search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா முழு ஆதரவு அளிக்கும்-அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
    X

    கோப்பு படம்.

    பா.ஜனதா முழு ஆதரவு அளிக்கும்-அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

    • புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
    • அதிகாரம் பறிபோய்வி டுமோ என்று நினைத்து எந்த முயற்சியையும் அதிகாரி களும் எடுப்பதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: -புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை என்பது பா.ஜனதா எண்ணம். அத்தனை வகையிலும் ஒத்துழைப்பு தருவோம். அப்போது நான் இருந்த கட்சியில் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டுள்ளோம். பிராந்தியத்துக்கு பாதகம் என எதிர்த்த சூழலும் உண்டு. தற்போது இந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபையில் போடப்பட்ட தீர்மானங்கள் எத்தனை முறை மத்திய அரசிடம் கொண்டு செல்லப்பட்டன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    அதிகாரம் பறிபோய்வி டுமோ என்று நினைத்து எந்த முயற்சியையும் அதிகாரி களும் எடுப்பதில்லை. அத்தனை தீர்மானங்களும் டெல்லி சென்றடைந்ததில்லை. மாநில மக்கள் உணர்வுகளை டெல்லிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராக இல்லை. அரசு தீர்மானங்கள் தற்போது கொண்டு செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் மத்திய அரசிடம் சென்று அடைந்து மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை முயற்சி தொடர்ந்து இருக்க வேண்டும்.

    அந்தந்த மொழிபேசும் மாநிலத்தோடு சேர்த்து விடுவார்களோ என்ற இதர பிராந்திய எம்.எல்.ஏ.க்கள் அச்சத்தில் இருந்தனர். ஒரே மாநிலமாக இருக்க வலியுறுத்தப்படும். மாநில கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. தள்ளுபடி செய்து தரக்கூடிய மாநில அந்தஸ்தாக இருக்கவேண்டும். அதை உருவாக்கவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வந்த பிறகு புதுவையிலிருந்து சென்ற கோப்புகள் திரும்ப கிடைக்க 7 ஆண்டுகளாகும் என்ற நிலை மாறிவிட்டது.

    மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறும் சூழலில் கிடைக்கும் காலத்தில் ஒரு சில நடவடிக்கை எடுக்கவேண்டும். நாம் நிதிக்குழுவில் உறுப்பினராக இல்லை. மாநிலமாவோ, யூனியன் பிரதேசமாகவா இல்லை. ஜி.எஸ்.டி. என வரும்போது மாநிலத்தில் சேர்க்கின்றனர். உறுப்பினராக இல்லாததால் நிதி வரவில்லை. 1963 பிசினஸ் ரூலில் திருத்தம் கொண்டு வரவேண்டும். கட்டுகளை விடுவிக்க மாற்றம் கொண்டு வரவேண்டும்.

    அக்கோரிக்கையை மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு பெறவேண்டும். அமைச்சரவைக்கும், சட்டப்பேரவைக்கும் உரிய அதிகாரம் பெறவேண்டும்.

    கவர்னரே இதை தர வேண்டும். முதல்- அமைச்சருக்கு ரூ. 10 கோடி வரை அனுமதி தரலாம். கிரண்பேடி கவர்னராக வந்தபோது ரூ.1 லட்சம் அனுமதிக்குகூட அவரிடம் செல்லும் நிலையை உருவாக்கினார். கவர்னருக்கும், முதல்- அமைச்சருக்கும் முரண்பாடு ஏற்பட்டால் டெல்லிக்கு அனுப்பும் முறை கடந்த ஆட்சியில் நடந்தது. அந்நிலை இருக்கக்கூடாது. உரிய அதிகாரம் அமைச்சரவை, சட்டப்பேரவைக்கு வேண்டும். மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முழு ஆதரவை பா.ஜனதா தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×