என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அ.ம.மு.க. பாராட்டு
- மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
- புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். புதுவை மக்களின் மீது பாசம் கொண்டவர்.
அதனால் அவருக்கு புதுவையில் சிலை அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று அ.ம.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தி னோம்.
எங்களின் கோரிக்கையை ஏற்று புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அ.ம.மு.க. சார்பில் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அரசு சார்பில் ஜெயலலிதாவிற்கு சிலை அமைக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






