என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கால்நடை வளர்ப்போருக்கு பரிசு-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
    X

    கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு வழங்கிய காட்சி.

    கால்நடை வளர்ப்போருக்கு பரிசு-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்

    • புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கால்நடைகளின் கண்காட்சி நடைபெறும்.
    • கண்காட்சியில் கால் நடைத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கால்நடைகளின் கண்காட்சி நடைபெறும்.

    கடந்த 6 ஆண்டுகளாக கால்நடை கண்காட்சி புதுவையில் நடைபெற வில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கால்நடை துறை சார்பில் மங்கலம் கிராமத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுபுற கிராம பகுதியைச் சேர்ந்த கிடாரி, ஜெர்சி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகள் மற்றும் சண்டை சேவல் நாட்டுக்கோழி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோழிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    கண்காட்சியில் கால் நடைத் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 46 கால்நடைகள், கோழிகளுக்கு சிறப்பூ பரிசும் கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து கால்நடைக ளுக்கும் ஆறுதல் பரிசும் வளர்ப்போருக்கு வழங்கி னார். நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இயக்குனர் லதா மங்கேஸ்கர், கால்நடை மருத்துவர்கள் அனந்தராமன் ஆர்த்தி சரளாதேவி மற்றும் கால்நடை விவசாயிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×