 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பயிற்சியே செய்ய முடியாமல் உள்ளது.நம்முடைய தேசிய விளையாட்டை பாதுகாக்க என்ன செய்தீர்கள்.?
அமைச்சர் நமச்சிவாயம்: உண்மைதான். கடந்த காலங்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை. உடன் நடவடிக்கை எடுக்கிறோம். விளை யாட்டுத்துறைக்கு தனி கவனம் செலுத்துகிறோம். இதுவரை சம்பளம் ஒதுக்கி வந்தோம். தற்போது ஊக்கத்தொகைக்கு ரூ. 8 கோடி ஒதுக்கி தந்துள்ளோம். ஆக்கி மைதானத்துக்கு ரூ. 7.5 கோடி தேவை. நேரடியாக அதற்கு திட்டமதிப்பீட்டை தனியார் நிறுவனம் மூலம் செய்கிறோம்.
ஆக்கி மட்டுல்ல அனைத்து விளையாட்டுகளிலும் இளைஞர்கள் பயிற்சி பெற செய்ய உள்ளோம். சர்வதேச விளையாட்டு மைதானத்தை தனியார் பங்களிப்புடன் காலாப்பட்டில் கொண்டு வரவுள்ளோம். தனியார் பள்ளியில் 16 ஏக்கர் நிலம் உள்ளது. வில்லியனூரில் மினி ஸ்டேடியம் கொண்டு வரவுள்ளோம்.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.: மின்கட்டணம் செலுத்ததால் உப்பளம் உள் விளையாட்டு அரங்கில் ஏ.சி. வசதி இயங்கவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: விளையாட்டுத்துறையே முழுவதும் சீர்படுத்தியாக வேண்டும். யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். அனைத்தும் சரி செய்யப்பட்டு விளையாட்டு துறை மேம்படுத்தப்படும்.
நேரு: அண்ணாதிடல் ஸ்மார்ட் சிட்டி பணி தேக்கத்தால் 2 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.
அமைச்சர் நமச்சிவாயம்: விளையாட்டுத்திடலாகவே மாற்றவே ஸ்மார்ட் சிட்டியில் நிதி ஒதுக்கி செய்தோம். ஒரு சில வேலைகளால் நிற்கிறது. அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளோம். ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.: கோரிமேடு போலீஸ் மைதானத்தை நவீனப்படுத்தி தாருங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: போலீஸ் மைதானத்தை நவீனப்படுத்துவோம். விளையாட்டு இயக்குநர் நியமிக்க தனி ஆணை வெளியிட வேண்டும். கல்வித்துறை துணை இயக்குநர் ஒருவரை பணியிடமாற்றம் செய்து விளையாட்டுத்துறைக்கு கொண்டு செல்லவுள்ளோம்.
கொம்யூன்தோறும் விளையாட்டு மைதானம் கொண்டுவருவோம். தற்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. அடுத்த ஆண்டு கேலோ இந்தியா திட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் உருவா க்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- புதுவை போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட் டுள்ளது.
- கலை பண்பாட்டு துறையை பொறுத்தவரை அங்கு பணியாற்றுகின்ற லைப்ரரி பணியாளருக்கு ஊதியம் அதிகம் என கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் பேசியதாவது:-
புதுவை போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சரும் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக பிங்க் பஸ்கள் பெண்களுக்காக இலவசமாக அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். கலை பண்பாட்டு துறையை பொறுத்தவரை அங்கு பணியாற்றுகின்ற லைப்ரரி பணியாளருக்கு ஊதியம் அதிகம் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே பல லைப்ரரி பணியாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிகிறது.
எனவே எதிர்காலத்தில் நமது ஆட்சி காலத்தில் இது போன்ற ஒரு நிலை மாற்றப்பட்டு அனைத்து நூலகங்களிலும் புத்தகங்கள் வாங்க வேண்டும். மேலும் இங்கு படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு, ஆண்டு தோறும், பல்வேறு கலைத்துறையினரை வரவைத்து சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி இங்கிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு முக்கிய கலை நிறுவ னங்களில் பணி கிடைக்கக்கூடிய வழிவகைகளை செய்து தர வேண்டும்.
ஆதிதிராவிட நலத் துறையை பொறுத்தவரை அங்கு பணம் கொடுத்தால் தான் பட்டா என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை காண்கிறோம். மேலும் புதுவை இடுகாடுகளில், இறுதி சடங்குகள் செய்வதற்கு பத்தாயிரம், பதினைந்தாயிரம் ரூபாய் அளவிற்கு கூட பணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.
அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று புதுவையில் மின் மயானங்கள் போதுமான தாக இல்லை என்று தெரிகிறது. கூடுதல் மின் மயானங்களை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வருடம்தோறும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மகளிர் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த கல்லூரி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு புதியதாக வகுப்பறைகள் கட்ட ஜல்ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
எனது தொகுதியில் இரண்டு மீனவ கிராமங்கள் உள்ளன. சோலை நகர் வடக்கு, சோலை நகர் தெற்கு இந்த பகுதிக்கு கடல் அரிப்பிலிருந்து மீனவ மக்களை காப்பாற்ற உடனடியாக கடற்கரையில் கற்களை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோலை நகர் பகுதியில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தூண்டில் முள் வளைவு அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வருடம்தோறும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஒரு யோகா பயிற்சி மையம் அமைக்க மேற்கூரை அமைத்து தர வேண்டும். மேலும் காலியாக உள்ள இடத்தில் அவசர சிகிச்சைக்காக தேவையான படுக்கை வசதி ஏற்படுத்திக் கொள்ள கட்டிடம் கட்டித்தர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த கல்லூரி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு புதியதாக வகுப்பறைகள் கட்ட ஜல்ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு திட்ட மதிப்பீடு ஏதேனும் பொதுப்பணி மேற்கொண்டதாக தெரியவில்லை.
முத்தியால்பேட்டை தொகுதியில் பழமை வாய்ந்த தென்கலை சீனிவாச பெருமாள் திருக்கோயில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அந்த திருக்கோவிலுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அலங்கார விளக்குகள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கடந்த காலங்களில் ஆதிதிராவிடர் மக்கள் திருமண உதவித்தொகை ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அதனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலை பண்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் இசைக்கலைஞர்களுக்கான உதவியை காலத்தோடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதுவை நகர அமைப்பு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் வரை முறை சட்டம் சட்ட சபையில் இயற்றப் பட்டும் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
- புதுவையில் பணபுழக்கம் குறைந்துள்ளது. கட்டிட வரைமுறை சட்டத்தை அமல்படுத்தினால் வருவாய் அதிகரிக்கும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கே.எஸ்.பி. ரமேஷ்: புதுவை நகர அமைப்பு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் வரை முறை சட்டம் சட்ட சபையில் இயற்றப் பட்டும் அமல்படுத்தப் படாமல் உள்ளது.
தலைமைச் செயலர், செயலர் தடுக்கிறார்கள். சட்டப்பேரவை சட்டம் இயற்றி அதை ஏற்காத தலைமைச்செயலர் தேவையில்லை. அரசுக்கு வருவாய் வரும். தலைமை ச்செயலர், துறைச்செயலரை மாற்றுங்கள். கவர்னர் ஒப்புதல் தந்தும் கோப்புக்கு ஒப்புதல் தர மறுக்கிறார்கள். எனவே தலைமை செயலாளர் டெல்லிக்கு திரும்புங்கள் என்றார்.
வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ.: புதுவையில் பணபுழக்கம் குறைந்துள்ளது. கட்டிட வரைமுறை சட்டத்தை அமல்படுத்தினால் வருவாய் அதிகரிக்கும். பி.ஆர்.சிவா: டவுன்பிளா னிங்குக்கு ஒப்புதல் தராததால் வீடு கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
முதல்- அமைச்சர் ரங்கசாமி. வீடு கட்ட ஒப்புதலுக்காக பலர் காத்துள்ளனர். கூடுதலாக ரூ. 300 கோடி வருவாய் வரும். சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு விவாதம் நடந்தது.
- மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.
- மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.
காமராஜர் சிலை அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மின்துறை தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும்.
மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். தன்னாட்சிக் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். பஞ்சாலைகளை திறக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யத்தை செயல்படுத்த வேண்டும். 8 மணிநேர, வேலை பணி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சுதா சுந்தரராமன், ராமச்ச ந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், சத்தியா, கலியமூர்த்தி, முருகன், செயலாளர்கள் மதிவாணன், உட்பட பலர் பங்கேற்றனர்.
- உழவு எந்திர த்திற்கு வழங்குவது போல நெல் நடவு, உலர் எந்திரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
- ஈமச்சடங்கு தொகையை ஆதிதிராவிட நலத்துறை போல சமூக நலத்துறையும் உடனுக்குடன் பயனாளிக்கு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் குமார் பேசியதாவது:-
விவசாயி களுக்கு விவசாய கருவிகள் வாங்க மானியம் வழங்க வேண்டும்.
உழவு எந்திர த்திற்கு வழங்குவது போல நெல் நடவு, உலர் எந்திரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். விளை பொருள் சேமிப்பதற்கான மானியம் வழங்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பதற்கு நடமாடும் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். கால்நடை தீவனம் தகுதியான அனைவருக்கும் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
ஈமச்சடங்கு தொகையை ஆதிதிராவிட நலத்துறை போல சமூக நலத்துறையும் உடனுக்குடன் பயனாளிக்கு வழங்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷனை அமலாக்க வேண்டும். பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்து புதிதாக மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும்.
ஆதி திராவிட மக்கள் மக்கள் வாழும் பகுதியில் உள்ள கோவில் ஒரு கால பூஜைக்கான நிதியை சிறப்பு கூறு நிதியிலிருந்து தர வேண்டும். அங்கு புதிய கோவில் கட்டுமான பணிக்கும் சிறப்பு கூறு நிதியிலிருந்தும் கூடுதல் நிதி தர வேண்டும்.
ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கு தனி வங்கியை உருவாக்கி தொழில் முனைவோருக்கு சிறப்புகூறு நிதியில் மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு செந்தில்குமார் பேசினார்.
- உப்பனாறு வாய்க்காலில் சிதைந்த தரையை மீண்டும் அமைக்க வேண்டும்.
- நகர பகுதியில் குடிநீர் குடிக்க உகந்தாக இல்லாததால் கிட்னி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, சரும நோய் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-
உப்பனாறு வாய்க்காலில் சிதைந்த தரையை மீண்டும் அமைக்க வேண்டும். தரை அமைக்கும் போது கழிவுநீர் ஒட தனியாக வாய்க்கால் அமைக்க வேண்டும். இப்படி செய்தால் உப்பனாறில் வாய்க்காலின் மற்ற பகுதிகள் சுத்தமாக இருக்கும். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர பகுதியில் குடிநீர் குடிக்க உகந்தாக இல்லாததால் கிட்னி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, சரும நோய் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் சுற்றுலா பயணிகள் வாகனங்களை குறி வைத்து அபராதம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். ஆர்வ மிகுதியால் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழக்கும் சுற்றுலா பயணிகளின் உயிரை காக்க அரசு முன் வர வேண்டும்.
விமானம் பயணிகளுக்கும் விமான நிலையத்திலிருந்து தங்கும் இடங்களுக்கு செல்ல போதிய வாகன வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்து நகர பகுதிகளுக்கு பஸ் இயக்க வேண்டும்.
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கோவிந்தசாலை சின்னப்பொய்கை அந்தோணியார் கோவில் பகுதி குடிசை மாற்று வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரசு குடியிருப்புகளை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கனகசெட்டி க்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
- ஆலங்குப்பம், காலாப்பட்டு பகுதிகளில் பாதாள சாக்காடை திட்டம் கொண்டு வர வேண்டும்.
புதுச்சேரி:
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-
கனகசெட்டி க்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளை அகலப்படுத்த வேண்டும், என்.சி.சி.ஆர். திட்டத்தின் கீழ் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள் வளைவை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை ஊழியர்கள் புதுவையில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காலாப்பட்டு தொகுதியை சேர்க்க வேண்டும். ஆலங்குப்பம், காலாப்பட்டு பகுதிகளில் பாதாள சாக்காடை திட்டம் கொண்டு வர வேண்டும். சுற்றுலாத் துறை மூலமாக காலாபட்டு தொகுதிக்கு ரூ. 1000 கோடிக்கு விரிவான திட்டம் கொடுக்க வேண்டும். 26 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட ஆலங்குப்பம் கிராம சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் சாகச விளையாட்டுகளை கொண்டு வர வேண்டும். காலாபட்டில் கடற்கரை திருவிழா நடத்த வேண்டும். மீனவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம், மானிய விலையில் மீன்பிடி உபகரணம் வழங்க வேண்டும. காலாப்பட்டில் மீன்பிடி துறைமுகத்தை உடனே அமைத்து தர வேண்டும். அடுத்த ஆண்டு அரசு டைரி வழங்க வேண்டும்.
சட்டப்பல்கலை அமைய நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அங்கு புதுவை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தண்டனை முடிந்துள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






