என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவை மாநில ஆறுகளில் 10 கிமீ.,க்கு ஒரு தடுப்பணை-கென்னடி எம்.எல்.ஏ அறிவுறுத்தல்
- கடற்கரை மண்டல ஒழுங்காற்று ஆணையம் என்ற பெயரில் மீனவ மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அரசு துணை போக கூடாது.
- மீனவர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கென்னடி எம்.எல்.ஏ பேசியதாவது:-
கடற்கரை மண்டல ஒழுங்காற்று ஆணையம் என்ற பெயரில் மீனவ மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அரசு துணை போக கூடாது.
மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரமாக அறிவிக்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியத்தை உயர்த்தி தர வேண்டும். மீனவர் நல வாரியத்தை அமைக்க வேண்டும். பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்க்க வேண்டும்.
மீனவர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும். வம்பாகீரப் பாைளயத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மீனவர்கள் கலப்பு திருமணம் செய்தால் அப்பெண்களுக்கு கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதனை அரசு சரி செய்ய வேண்டும்.
மறைமலை அடிகள் சாலையில் இருந்து அம்ேபத்கர் சாலை வரை உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். சாலைகளில் மழை நீர் சேமிப்பை உருவாக்க வேண்டும். அதிக நோய்களை உருவாக்கும் கொசுவை ஒழிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள ஆறுகளில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். உப்பளம் தொகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






