search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உப்பளம் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு-அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    உப்பளம் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு-அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • உப்பளம் தொகுதியில் வசிக்கும் ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் நிறைய வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
    • ஏழை எளிய இஸ்லாமியர்கள் வாழமுதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    உப்பளம் தொகுதியில் வசிக்கும் ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் நிறைய வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மீரா பள்ளி வாசல் பெரிய இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் குறைந்த வாடகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க பல முறை கோரிக்கை வைத்துள்ளேன்.

    ஆனால் இது வரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. ஏழை எளிய இஸ்லாமியர்கள் வாழமுதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பயன்படுத்த சமுதாய நலக்கூடம் ஒன்று என் கோரிக்கையை ஏற்று கட்டித்தரப்பட்டாலும், அதன் நோக்கம் நிறைவேறவில்லை.

    அங்கு வக்பு வாரிய அலுவலகம்தான் நடை பெறுகிறது. முதல்-அமைச்சர் அந்த சமுதாயக்கூடத்தை மீட்டு ஏழை எளிய மக்கள் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ சுபகாரியங்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×