என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆழ்குழாய் கிணறு அமைக்கஅரசு அனுமதி பெற தேவையில்லை-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    ஆழ்குழாய் கிணறு அமைக்கஅரசு அனுமதி பெற தேவையில்லை-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு

    • நிலத்தடிநீர் பயன் பாட்டை கண்கா ணிக்கவும், ஒழங்குபடுத்தவும் மத்திய அரசு கொண்டுவந்த வழிகாட்டு நெறிமுறைகள் புதுவையிலும் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இனி விவசாயிகள்ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-

    நிலத்தடிநீர் பயன் பாட்டை கண்கா ணிக்கவும், ஒழங்குபடுத்தவும் மத்திய அரசு கொண்டுவந்த வழிகாட்டு நெறிமுறைகள் புதுவையிலும் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அரசாணை உடனடியாக வெளியிடப்படும். இனி விவசாயிகள்ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை.

    மேலும் ஒரு ஆழ்குழாய் கிணறுக்கும், அடுத்த கிணறுக்கும் உள்ள இடைவெளி கட்டுப் பாடு ஏதும் தேவையில்லை.

    விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைத்தவுடன் புதுவை நிலத்தடி நீர் ஆதார அமைப்பில் கட்டணமின்றி பதிவு செய்தால், அவர்க ளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதைக்கொண்டு மின் இணைப்பு பெறலாம்.

    ஆழ் குழாய் கிணறு அமைக்க பி.வி.சி. பைப் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கிணறு அமைக்கும் முன்பாக வேளாண் அலுவலரிடம் தெரிவித்து அவரின் மேற்பார்வையில் ஆழ்கு ழாய் கிணறு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×