search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ராதே அறக்கட்டளையில் முப்பெரும் விழா
    X

    ராதே அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளார்.

    ராதே அறக்கட்டளையில் முப்பெரும் விழா

    • புதுவை ராதே அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • புலவர் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை ராதே அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    புதுவை ஜெயராம் ஓட்டலில் நடந்த விழா வுக்கு அறக்கட்டளை நிறுவனர் தேவதாஸ் தலைமை தாங்கினார். டாக்டர் ஸ்ரீபிரியா நம்பிராசு வரவேற்றார். வேணு ஞானமூர்த்தி, கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார்.

    தொடர்ந்து சுகன்யா ராஜசேகரன், டாக்டர் பார்கவி, சச்சிதானந்தம் , பேராசிரியர் தேவநாயகம், மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு முன்னாள் இணைச்செயலர் வீரபத்திர சாமிக்கு தமிழ்ஒளி பட்டயமும், புதுவை அரசு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு குழு தலைவர் ராமானுஜத்திற்கு சுற்றுச்சூழல் காவலர் பட்டயமும் வழங்கினார்.

    தொடர்ந்து, அனு ராதா, கலைவாணி, சரசு,கெஜலட்சுமி, பிரேம குமாரி, அங்கையற்கன்னி, கலாவதி, வள்ளியம்மை, நித்ய கல்யாணி, மாலா, சித்ரா, அமுதா, விக்டோரியா, கீதா, சுசீலா, சுந்தரி ஆகியோருக்கு வாகை மகளிர் பட்டயம் வழங்கப்பட்டன.

    முடிவில் என்ஜினீயர் மாலை மணி நன்றி கூறினார்.

    Next Story
    ×