என் மலர்
புதுச்சேரி
- கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் வழி காட்டும்சாயி பாபா ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.
- பாபாவிற்கு அபிஷேகம் செய்த சர்க்கரையை அனைவரும் எறும்பு புற்றுக்கு தானம் செய்தார்கள்.
புதுச்சேரி:
கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் வழி காட்டும்சாயி பாபா ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து 108 சாயி பக்தர்கள் 108 முறை ராம நாமத்தை கூறினார்கள். அதை தொடர்ந்து ஓம் வழி காட்டும் சாயி பாபாவிற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது. பாபாவிற்கு அபிஷேகம் செய்த சர்க்கரையை அனைவரும் எறும்பு புற்றுக்கு தானம் செய்தார்கள்.
இவ்விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- புதுவை தர்மபுரி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் இப்பள்ளியில் நடைபெற்றது இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- புதுவை கல்வித்துறை சமர சிக்ஷா பொறுப்பாளர் ஹெலன் ராணி கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார் .
புதுச்சேரி:
புதுவை தர்மபுரி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் இப்பள்ளியில் நடைபெற்றது இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்குபுதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தரராஜன் தலைமை தாங்கினார் .
விழாவில் தலைமை விருந்தினராக புதுவை கல்வித்துறை சமர சிக்ஷா பொறுப்பாளர் ஹெலன் ராணி கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார் .
மேலும் விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை பிரேமலதா சாந்தி பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்கள்.
பள்ளி பொறுப்பாசிரியை மாலா ஆசிரியர்கள் கீதா, சோமசுந்தரம், செந்தில்குமார் , சண்முக சுந்தரவேல், மாண வர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். மூத்த பயிற்சியாளர் சிவமதி தற்காப்பு கலையை பற்றி செயல் முறை விளக்கம் அளித்தனர்.
- புதுவை மெயின் ரோட்டில் உண்ணாவிரதம் மற்றும் கண்டன போராட்டம் நடைபெற்றது.
- தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பாபையா, மண்ணாங்கட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு கண்டித்து ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை மெயின் ரோட்டில் உண்ணாவிரதம் மற்றும் கண்டன போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பாபையா, மண்ணாங்கட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்,எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்,எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன், கார்த்திகேயன், விஜயவேணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்வாணன் ஆகியோர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.
திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டணி கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்கள், மகளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், பொறுப்பாளர்கள், கிருமாம்பாக்கம் சக்கரவர்த்தி, சூசைராஜ், வட்டார தலைவர் சிவராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு, கருணாநிதி பலர் கலந்து கொண்டனர்.
- கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேம் விமர்சையாக நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி 48 நாள் மண்டல அபிஷேகம் நடந்தது.
- புனர்பூச நட்சத்திரத்தில் காலை 8 மணிக்கு2-ம் கால யாக பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த வி.மணவெளியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் காளிகாம்பாள், அகோர வீரபத்திர சாமி, பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேம் விமர்சையாக நடந்து முடிந்தது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி 48 நாள் மண்டல அபிஷேகம் நடந்தது. மண்டல அபிஷேகத்தை ஒட்டி அணுங்ஜை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், சிறப்பு ஹோமம், மஹாபூர்ணாஹதி, மஹா தீபாரதனை நடந்தது. புனர்பூச நட்சத்திரத்தில் காலை 8 மணிக்கு2-ம் கால யாக பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மகாபூர்ணகதி 108 சங்காபிஷேகம் மகா தீபாரதனை விமர்சையாக நடந்தது. மண்டல அபிஷேக நிகழ்ச்சியில் கோவில் திருப்பணி கமிட்டி குழு நிர்வாகி ராமதாஸ் கோயில் தனி அதிகாரி உமாபதி, மண்ணாடிப்பட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், மண்ணாடிப்பட்டு தொகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், அருள்,
வில்லியனூர் தொகுதி பா.ஜனதா பிரமுகர்கள் ஏகாம்பரம், கண்ணபிரான், தேவராஜ், விஸ்வநாதன், ராமதாஸ்,சாம்ராஜ், காமராஜ் ரெட்டியார்பாளை யம் சரவணன், பா.ஜனதா மாநில ஓ.பி.சி. அணி செயலா ளர் சீனிவாச பெருமாள், கோவில் நிர்வாகிகள் வில்லியனூர் மணவெளி பகுதி பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநிலத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது.
- சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத டாக்டர்கள் தங்கள் படிப்பை முடித்து வெளிவந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-
புதுவை மாநிலத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது. இருந்தாலும் ஆங்கில டாக்டர்களுக்கு ஒரு விதமாகவும், ஆயுர்வேதா டாக்டர்களுக்கு வேறு விதமாகவும் சம்பள முரண்பாடு உள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும்.
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் மாகி பகுதியில் ஆயுர்வேத கல்லூரி 2010-ல் தொடங்கப்பட்டது. சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத டாக்டர்கள் தங்கள் படிப்பை முடித்து வெளிவந்துள்ளனர்.
மாகி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய முதல்-அமைச்சர், வில்லியனூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை தொடங்கப்படும் என்றும், அதில் மாகியில் படித்த ஆயுர்வேத மருத்துவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதன்படி அவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவையின் கிராமப்புற மக்கள் அறியாமையில், புது வை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாமல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
- புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாத காரணத்தால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் தி.மு.க. செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவையின் கிராமப்புற மக்கள் அறியாமையில், புது வை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாமல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் தற்பொழுது கிராமப்புற மக்கள் வங்கி கடன் , வீடு கட்டுவதற்கு கடன், மற்றும் அடிப்படை வசதி பெறுவதற்கு புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாத காரணத்தால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே கடந்த காலங்களில் காலி மனைகளுக்கு 2017-ல் ரெகுலேஷன் போல கிராமப்புறங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒன் டைம் ரெகுலேஷன் கொடுத்து புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- எனது வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் பகுதியில் வளர்ச்சி கட்டணமாக ரூ.2.50 கோடி வரை வசூல் செய்துள்ளனர்.
- புதுவை நகராட்சி மிக மோசமான நிலையில் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சி த்தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
எனது வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் பகுதியில் வளர்ச்சி கட்டணமாக ரூ.2.50 கோடி வரை வசூல் செய்துள்ளனர். இவ்வளவு நிதி பெற்றாலும், ஒரு சாலை கூட அமைக்கவில்லை. புதுவை நகராட்சி மிக மோசமான நிலையில் உள்ளது.
குப்பைவரி, வீட்டு வரி என பல வரிகள் வசூலிக்கின்றனர். அது மட்டுமில்லாமல் சாலை, வாய்க்கால் கட்டுவது தொடர்பாக மேம்பாட்டுக்கட்டணம் வாங்கி விட்டு அதை சம்பளமாக போடுகிறார்கள். வளர்ச்சி நிதியை அப்பகுதியின் வளர்ச்சிக்கு செலவு செய்ய சொல்லுங்கள்.
புதுவை நகராட்சி எந்த வேலையும் செய்வதில்லை. எம்.எல்.ஏ. நிதி ரூ.2 கோடி எப்போது தருவீர்கள்?
இவ்வாறு சிவா பேசினார்.
- புதுவையில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
- இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
தேர்தலுக்கு பின் தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. புதுவையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அ.தி.மு.க. கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
அ.தி.மு.க. கட்சிக்குள் நிலவிய குழப்பம் காரணமாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி அ.தி.மு.க. கட்சித் தலைவர்களை சந்திக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு செல்லும் என ஐகோர்ட்டும் தீர்ப்பளித்தது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி போன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டார். அப்போது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றதற்கு தனது வாழ்த்துக்களை ரங்கசாமி தெரிவித்தார்.
- உப்பளம் தொகுதியில் வசிக்கும் ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் நிறைய வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
- ஏழை எளிய இஸ்லாமியர்கள் வாழமுதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-
உப்பளம் தொகுதியில் வசிக்கும் ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் நிறைய வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மீரா பள்ளி வாசல் பெரிய இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் குறைந்த வாடகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க பல முறை கோரிக்கை வைத்துள்ளேன்.
ஆனால் இது வரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. ஏழை எளிய இஸ்லாமியர்கள் வாழமுதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பயன்படுத்த சமுதாய நலக்கூடம் ஒன்று என் கோரிக்கையை ஏற்று கட்டித்தரப்பட்டாலும், அதன் நோக்கம் நிறைவேறவில்லை.
அங்கு வக்பு வாரிய அலுவலகம்தான் நடை பெறுகிறது. முதல்-அமைச்சர் அந்த சமுதாயக்கூடத்தை மீட்டு ஏழை எளிய மக்கள் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ சுபகாரியங்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நிலத்தடிநீர் பயன் பாட்டை கண்கா ணிக்கவும், ஒழங்குபடுத்தவும் மத்திய அரசு கொண்டுவந்த வழிகாட்டு நெறிமுறைகள் புதுவையிலும் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இனி விவசாயிகள்ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-
நிலத்தடிநீர் பயன் பாட்டை கண்கா ணிக்கவும், ஒழங்குபடுத்தவும் மத்திய அரசு கொண்டுவந்த வழிகாட்டு நெறிமுறைகள் புதுவையிலும் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அரசாணை உடனடியாக வெளியிடப்படும். இனி விவசாயிகள்ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை.
மேலும் ஒரு ஆழ்குழாய் கிணறுக்கும், அடுத்த கிணறுக்கும் உள்ள இடைவெளி கட்டுப் பாடு ஏதும் தேவையில்லை.
விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைத்தவுடன் புதுவை நிலத்தடி நீர் ஆதார அமைப்பில் கட்டணமின்றி பதிவு செய்தால், அவர்க ளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதைக்கொண்டு மின் இணைப்பு பெறலாம்.
ஆழ் குழாய் கிணறு அமைக்க பி.வி.சி. பைப் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கிணறு அமைக்கும் முன்பாக வேளாண் அலுவலரிடம் தெரிவித்து அவரின் மேற்பார்வையில் ஆழ்கு ழாய் கிணறு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை மாநிலத்தில் போலியான அரசு வேலையை நம்பி பல குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து நடு ரோட்டுக்கு வந்துள்ளனர்.
- மாநிலத்திலும் இணக்கமான கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதால் எந்தவித சிக்கலும் வராது.
புதுச்சேரி:
பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் போலியான அரசு வேலையை நம்பி பல குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து நடு ரோட்டுக்கு வந்துள்ளனர்.
புதுவையில் ஆளும் அரசாங்கமும், ஏற்கனவே ஆட்சி செய்தவர்களும் இளைஞர்களை வாக்கு அரசியலுக்காக அரசு வேலை என பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை , ரேஷன் கடை, கே.வி.கே., அரசு போக்குவரத்து கழகம் என பல்வேறு துறைகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்க ள் தங்களுடைய ஆதரவாளர்களை வேலைக்கு வைத்தனர்.
இதனை நம்பி தனியார் நிறுவனங்களில் நல்ல சம்ப ளத்துடன் வேலை செய்தவர்களும், சுயதொழில் வேலை செய்தவர்களும், பட்டதாரிகளும், தங்களுடைய பணியை துறந்து, அரசுபணி என நம்பி வேலைக்கு சேர்ந்தனர். ஒரு சிலர் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் பணம் கொடுத்தும் அரசு வேலையில் சேர்ந்துள்ளனர், தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர்களுக்கு சரிவர சம்பளமும் வழங்கப் படவில்லை . அவர்கள் திடீரென எந்தவித முன்னறிவிப் பும் இன்றி பணி நீக்கம் செய்தனர்.
குறிப்பாக பொதுப்பணித்துறையில் வேலை செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், ரேஷன் கடை ஊழியர்கள் 700 பேரும், வேளாண் அறிவியல் நிலையத்தில் 150 ஊழியர்களும், பி.ஆர்.டி.சி.யில் 12 ஊழியர்களும் உரிய காரணம் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த ஊழியர்களின் குடும்பத்தினரையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
நிலுவை சம்பளத்தையும் கொடுக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதால் எந்தவித சிக்கலும் வராது.
புதுவை நாள்தோறும் போராட்டக் களமாக மாறி வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டதால் புதுவை மண்ணின் மைந்தர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே முதல்-அமைச்சர், துறையின் அமைச்சர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நீக்கம் செய் யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊழியர்களுடன் இணைந்து நேரடியாக போராட்ட களத்தில் பா.ம.க. இறங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுவை உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
- மாணவிகளுக்கு தற்காப்பு களை பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
பள்ளித் துணை முதல்வர் சந்திரா வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மாணவிகளுக்கு தற்காப்பு களை பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும் மூத்த பயிற்சியாளர் சிவமதி தற்காப்பு கலையை பற்றி செயல் முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் விழாவில் பங்கேற்றனர்.






