என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் நீக்கியது.
    • எனது வீடு, ராகுல்காந்தியின் வீடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை நாடு முழுவதும் காங்கிரசார் தங்கள் வீடுகளில் ஒட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் நீக்கியது.

    அதோடு டெல்லியில் ராகுல் வசித்த வீட்டை காலி செய்யும்படி பாராளுமன்ற செயலகம் உத்தரவிட்டது. ராகுல்காந்திக்காக பலரும் தங்கள் வீட்டை தர முன்வந்துள்ளனர். எனது வீடு, ராகுல்காந்தியின் வீடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை நாடு முழுவதும் காங்கிரசார் தங்கள் வீடுகளில் ஒட்டி வருகின்றனர்.

    புதுவையில் முதல் வீடாக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தனது இல்லத்தில் இந்த ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.

    மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு ஸ்டிக்கர் ஒட்டினார். நிகழ்ச்சியில் வக்கீல் அணி மருதுபாண்டியன், பொதுச்செயலாளர் திருமுருகன், வட்டார தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளிலும் இளைஞர் காங்கிரசார் ஸ்டிக்கர் ஒட்டினர்.

    • புதுவை ராதே அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • புலவர் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை ராதே அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    புதுவை ஜெயராம் ஓட்டலில் நடந்த விழா வுக்கு அறக்கட்டளை நிறுவனர் தேவதாஸ் தலைமை தாங்கினார். டாக்டர் ஸ்ரீபிரியா நம்பிராசு வரவேற்றார். வேணு ஞானமூர்த்தி, கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார்.

    தொடர்ந்து சுகன்யா ராஜசேகரன், டாக்டர் பார்கவி, சச்சிதானந்தம் , பேராசிரியர் தேவநாயகம், மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு முன்னாள் இணைச்செயலர் வீரபத்திர சாமிக்கு தமிழ்ஒளி பட்டயமும், புதுவை அரசு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு குழு தலைவர் ராமானுஜத்திற்கு சுற்றுச்சூழல் காவலர் பட்டயமும் வழங்கினார்.

    தொடர்ந்து, அனு ராதா, கலைவாணி, சரசு,கெஜலட்சுமி, பிரேம குமாரி, அங்கையற்கன்னி, கலாவதி, வள்ளியம்மை, நித்ய கல்யாணி, மாலா, சித்ரா, அமுதா, விக்டோரியா, கீதா, சுசீலா, சுந்தரி ஆகியோருக்கு வாகை மகளிர் பட்டயம் வழங்கப்பட்டன.

    முடிவில் என்ஜினீயர் மாலை மணி நன்றி கூறினார்.

    • இந்திராநகர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது.
    • சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அய்யங்குட்டிபாளையத்தில் தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சந்திப்பில் முடிந்தது.

    புதுச்சேரி:

    இந்திராநகர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது.

    இதில் தொகுதி பொறுப் பாளர் ராஜாகுமார் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச்செய லாளர்கள் தனுசு, திருமுருகன், நிர்வாகிகள் மருது பாண்டியன், ஆனந்த பாபு, வேல்முருகன், மோகன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜாசேகர், செல்வநாதன், சோமசுந்தரம், சந்திரிகா, கவிப்பிரியா, பஞ்சகாந்தி, ரத்னா, புனிதா, ரெஜினா, கிருஷ்ணபிரியா, தியாக ராஜன், கிருஷ்ணராஜ், பன்னீர்செல்வம், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அய்யங்குட்டிபாளை யத்தில் தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சந்திப்பில் முடிந்தது.

    • புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
    • அதிகாரம் பறிபோய்வி டுமோ என்று நினைத்து எந்த முயற்சியையும் அதிகாரி களும் எடுப்பதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: -புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை என்பது பா.ஜனதா எண்ணம். அத்தனை வகையிலும் ஒத்துழைப்பு தருவோம். அப்போது நான் இருந்த கட்சியில் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டுள்ளோம். பிராந்தியத்துக்கு பாதகம் என எதிர்த்த சூழலும் உண்டு. தற்போது இந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபையில் போடப்பட்ட தீர்மானங்கள் எத்தனை முறை மத்திய அரசிடம் கொண்டு செல்லப்பட்டன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    அதிகாரம் பறிபோய்வி டுமோ என்று நினைத்து எந்த முயற்சியையும் அதிகாரி களும் எடுப்பதில்லை. அத்தனை தீர்மானங்களும் டெல்லி சென்றடைந்ததில்லை. மாநில மக்கள் உணர்வுகளை டெல்லிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராக இல்லை. அரசு தீர்மானங்கள் தற்போது கொண்டு செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் மத்திய அரசிடம் சென்று அடைந்து மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை முயற்சி தொடர்ந்து இருக்க வேண்டும்.

    அந்தந்த மொழிபேசும் மாநிலத்தோடு சேர்த்து விடுவார்களோ என்ற இதர பிராந்திய எம்.எல்.ஏ.க்கள் அச்சத்தில் இருந்தனர். ஒரே மாநிலமாக இருக்க வலியுறுத்தப்படும். மாநில கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. தள்ளுபடி செய்து தரக்கூடிய மாநில அந்தஸ்தாக இருக்கவேண்டும். அதை உருவாக்கவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வந்த பிறகு புதுவையிலிருந்து சென்ற கோப்புகள் திரும்ப கிடைக்க 7 ஆண்டுகளாகும் என்ற நிலை மாறிவிட்டது.

    மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறும் சூழலில் கிடைக்கும் காலத்தில் ஒரு சில நடவடிக்கை எடுக்கவேண்டும். நாம் நிதிக்குழுவில் உறுப்பினராக இல்லை. மாநிலமாவோ, யூனியன் பிரதேசமாகவா இல்லை. ஜி.எஸ்.டி. என வரும்போது மாநிலத்தில் சேர்க்கின்றனர். உறுப்பினராக இல்லாததால் நிதி வரவில்லை. 1963 பிசினஸ் ரூலில் திருத்தம் கொண்டு வரவேண்டும். கட்டுகளை விடுவிக்க மாற்றம் கொண்டு வரவேண்டும்.

    அக்கோரிக்கையை மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு பெறவேண்டும். அமைச்சரவைக்கும், சட்டப்பேரவைக்கும் உரிய அதிகாரம் பெறவேண்டும்.

    கவர்னரே இதை தர வேண்டும். முதல்- அமைச்சருக்கு ரூ. 10 கோடி வரை அனுமதி தரலாம். கிரண்பேடி கவர்னராக வந்தபோது ரூ.1 லட்சம் அனுமதிக்குகூட அவரிடம் செல்லும் நிலையை உருவாக்கினார். கவர்னருக்கும், முதல்- அமைச்சருக்கும் முரண்பாடு ஏற்பட்டால் டெல்லிக்கு அனுப்பும் முறை கடந்த ஆட்சியில் நடந்தது. அந்நிலை இருக்கக்கூடாது. உரிய அதிகாரம் அமைச்சரவை, சட்டப்பேரவைக்கு வேண்டும். மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முழு ஆதரவை பா.ஜனதா தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை கல்வித்துறை முன்பு இளைஞர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • புதிய கல்விக் கொள்கை யை கைவிடக்கோரி மத்திய அரசை வற்புறுத்தி, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறை முன்பு இளைஞர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளர் ராஜராஜன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்டு மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில செயலாளர் பழனி, மாவட்ட செயலாளர் முருகன், மாநில கமிட்டி உறுப்பினர் முத்துக்கண்ணு, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாநில தலைவர் மோதிலால், அகில இந்திய முற்போக்கு பெண்கள் மாநில பொதுச் செயலாளர் விஜயா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    புதிய கல்விக் கொள்கை யை கைவிடக்கோரி மத்திய அரசை வற்புறுத்தி, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். சி.பி.எஸ்.இ.

    பாட முறையை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கூடாது. தாய் மொழிகல்வி முறையை கொண்டு வர வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடை செய்ய வேண்டும்.

    தனியார் மதியஉணவு திட்டத்தை கைவிட வேண்டும். மதிய உணவை அரசே நேரிடையாக வழங்கிட வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • புதுவை மிஷன் வீதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடையில் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • எலக்ட்ரானிக் சிகரெட்டை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மிஷன் வீதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடையில் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பெரியகடை போலீசார் சோதனையிட்டதில் மிஷன் வீதியில் 2 கடையில் விற்க ப்பட்டது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் ரெயின்போநகரை சேர்ந்த நித்துஷ்(38), புஸ்சி முல்லா வீதியை சேர்ந்த சையது முஸ்தபா(65) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிகரெட்டை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் ஆரம்ப பிரிவில் மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • இக்கண்காட்சியில் 225 தனிநபர் அறிவியல் திட்டங்கள் மற்றும் 7 குழும அறிவியல் திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

    புதுச்சேரி:

    உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் ஆரம்ப பிரிவில் மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி மாணவர்களின் பங்கேற்புடன் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜின் வழிநடத்துதலில் நடை பெற்றது.

    இக்கண்காட்சி மற்றும் 2 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான மாணவர்களின் பார்வைக்கும் 2-வது நாள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கும் நடைபெறுகிறது.

    இக்கண்காட்சியில் 225 தனிநபர் அறிவியல் திட்டங்கள் மற்றும் 7 குழும அறிவியல் திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

    இன்று சிறப்பு விருந்தினராக உதயகுமார் ஐ.ஏ.எஸ். மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் யுவான் அம்ரோஸ் மற்றும் பாதிரியார் ஜோசப்ராஜ் ஆகியோர் பங்கேற்று அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் மாதிரிகளை கண்டும் கேட்டும் பாராட்டினர்.

    இதனை தொடர்ந்து சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • புதுவை சட்டசபையில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
    • திருக்குறளில் இல்லாததே இல்லை. 2 வரியில் அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது: திருக்குறள் நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு அற்புத நூலாகும். 14 ஐரோப்பிய மொழிகள், 10 ஆசிய மொழிகள், 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு உன்னத நூல். மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரைதான் இந்த திருக்குறள் பொதுமறை. வள்ளுவனை பெற்றதால், புகழ் வையகம் பெற்றது.அவருக்கு சிறப்பு செய்யும் வண்ணம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தீர்மானத்தை வரவேற்று எதிர்கட்சி தலைவர் சிவா, நாஜிம், செந்தில்குமார், நாக.தியாகராஜன், நேரு, சிவசங்கர், ராமலிங்கம், வெங்க டேசன்,ரிச்சர்டு, ஜான்குமார் ஆகியோர் பேசினர்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசும்போது, மனிதன் செம்மையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால், திருக்குறளை படித்து அதன் கருத்துக்களை ஏற்றால் போதும். திருக்குறளில் இல்லாததே இல்லை. 2 வரியில் அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது. இதை அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அனிபால் கென்னடியிடம் தனிநபர் தீர்மானத்தை வாபஸ் பெற கேட்டுக்கொண்டார். இதையேற்று தீர்மானத்தை வாபஸ் பெற்றார். தொடர்ந்த திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோடியை விமர்சனம் செய்ததற்காக ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரி விக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

    மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர்.ஹர்ஷவர்தன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் தலைவர் முகுந்தராஜ், நிர்வாகி தமிழ்ச்செல்வன், வட்டார மகளிர் அணி தலைவி சரஸ்வதி, காங்கிரஸ் மாநில செயலாளர் லோகையன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வப்பிரியன், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர், அரியாங்குப்பம் தமிழரசன், வில்லியனூர் அயூப், முதலியார்பேட்டை பாரதி, மாணவர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நித்திஷ் தேவா காலாப்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரதாப், ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோடியை விமர்சனம் செய்ததற்காக ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரி விக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கிழக்குகடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிழக்குகடற்கரை சாலையில் திடீர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த காலாப்பட்டு போலீசார் பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.

    • மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழா நாளாக கொண்டாட முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டு களையும் தெரிவித்து கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்  ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழா நாளாக கொண்டாட முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்- அமைச்சருக்கு புதுவை மாநில கழகத்தின் சார்பிலும், மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை யும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த மக்கள் முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் முதல்-அமைச்சர்

    ஓ.பி.எஸ். சார்பிலும், அ.தி.மு.க.வின் தொண்டர்களின் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    அப்போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனி நபர் தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் கொண்டு வந்தனர்.

    5 பேரின் தனி நபர் தீர்மானங்களையும் இணைத்து விவாதிக்க சபாநாயாகர் ஏம்பலம் செல்வம் அனுமதியளித்தார்.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மத்திய அரசு நிதி பற்றாக்குறை, அதிகாரிகள் அலட்சியம், கவர்னர் அரசை நிலைக்குலைய செய்தல் ஆகியவை பற்றி சபையில் பேசப்பட்டது.

    36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

    கடந்த 63-ம் ஆண்டில் 39 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். பின்பு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பின்னர் அதிகாரம் குறைக்கப்பட்டு, மத்திய அரசின் கண்காணிப்பில் வந்தது. சமூகம், நிதி, நிர்வாக ரீதியாக அதிகாரம் குறைந்துள்ளது.

    இதனால் மாநில அந்தஸ்து குரல் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல் தலைமைச்செயலர், கவர்னர் முடிவு எடுக்க வேண்டிய நிலையுள்ளது.

    மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது. பிற்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு கூட மத்திய அரசை நாட வேண்டியுள்ளது. பெரும்பாலான கோப்புகள் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால் அதிகாரம் குறைந்துள்ளது. கவர்னரேதான் முடிவு எடுக்கிறார். முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    கவர்னர், தலைமை செயலர், செயலர்கள் புதுவையின் மீது நிரந்தர அக்கறையின்றி செயல்படுகிறார்கள். பட்ஜெட்டுக்கு கூட மத்திய அரசுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. இது ஜனநாயக முறைக்கு எதிரானது. நியாய பங்கீடு மறுக்கப்படுகிறது. பட்ஜெட்டில் உதவி என்று தரப்படுவது நியாயமற்றதாக உள்ளது.

    தமிழகத்தில் 69 சத இடஒதுக்கீடு தரப்படுகிறது. புதுவையில் இல்லை. இந்த தடையெல்லாம் நீங்க முழு தகுதியுடைய மாநில அந்தஸ்து தேவை. மத்தியில் பா.ஜனதா-காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.

    நாஜிம் (திமுக): புதுவைக்கு தற்போது மாநில அந்தஸ்து கிடைக்க அனைத்து வாய்ப்பும் உண்டு. மாநில அந்தஸ்துக்காக தொடங்கிய கட்சியின் ஆட்சி நடக்கிறது. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். கூட்டணி அறுவடை செய்யும் நேரம் இது. மத்திய பாஜக உதவியாக இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவர் சுஷ்மா சுவராஜ் புதுவை வந்தபோது மாநில அந்தஸ்தை பரிந்துரை செய்தார்.

    நேரு (சுயேட்சை): பலமுறை தீர்மானம் நிறைவேவற்றியும் மாநில அந்தஸ்து கிடைக்காதது வருத்தம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பொதுநல அமைப்புகள், தொழிலாளர், இளைஞர்கள் கோஷம் எழுப்புகின்றனர். அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முழு நேர பணியாக அடுத்தக் கட்டத்துக்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.

    குட்டி பிரான்சான புதுவைக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. புதிய திட்டங்களுக்கான ஆய்வு கூடங்களாகி விட்டன. ரேஷன் கடை இல்லாத மாநிலமாகி விட்டது. மத்திய அரசு திட்டங்களை திணிக்கின்றன.

    78 நாடுகள் பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ளன. அவை சுதந்திரமாக உள்ளது. நாம் அடிமைப்பட்ட மாநிலமாக உள்ளோம். எனவே மாநில அரசுக்கு அதிகாரம் தேவை. அதற்கு மாநில அந்தஸ்து தேவை.

    அனிபால் கென்னடி (திமுக): சட்டப்பேரவை இல்லாத லடாக்கை நிதி கமிஷனில் சேர்த்துள்ளனர். ஆனால் புதுவையை சேர்க்கவில்லை. சொந்த வருவாயில் 63 சதவீதத்தில் உள்ளோம். வடகிழக்கு மாநிலங்களை விட நம் வருவாய் அதிகம். வருவாய் குறைவான பல மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுள்ளன. அதிகாரமில்லாத சுதந்திரம் இருக்கிறது. உடனடியாக அனைத்துக்கட்சித்தலைவர்கள், சட்டப்பேரவை எம்எல்ஏக்களைக் கூட்டி, பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்த வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்.

    செந்தில்குமார் (தி.மு.க.): ஆட்சியாளர்களை தாண்டி மக்களுக்கு உரிமை வேண்டும். இரண்டாம் தர குடிமக்களாக நாம் வாழும் சூழல் உள்ளது. இந்த இழுக்கை போக்கி உரிமையுடன் கூடிய குடிமகனாக வாழவேண்டும். சுதந்திரத்துக்காக பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர். இது அனைவரும் போராடி பெற்ற சுதந்திரம். இந்தியாவுடன் நாம் இணைந்தோம்.

    நம்மால் சொந்த காலில் நிற்க முடியும். சட்டத்திட்டங்கள் அனைத்தும் கட்டி வைக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர். இவ்வளவு பிரச்சினைகளை வைத்தும் கட்டுகள் தேவையா? எனவே இந்த கட்டுகளில் இருந்து விடுபட மாநில அந்தஸ்து தேவை.

    இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானத்தை வரவேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், வெங்க டேசன், ரிச்சர்டு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாக.தியாகராஜன், என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ், திருமுருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் பேசினர்.

    மாகி, ஏனாமை இணைத்து மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

    ஒட்டுமொத்தமாக மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி விளக்கமாக பேசியுள்ளனர். பல விஷயங்களை சொல்லியுள்ளனர். நிர்வாக சிரமம் இங்கிருந்தால் தான் தெரியும். ஆளும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும். உரிமையும் நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே வழி. பலமுறை இதை சட்டசபையில் வலியுறுத்தி உள்ளோம்.

    நாம் வலியுறுத்தி செல்லும்போது மத்திய அரசு பார்ப்போம் என்கின்றனர். இந்த சட்டசபையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அவ்வளவு வலி உள்ளது.

    எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது.

    அனைத்தும் நல்லபடியாக நடக்கும், அதற்கான நேரம் வந்துள்ளது. மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. நமது கோரிக்கையை ஏற்று மாநில அந்தஸ்து கொடுக்கும் நிலையிலும் இருக்கிறது. எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு சென்று மத்திய அரசை வலியுறுத்தி வெற்றியை பெறுவோம். எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசே தீர்மானமாக ஏற்றதால், உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து 5 உறுப்பினர்களும் தங்களின் தனி நபர் தீர்மானத்தை திரும்பப்பெறுவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது வெளிநடப்பு செய்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு சபைக்கு திரும்பியிருந்தார். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி ஆரவாரம் செய்து தீர்மானத்தை வரவேற்றனர்.

    • மத்திய அரசு உதவியோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுவையை முன்னேற்றுவோம்.
    • புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம். அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    மத்திய அரசு உதவியோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுவையை முன்னேற்றுவோம்.கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர்.

    புதுவையை பொருத்தவரை கடந்த ஆட்சிக்காலத்தில் நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதை கொண்டு வந்தால்தான் விரைவாக எண்ணங்களை செயல்வடி வில் கொண்டு வரமுடியும். பிரச்சினைகளை தீர்க்க நிர்வாக சீர்திருத்ததுக்கு அரசு கவனம் செலுத்தும்.

    புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம். அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும். வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட பூமிபூஜை போடப்படும்.

    அரசின் 10 ஆயிரம் காலி பணி இடங்கள் காலியாக இருந்தது ஒவ்வொரு துறைவாரியாக நிரப்புகிறோம். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டு அரசு சம்பளம் வாங்கியிருந்து கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தால் திரும்பவும் வேலை தரப்படும்.

    மறைந்த பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, புதுவை செல்லாநாயக்கர், தியாகு முதலியார் ஆகியோர் பிறந்த நாள், நினைவு தினம் அரசு விழாவாக எடுக்கப்படும்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    ×