என் மலர்
புதுச்சேரி

மாணவ காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டத்தின் போது எடுத்த படம்.
மாணவ காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம்
- ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோடியை விமர்சனம் செய்ததற்காக ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரி விக்கப்பட்டது.
புதுச்சேரி:
ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர்.ஹர்ஷவர்தன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் தலைவர் முகுந்தராஜ், நிர்வாகி தமிழ்ச்செல்வன், வட்டார மகளிர் அணி தலைவி சரஸ்வதி, காங்கிரஸ் மாநில செயலாளர் லோகையன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வப்பிரியன், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர், அரியாங்குப்பம் தமிழரசன், வில்லியனூர் அயூப், முதலியார்பேட்டை பாரதி, மாணவர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நித்திஷ் தேவா காலாப்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரதாப், ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோடியை விமர்சனம் செய்ததற்காக ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரி விக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கிழக்குகடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிழக்குகடற்கரை சாலையில் திடீர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த காலாப்பட்டு போலீசார் பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.






