என் மலர்
நீங்கள் தேடியது "collect garbage"
- கிராமப் பகுதியில் குப்பை சேகரிப்பதற்கான டிராக்டர் வாகனங்களை வழங்கி வருகிறது.
- திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
தமிழக அரசு தூய்மை பாரத இயக்கம் மூலம் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் கிராமப் பகுதியில் குப்பை சேகரிப்ப தற்கான டிராக்டர் வாகனங்களை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு குப்பை சேகரிக்கும் 2 டிராக்டர் வாகனங்கள் வழங்கப்பட்டது. திருச் சிற்றம்பலம் கூட்ரோடு வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி டிராக்டர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவியை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன், தி.மு.க. கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், கிளியனூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி கே.ஜி சங்கர், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






