என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி
    X

    புதுவை ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் குறுத்தோலையுடன் பங்கேற்ற காட்சி.

    தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
    • கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

    இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

    ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த ஏசுவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று முழங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

    புதுவையில் ரெட்டியார்பாளையம் புனித ஆந்திரேயா ஆலயம், ரெயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் ஆலயம், மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா ஆலயம், நெல்லிதோப்பு விண்ணோற்பு அன்னை ஆலயம், சட்டசபை அருகே உள்ள தூயயோவான் ஆலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது. கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளுடன் ஓசன்னா என்று முழங்கினார்கள்.

    தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    Next Story
    ×