என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சுழற்சியில் முறை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரை சந்தித்தனர்.

    புதுச்சேரி

    புதுவை மாநில மல்யுத்த சங்கத்தை சார்ந்த வீரர் தயாநிதி ஒரு நிமிடத்தில் 82 எளிகாப்டர் ஸ்பின் எனும் சுழற்சியில் முறை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இதையடுத்து அவர் புதுவை மல்யுத்த சங்க செயலாளர் மாஸ்டர் வினோத் தலைமையில் முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரை சந்தித்தனர். அவர் உலக சாதனை படைத்த வீரருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் செல்வம், சிலம்பரசன், பிரேம், சோமசுந்தரம், ஜெயஸ்டூ, தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதுவை உழவர்கரை அரசு பள்ளி அருகே ஒரு கும்பல் குற்றம் செய்யும் நோக்கில் வீச்சரிவாளுடன் பதுங்கியிருப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை அரசு பள்ளி அருகே ஒரு கும்பல் குற்றம் செய்யும் நோக்கில் வீச்சரிவாளுடன் பதுங்கியிருப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோடி விட்டது. அதில் ஒருவர் மட்டுமே சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ரெட்டியார்பாளையம் வயல்வெளி பகுதியை சேர்ந்த புவனேஷ்(வயது19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு வீச்சரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதுபோல் உருளையன்பேட்டை திடீர்நகரில் உள்ள தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பின்புறத்தில் கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்துது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்ப வஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் தப்பியோடி விட்டனர். 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நித்தீஷ், குயவர்பாளையம் கருணாகர பிள்ளை வீதியை சேர்ந்த மணிமாறன்(18), மற்றும் புதுவை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த டேனியல் என்பதும், தப்பியோடியவர்கள் திடீர்நகரை சேர்ந்த தேவகுமார்(19), உருளையன்பேட்டை தென்னஞ்சாலை வீதியை சேர்ந்த கவுதம்(22) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்ற 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் தமிழ் தாய் நகரில் குடித்தண்ணீர் அழுத்தம் குறைவு ஏற்பட்டது.
    • உப்பளம் தொகுதி டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள ப-வடிவ யூட்ரெயின் பணியை ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் தமிழ் தாய் நகரில் குடித்தண்ணீர் அழுத்தம் குறைவு ஏற்பட்டது. இதை அப்பகுதி பொதுமக்கள் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் தெரிவித்தனர்.

    உடனே அப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள பைப் லைன் இணைப்புகளை புதுப்பித்து சரி செய்து கொடுத்தனர். மேலும் உப்பளம் தொகுதி டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள ப-வடிவ யூட்ரெயின் பணியை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் படி அறிவுத்தினார். இதனை தொடர்ந்து உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பாரதிமில் சாலை மற்றும் பழைய மருத்துவமனை சந்து ஆகிய இடங்களிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அவருடன் நேதாஜி நகர் 3 பஞ்சயதார்கள், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், தி.மு.க. கிளை செயலாளர்கள் செல்வம்,ராகேஷ் மற்றும் ராஜா பிரபாகரன், மற்றும் செழியன், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
    • கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

    இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

    ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த ஏசுவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று முழங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

    புதுவையில் ரெட்டியார்பாளையம் புனித ஆந்திரேயா ஆலயம், ரெயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் ஆலயம், மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா ஆலயம், நெல்லிதோப்பு விண்ணோற்பு அன்னை ஆலயம், சட்டசபை அருகே உள்ள தூயயோவான் ஆலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது. கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளுடன் ஓசன்னா என்று முழங்கினார்கள்.

    தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலை குழுவினர் மூலம் தொடர்ந்து பறையிசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார்.
    • புதுவை காந்தி திடலில் 10 நாட்கள் நடந்த சாராஸ் கைவினை பொருள் கண்காட்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதலபிரதான். பறை இசை கலைஞர். இவர் தொகுதி மற்றும் பிற பகுதிகளில் நடக்கும் பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலை குழுவினர் மூலம் தொடர்ந்து பறையிசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார்.

    புதுவை காந்தி திடலில் 10 நாட்கள் நடந்த சாராஸ் கைவினை பொருள் கண்காட்சி நிகழ்ச்சியில் ஜெகதலபிரதாபன் தலைமையில் பறை இசை கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி பாராட்டைப் பெற்றனர்.

    இதையடுத்து பறை இசை கலைஞர் ஜெகதலபிரதாபனுக்கு பாராட்டு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு ஜெகதலபிரதாபனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் ஊசிடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன் மற்றும் கூடப்பாக்கம் பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம், கரசூர்,தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பா.ஜனதா நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    பறை இசைக் கலைஞர் ஜெகதலபிரதாபன் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஊசுடு தொகுதி பா.ஜனதா மக்கள் நலன் தொடர்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்.
    • காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர். இவர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்ட பின் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பல்கலைக் கூடத்திற்கு 8 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரும் ஊழல், முறைகேடு, விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.

    முதுகலைப் படிப்பு தொடங்குதாக கூறி ரூ.5 லட்சம் பல்கலைக்கூட வங்கிக் கணக்கில் இருந்து பொறுப்பு முதல்வர் எடுத்துள்ளார். காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார். இப்பணம் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை.

    பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரின் விதிமீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் ஆதா ரங்களுடன் பல மனுக்கள் அனுப்பி உள்ளோம். ஆனால், அம்மனுக்கள் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், துறைச் செயலர் இதில் தலையிட்டு, அரசு நிதியை முறைகேடு செய்த பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை குடிமைப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற சாய்.இளங்கோவனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனராக பதவி வழங்கப்பட்டது.
    • ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சென்ற இயக்குனர் சாய்.இளங்கோவன் விடுதியின் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசுத் துறையில் சூப்பரண்டாக பணியாற்றி புதுவை குடிமைப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற சாய்.இளங்கோவனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனராக பதவி வழங்கப்பட்டது.

    இதையடுத்து தட்டா ஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இயக்குனராக பொறுப்பேற்ற சாய்.இளங்கோவன் முதல் நாளாக அலுவல் பணியை மேற்கொண்டார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் சில குறைபாடுகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கை தொடர்பான மனுவை விசாரித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். உடனே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சென்ற இயக்குனர் சாய்.இளங்கோவன் விடுதியின் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மாணவர்களுக்கு சமைத்த உணவின் தரத்தை பார்வையிட்டார். மேலும் மாணவர்களோடு அமர்ந்து விடுதி உணவினை சாப்பிட்ட இயக்குனர் சாய். இளங்கோவன் மாண வர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சேதம் அடைந்த விடுதியில் கட்டிடப் பகுதிகளை பார்வையிட்டார். அதே போல் விடுதியின் கழிவறை,குளியலறை, மாணவர்கள் படிக்கும் அறை, கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் உள்ள மாணவர்கள் தங்கும், உறங்கும் அறைகளை பார்வையிட்டு மாண வர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் மாணவர்களின் பிரச்சனைகளை துறையின் அமைச்சருக்கு கொண்டு சென்று ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    • கிராமப் பகுதியில் குப்பை சேகரிப்பதற்கான டிராக்டர் வாகனங்களை வழங்கி வருகிறது.
    • திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தமிழக அரசு தூய்மை பாரத இயக்கம் மூலம் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் கிராமப் பகுதியில் குப்பை சேகரிப்ப தற்கான டிராக்டர் வாகனங்களை வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு குப்பை சேகரிக்கும் 2 டிராக்டர் வாகனங்கள் வழங்கப்பட்டது. திருச் சிற்றம்பலம் கூட்ரோடு வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி டிராக்டர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவியை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன், தி.மு.க. கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், கிளியனூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி கே.ஜி சங்கர், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தொடரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பான முறையில் கையாண்ட தாக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.
    • திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தொடரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பான முறையில் கையாண்ட தாக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

    மேலும் முதல்-அமைச்சர், அமைச்சர்களுடன் இணைந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருடனும் இணக்க மான முறையில் புதுவை மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக விவாதங்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவகுமார் தலைமையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.
    • கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் அமைப்பின் புதுவை பிரிவும் இணைந்து கிராமப்புற இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.

    கருத்தரங்கிற்கு தக்ஷசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் ஸ்ரீமணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன்

    தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, புதுவை மாநிலம் 95 சதவீதம் உயர்கல்வி படிக்கும் மாநிலமாகவும், விவசாயம், கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ. பிரிவின் தலைவர் ஜோசப் ரொசாரியோ, மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் தெலுங்கானா தலைவர் பிரம்மரெட்டி, புதுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நக்கீரன், லோகநாதன், புதுவை மின்துறை நிர்வாக பொறியாளர் சண்முகவடிவேல், கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், முத்துலட்சுமி, மனோகரன், கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீரில் இரும்பு துகள்கள் கலந்து மாசு பட்டும் பழுப்பு நிறத்திலும் வருவதாக பொதுமக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
    • புதிய குடிநீர் குழாய் அமைக்க ரூ. 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கபட்டது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஏ.எப்.டி. ஆலை வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டம்மாள் நகர் , இந்திரா நகர், மாங்காளி அம்மன் நகர், தயானந்த வீதி ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்கும் குழாய்கள் துருபிடித்ததால் வீடுகளுக்கு வரும் குடிநீரில் இரும்பு துகள்கள் கலந்து மாசு பட்டும் பழுப்பு நிறத்திலும் வருவதாக பொதுமக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.

    இதனை சரிசெய்ய பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அதிகாரிகளிடம் தேவையான நடவ டிக்கையை எடுக்க சம்பத் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து புதிய குடிநீர் குழாய் அமைக்க ரூ. 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கபட்டது.

    அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் உள்ள மொரட்டாண்டி டோல்கேட்டை லாரி உரிமையாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    • தற்போது உயர்த்திய சுங்க கட்டணத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு டோல்கேட் சுங்க கட்டணத்தை உயர்த்தி அறிவித்த நிலையில் புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் உள்ள மொரட்டாண்டி டோல்கேட்டை லாரி உரிமையாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    பாண்டிச்சேரி லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜென்ட் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே டீசல் விலை உயர்வால் டிரான்ஸ்போர்ட் தொழில் நலிவடைந்த நிலையில் ஆண்டுதோறும் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி வருவதால் டிரான்ஸ்போர்ட் தொழில் மிகவும் பாதிப்படைவதாகவும், தற்போது உயர்த்திய சுங்க கட்டணத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு லாரி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் கூட்டமைப்பினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜென்ட் சங்க ஆர்ப்பாட்டத்தையொட்டி ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

    ×