என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை தந்தை பெரியார் நகர் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகர் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் மதுசுதன் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வளவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் ரத்தின தனவேந்தன் மற்றும் புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவியாளர் உமா அமலோற்பவமரி ஆகியோர் கலந்து கொண்டு யு.கே.ஜி. வகுப்பு முடித்த மழலையர்களுக்கு பட்டமளித்து கவுரவித்தனர்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ரத்தினவேல், காமராஜன் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கால்நடை டாக்டர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்பம் நடைபெற்றது. இது பார்வையாளர்களை கவறும் வண்ணம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

    மேலும் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா, பெல்ஜிஸ் பேகம் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
    • புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். புதுவை மக்களின் மீது பாசம் கொண்டவர்.

    அதனால் அவருக்கு புதுவையில் சிலை அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று அ.ம.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தி னோம்.

    எங்களின் கோரிக்கையை ஏற்று புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அ.ம.மு.க. சார்பில் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அரசு சார்பில் ஜெயலலிதாவிற்கு சிலை அமைக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா புகாரை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்ட குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் தங்கும் விடுதியுடன் மசாஜ் சென்டர் உள்ளது.

    இங்கு சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்குவது வழக்கம். இந்நிலையில் புதுவையை சுற்றி பார்க்க வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கசிஹெர்னாண்டஸ் (வயது35). என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றார்.

    அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ரெக்கீஸ் என்பவர் கசிஹெர்னாண்டஸ்க்கு மசாஜ் செய்தார். அப்போது அவர் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இது குறித்து கசிஹெர்ண்டஸ் கோட்ட குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை நடத்தினார். ஆனால் புகார் செய்த பெண் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா இந்த புகாரை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்கு பதிவு செய்து மசாஜ் சென்டர் ஊழியர் ரெக்கிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9 மணியளவில் புதைவட மின்கேபிள் பழுதால் மின்சாரம் தடைபட்டது. 11 மணி வரை மின்சாரம் வரவில்லை.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை தொகுதி பூக்கார வீதி, அம்பலவாணர் நகர் சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது.

    இங்கு 9 மணியளவில் புதைவட மின்கேபிள் பழுதால் மின்சாரம் தடைபட்டது. 11 மணி வரை மின்சாரம் வரவில்லை. மின்துறை அதிகாரிகளும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து வந்தார். பொதுமக்கள் வையாபுரி மணிகண்டன் தலைமையில் காந்தி வீதியில் போலீஸ் நிலையம் அருகே தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மின்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சு

    வார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மணி நேரத்தில் மின் பழுது சரிசெய்யப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து 12 மணிக்கு மறியல் கைவிடப் பட்டது.

    இருப்பினும் மின்கேபிள் பழுதை சீரமைக்க பல மணி நேரம் ஆனது. இன்று அதிகாலை 4 மணிக்குத்தான் புதைவட மின் கேபிள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

    • புதுவை கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி.
    • இடையில் புனிதவதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திகா என்ற மனைவியும், 2 மகள்க ளும் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோரிமேடு ராஜா அண்ணாமலை நகரை சேர்ந்த புனிதவதி(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    புனிதவதி மேட்டுப் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இடையில் புனிதவதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    மேலும் கடந்த 20 நாட்களாக புனிதவதிக்கு மூச்சு திணறல் அடிக்கடி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை புனிதவதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே புனித வதியை அவரது கணவர் முருகன் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புனிதவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை பஸ் நிலையத்தில் இருந்து கனகசெட்டிக்குளத்துக்கு ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது.
    • காலாப்பட்டு போலீசாரிடம் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பஸ் நிலையத்தில் இருந்து கனகசெட்டிக்குளத்துக்கு ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பெண்களை ஒருவர் பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டே வந்தார்.

    பஸ் கனகசெட்டிக் குளத்தை வந்தடைந்ததும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காலாப்பட்டு போலீசாரிடம் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் முறையிட்டனர்.

    இதையடுத்து பெண்களை கிண்டல் செய்த வரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கோட்டக்குப்பத்தை அடுத்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த அய்யப்பன்(45) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

    • புதுவை வீராம்பட்டி னத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 3 மாத தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • தற்காப்பு பயிற்சிகளை மாணவிகள் செயல் விளக்கமாக செய்து காட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவை வீராம்பட்டி னத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 3 மாத தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சியின் நிறைவு விழா ஜீவரத்தினம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி சகாயமேரி தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சக்கரபாணி வரவேற்றார். தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் சிறப்பு விருந்தி னராக பங்கேற்றார்.

    தற்காப்பு கலை பயிற்சியாளர் சரவணன் கற்றுத்தந்த தற்காப்பு பயிற்சிகளை மாணவிகள் செயல் விளக்கமாக செய்து காட்டினர்.

    ஆபத்து காலங்களில் எவ்விதம் செயல்பட்டு காத்துக்கொள்வது, அச்சமின்றி எதிர்கொள்வது, பயிற்சியின் அவசியம் குறித்து மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினர். தொடர்ந்து தற்காப்பு கலை பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் வழங்கி பாராட்டினார். ஆசிரியர் பிரசன்னா நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சகாய மேரி பணி ஓய்வு பெறுவதை யொட்டி பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆசிரியர்கள், மாணவிகள் சார்பில் தலைமை ஆசிரியை சகாயமேரியின் சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    • புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.
    • 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 28-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தனசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி ஆசிரியர் அண்ணாமலை, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் 35 மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதற்கான எழுது பொருள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • விழிப்புணர்வு போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் மாணவர்களுக்கு பாலின வன்கொடுமைகள், குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    கல்லூரி முதல்வர் லலிதாராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் பாரதி வரவேற்றார். வரதட்சணை தடை வாரியத்தின் தலைவி வித்யாராம்குமார் சிறப்புரையாற்றினார்.

    விழிப்புணர்வு போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் துணை பேராசிரியர்கள் அர்சுனன், சத்தியமூர்த்தி, வெங்கடாசலபதி, மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மட்டும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவை ரெஜிஸ்டர் ஆப்போசிட்டியில் பதிவு பெற்ற சங்கங்கள் ஆகும்.
    • ஆனால் செலவு செய்வதற்கு முன்பே பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிற புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை புதிய அமைப்பில் இணைத்துள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக் கத்தக்கது.

    புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மட்டும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவை ரெஜிஸ்டர் ஆப்போசிட்டியில் பதிவு பெற்ற சங்கங்கள் ஆகும். அவற்றுக்கென்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளது.

    அவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் டெவ லப்மெண்ட் ஆத்தாரிட்டி ஆப் புதுவை என்ற அமைப்புடன் இணைக்க இந்த புதிய மாநில விளையாட்டு கவுன்சிலின் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும்.

    ஆனால் புதுவை அரசு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக புதுவை மாநில விளையாட்டு கவுன்சிலின் பொதுக்குழுவை கூட்டாமல் உள்ளது.

    இதற்காக பலமுறை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் வரை கூட்டாமல் காலம் கடத்தி வரு கின்றனர். புதிய மாநில விளையாட்டு கவுன்சில் மூலம் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் செலவு செய்வதற்கு முன்பே பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

    வரவு செலவு கணக்குகளை பல வருடங்களாக தாக்கல் செய்யாமல் உள்ளதால் அந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே, பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமலே கவுன்சிலின் சட்ட விதிகளுக்கு புறம்பாக புதிய மாநில விளையாட்டு கவுன்சில் மட்டும் ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளியை புதிதாக பதியப்பட்ட போர்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுவை என்ற அமைப்பில் இணைத்து விட்டதாக சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை வணிகவரி மாநில ஆணையர் ராஜசேகருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
    • காவியவர்மன், மற்றும் துணை வணிகவரி அதிகாரிகள், உதவி வணிகவரி அதிகாரிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வணிகவரி மாநில ஆணையர் ராஜசேகருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

    வணிகவரி துறை அலுவ லகத்தில் நடந்த விழாவிற்கு, உதவி ஆணையர்கள் இளங்கோவன், சதீஷ்குமார் தலைமை தாங்கினர். விழாவில் பணி ஓய்வு பெற்ற மாநில ஆணையர் ராஜசேகருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், உதவி ஆணையர் ரேவதி, வணிகவரி அதிகாரிகள் சரவ ணகுமார், தேவிராஜலட்சுமி, அஸ்மாபாய், புகழேந்தி, சீனுவாசன், காவியவர்மன், மற்றும் துணை வணிகவரி அதிகாரிகள், உதவி வணிகவரி அதிகாரிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

    முடிவில் பணி ஓய்வு பெற்ற வணிகவரி மாநில ஆணையர் ராஜசேகர் நன்றி கூறினார்.

    • புதுவை மாநிலத்தின் எல்லை பகுதியான கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களில் சுமார் 47 ரவுடி மற்றும் கொலை கொள்ளை என பல்வேறு குற்றவாளிகள் இருந்து வருகின்றனர்.
    • குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்ற போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் எல்லை பகுதியான கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களில் சுமார் 47 ரவுடி மற்றும் கொலை கொள்ளை என பல்வேறு குற்றவாளிகள் இருந்து வருகின்றனர். இதில் 7 பேர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் நடந்த பா.ஜனதா பிரமுகர் படுகொலை சம்பவத்தால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காதவாறு தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின் பேரில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் (பொறுப்பு), உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் நேற்று இரவு கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை விடிய விடிய நீடித்தது. அப்போது குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்ற போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சுற்றித்திரியும் இளைஞர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×