என் மலர்
புதுச்சேரி

முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகடன் பொது மக்களுடன் சேர்ந்து சாலை மறியல் செய்த காட்சி.
வையாபுரி மணிகண்டன் தலைமையில் நள்ளிரவில் பொதுமக்கள் மறியல்
- 9 மணியளவில் புதைவட மின்கேபிள் பழுதால் மின்சாரம் தடைபட்டது. 11 மணி வரை மின்சாரம் வரவில்லை.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை தொகுதி பூக்கார வீதி, அம்பலவாணர் நகர் சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது.
இங்கு 9 மணியளவில் புதைவட மின்கேபிள் பழுதால் மின்சாரம் தடைபட்டது. 11 மணி வரை மின்சாரம் வரவில்லை. மின்துறை அதிகாரிகளும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து வந்தார். பொதுமக்கள் வையாபுரி மணிகண்டன் தலைமையில் காந்தி வீதியில் போலீஸ் நிலையம் அருகே தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மின்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சு
வார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மணி நேரத்தில் மின் பழுது சரிசெய்யப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து 12 மணிக்கு மறியல் கைவிடப் பட்டது.
இருப்பினும் மின்கேபிள் பழுதை சீரமைக்க பல மணி நேரம் ஆனது. இன்று அதிகாலை 4 மணிக்குத்தான் புதைவட மின் கேபிள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.






