search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஊர்வலம்
    X

    மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.

    மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஊர்வலம்

    • மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.
    • மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.

    காமராஜர் சிலை அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மின்துறை தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். தன்னாட்சிக் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். பஞ்சாலைகளை திறக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யத்தை செயல்படுத்த வேண்டும். 8 மணிநேர, வேலை பணி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

    விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சுதா சுந்தரராமன், ராமச்ச ந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், சத்தியா, கலியமூர்த்தி, முருகன், செயலாளர்கள் மதிவாணன், உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×