என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தலைமை செயலாளர் டெல்லிக்கு திரும்புங்கள்-சட்டசபையில் கே.எஸ்.பி. ரமேஷ் ஆவேசம்
- புதுவை நகர அமைப்பு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் வரை முறை சட்டம் சட்ட சபையில் இயற்றப் பட்டும் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
- புதுவையில் பணபுழக்கம் குறைந்துள்ளது. கட்டிட வரைமுறை சட்டத்தை அமல்படுத்தினால் வருவாய் அதிகரிக்கும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கே.எஸ்.பி. ரமேஷ்: புதுவை நகர அமைப்பு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் வரை முறை சட்டம் சட்ட சபையில் இயற்றப் பட்டும் அமல்படுத்தப் படாமல் உள்ளது.
தலைமைச் செயலர், செயலர் தடுக்கிறார்கள். சட்டப்பேரவை சட்டம் இயற்றி அதை ஏற்காத தலைமைச்செயலர் தேவையில்லை. அரசுக்கு வருவாய் வரும். தலைமை ச்செயலர், துறைச்செயலரை மாற்றுங்கள். கவர்னர் ஒப்புதல் தந்தும் கோப்புக்கு ஒப்புதல் தர மறுக்கிறார்கள். எனவே தலைமை செயலாளர் டெல்லிக்கு திரும்புங்கள் என்றார்.
வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ.: புதுவையில் பணபுழக்கம் குறைந்துள்ளது. கட்டிட வரைமுறை சட்டத்தை அமல்படுத்தினால் வருவாய் அதிகரிக்கும். பி.ஆர்.சிவா: டவுன்பிளா னிங்குக்கு ஒப்புதல் தராததால் வீடு கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
முதல்- அமைச்சர் ரங்கசாமி. வீடு கட்ட ஒப்புதலுக்காக பலர் காத்துள்ளனர். கூடுதலாக ரூ. 300 கோடி வருவாய் வரும். சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு விவாதம் நடந்தது.






