என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • பெண்கள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.

    புதுச்சேரி: 

    திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை உள்ளது.

    பொது மக்கள் மடுகரை யிலிருந்து திருபுவனையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாகனங்களிலும் நடந்தும் மதகடிப்பட்டு வழியாக சென்று வருகின்றனர்.

    2 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கள் தேவைகளுக்கு நல்லூர் பகுதியில் இருந்து இந்த சாலை வழியாகவே நடந்தும் மற்றும் வாகனங்களிலும் மதகடிப்பட்டு பகுதிக்கு வந்து தங்களது தேவைக்கு கடைவீதியில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் இரவு நேரங்களில் மதகடிப்பட்டு பகுதியில் இருந்து நல்லூர் வரை செல்லும் சாலை இருபுறமும் மரங்கள் வளர்ந்து  நேரங்களில் மின் விளக்கு இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இதனால் பெண்கள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.

    இதனால் இந்த சாலை முழுவதும் நல்லூர் வரை மின்விளக்குகள் அமைத்து பொதுமக்கள் அச்சமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
    • நிரந்தர ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலை ய்யன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சாலை போக்கு வரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமும், போனஸ் தொகையும் வழங்கப்பட வில்லை. நிரந்தர ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை.

    உயர்த்தப்பட்ட டி.ஏ. தொகை 41 சதவீதம், 7-வது சம்பள கமிஷன் ஊதியக்குழு பரிந்துரைக்கான சம்பளம் மற்றும் 2 ஆம்கட்ட எம்.ஏ.சி.பி. 96 ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

    4 பிராந்தியங்களுக்கும் சேர்த்து மொத்தம் 18 பஸ்கள் நிறுத்தப்பட்டு ள்ளன. அவை களுக்கு புதிய வாகனம் ஏற்பாடு செய்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வண்டிகளுக்கு ரீ-பாடிகட்ட வேண்டும். கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு சேர்த்து சுமார் ரூ.27 கோடி அரசு நிதி ஒதுக்கியும் நிர்வாகம் எந்தவித பணியையும் அதற்காக செய்யாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

    பி.ஆர்.டி.சி. கடன் வழங்கும் சங்கத்திற்கு கடந்த 7 ஆண்டு காலமாக நிர்வாக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து தொகையை செலுத்தாத காரணத்தினால், ஊழியர்களுக்கு கூடுதல் வட்டி 16 சதவீதம் போடப்பட்டு இறுதி கடிதங்களை சங்கம் அனுப்பிவருகிறது.

    நிர்வாகம் அவ்வாறு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனே சொசைட்டிக்கு செலுத்த வேண்டும். சொசைட்டி போட்ட வட்டி க்கு பி.ஆர்.டி.சி. நிர்வாகமே முழு பொறுப்பாகும். மேலும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், துறை செயலர் மற்றும் மேலாண் இயக்கு நருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வர்த்தக சபை நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினமாக தமிழ்நாடு, புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, புதுவை வர்த்தக சபையில் வணிகர் தினவிழா சாரம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் ரவி வரவேற்றார். இணை பொதுச்செயலாளர் முகமது சிராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, புதுவை வணிகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வணிகப் பணியாற்றிய 45 உறுப்பினர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார். ஆணையர் முகம்மது மன்சூர் வாழ்த்தி பேசினார்.

    வணிகர் நல வாரியத்தை முழு அளவில் செயல்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க முதல்-அமைச்சரிடம் வர்த்தக சபை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த ஆண்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

    விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேவக்குமார், ஞானசம்பந்தம், பிரகாஷ் அமீர்தகண்டேசன், நமச்சிவாயம், ராஜவேல், குமார், ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட துணை கலெக்டர் சவுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
    • உள்நாட்டு போரில் சிக்கியிருந்த என்னை இந்திய அரசு மீட்டது.

    புதுச்சேரி:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரினால் அங்கு சிக்கி தவித்து வரும் இந்திய மக்களை பத்திரமாக மீட்டுவர மத்திய அரசு ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை செயல்ப டுத்தியது.

     புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சூடானில் சிக்கி தவித்து வரும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதனடிப்படையில் புதுவை வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் முருகன்(38) சூடானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

    புதுவைக்கு பத்திரமாக திரும்பிய முருகன் இன்று புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கி, தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட துணை கலெக்டர் சவுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.

    மீட்கப்பட்டது குறித்து முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: -நான் 10 ஆண்டுக்கு மேலாக சூடானில் பணியாற்றி வருகிறேன். குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தேன். குழந்தைகளின் படிப்புக்காக நாடு திரும்பினேன்.

    8 மாதம் முன்பு நான் மட்டும் சூடான் சென்றேன். அங்கு ரபக் என்ற நகரில் சர்க்கரை ஆலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தேன்.

    உள்நாட்டு போரில் சிக்கியிருந்த என்னை இந்திய அரசு மீட்டது. எனக்கு முன்பாக புதுவை ஏம்பலத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் கொச்சின் வழியாக வந்தார். நான் டெல்லி வழியாக புதுவைக்கு வந்து சேர்ந்தேன் என்றார்.

    • புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம்
    • ஒரு பிரதிநிதியை பார்த்து உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையின் அனைத்து விவகாரத்திலும் தலையிடும் கவர்னர் ஜிப்மர் விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை ? ஜிப்மருக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்தி ஒரு மாதம் ஆகியும் அதற்கு கவர்னர் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நேற்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.

    காலையில் போராட்டம் நடந்தவுடன் மதியம் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி எதிர்க்கட்சிகள் செய்யும் போராட்டத்தை கவர்னர் விமர்சித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி.க்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. கவர்னராக இருந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை பார்த்து உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தொகுதி வேலையை மட்டும் பார்க்கச் சொல்வதும், புதுவையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கவர்னர் கூறியிருப்பது:-

    அதிகாரத்தின் உச்சமாகவே பார்க்க முடிகிறது. கவர்னரின் இந்த சர்வாதிகார பேச்சிற்கு தி.மு.க. கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசிடம் புதுவை அரசு கோரியுள்ள நிதியைப் பெருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தோ கவர்னர் இதுவரை வாய் திறக்கவில்லை. அரசு அறிவித்துள்ள திட்டங்களை எதிர்பார்த்து மக்கள் காத்தி ருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்காத கவர்னர் தொடர்ந்து அரசியல் பேசுவதும், எதிர்க்கட்சிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி வசைபாடு வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

    இது புதுவை மாநிலத்திற்கு ஏற்றதல்ல. கவர்னர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சிறப்பு பூஜை செய்து பாப்பாஞ்சாவடி ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • ஜி.கே ராஜனுக்கு கோவிலில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பாப்பாஞ் சாவடி கிராமத்தில் ஸ்ரீ வர்ண முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது.

     இந்தக் கோவிலில் உற்சவர் வீதி உலா வரும் வாகனம் இல்லாமல் இருந்த நிலையில் கோயில் நிர்வாகிகள் ஜி.கே.ஆர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமை யாளர் ஜி.கே ராஜனிடம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அவர் உற்சவர் வீதி உலா வாகனம் தனது சொந்த செலவில் தயார் செய்து கோயிலுக்கு அர்ப்பணித்தார்.

     உற்சவர் வாகனத்திற்கு திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் உள்ள வரசிக்தி விநாயகர் கோவிலில்சிறப்பு பூஜை செய்து பாப்பாஞ்சாவடி ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் உற்சவர் வீதி உலா வாகனம் பாப்பஞ்சாவடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வர்ணமுத்து மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த வாகனத்தை தனது சொந்த நிதியில் வழங்கிய ஜி.கே.ஆர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஜி.கே ராஜனுக்கு கோயிலில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது.

    • மனைவி சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றுவிட்டார்.
    • வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அடுத்த சோரி யாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் வயது (35). இவருக்கு வெண்மதி என்கிற மனைவி, அகிலன் என்கிற 9 வயது மகன் இருந்து வருகின்றனர்.

    கொத்தனார் வேலை செய்துவரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இது சம்பந்தமாக அவரது மனைவி பலமுறை கண்டித்தும் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது மனைவி  சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றுவிட்டார்.

     வீட்டில் பிரபாகரன் தனியாக இருந்து வந்துள்ளார். கிரிவலம் முடித்துவிட்டு  வீடுக்கு வந்து பார்க்கும்போது வீடு பூட்டப்பட்டு திறக்கப் படாமல் இருந்தது. பலமுறை தட்டியும் திறக்காததால் பின்பக்கம் வழியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார்.

     இது சம்பந்தமாக பாகூர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார் புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஹமீது உசேன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதிக போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் ஜோடிக்கப்பட்டு வாகனத்தில் இரவு வீதியுலா நடைபெற்றது.
    • தொடர்ந்து பட்டா பிஷேகம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் பாண்டுரங்கன் திரவுபதி அம்மன் கோவிலில் திமீதி திருவிழாநடந்தது. இதில் திரனாள பக்தர்கள் பங்கேற்றனர்.

    முன்னதாக பிடாரி யம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, ஊரணி பொங்கல் வைத்தல், அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாணம், ஆகியன நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வாக பூங்கரகப் புறப்பாடு டன் தீமீதி திருவிழா நடை பெற்றது. நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். கிருஷ்ணர், அர்ச்சுனன் திரவுபதி சிறப்பு அலங்காரத்தில் ஜோடிக்கப்பட்டு வாகனத்தில் இரவு வீதியுலா நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து பட்டா பிஷேகம் நடைபெற்றது.

    • பள்ளி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து மூலிகைச் செடிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
    • போதிய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் மூலிகை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பல்வேறு விதமான மூலிகைச் செடிகள் மற்றும் அழகுச் செடிகளும் பராம ரிக்கப்பட்டு வந்தன.

     இந்த மூலிகை தோட்டத்தை பார்ப்ப தற்காக புதுவை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து மூலிகைச் செடிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

    மேலும் விடுமுறை காலங்களில் இப்பகுதிக்கு வந்து அழகிய செடிகளையும் மூலிகைச் செடிகளையும் பார்த்து ரசித்தனர்.

     மூலிகைச் செடிகளின் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். ஆனால் தற்பொழுது இந்த மூலிகை தோட்டத்தில் செடிகள் அனைத்தும் பராமரிப்பின்றி அழிந்து விட்டன.

    மூலிகை செடிகள் இருந்த இடத்தில் கோடிகள் மற்றும் முட்புதர்கள் அதிக அளவில் முளைத்துள்ளன. இங்கு போதிய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

     இங்கு பணியாற்றும் ஒரு சில ஊழியர்கள் பணியை சரியாக செய்யாமல் இங்கு வந்து ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மாணவ மாணவிகள் தங்கள் பாரம்பரிய மூலிகை வைத்தியங்களை பற்றி அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இங்கு பணியாற்றும் அதிகாரிகளும் சரிவர பணிக்கு வருவது கிடையாது என்று தெரிய வருகிறது. இங்கு போதுமான ஆட்களை நியமித்து மூலிகைச் செடிகளை புதிதாக நட்டு பராமரிப்பு பணியை மேற்கொண்டால் இப்பகுதியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மூலிகைச் செடிகளின் மருத்துவ பயன்களை அறிவதற்கு உறுதுணையாக இருக்கும்.

    இங்கு சரிவர பணியாற்றாத பணியா ளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, புதிய பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றனர்.
    • போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த மங்கலம் உருவையாறு சாவித்திரி நகரை சேர்ந்தவர் தனபால் வயது (22).

    கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி உருவையாறு மற்றும் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் தனபால் தரப்பினர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று கோர்டு உத்தரவின் பேரில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் காலையும் மாலையும் ஜாமினில் இரு வேளையும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

    தனபால் மற்றும் அவரது நண்பர் ஒரு மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெ ழுத்திட சென்றனர்.பைக்கை தனபால் ஓட்ட பின்னால் மணிபாரதி மற்றும் வித்யாசாகர் இருவரும் அமர்ந்து வந்தனர்.

    அப்போது உருவையாறு அமுதசுரபி பார் அருகே வந்து கொண்டிருந்த போது அவர்களை நோக்கி எதிரே வந்த தினேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் வழிமறித்து அவர்களது கண்களில் மிளகாய் பொடியை தூவி கொலை மிரட்டல் விடுத்தனர்.

     இதனால் அதிர்ச்சி யடைந்த தனபால் மற்ற அவர் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தனபால் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மங்களம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.

    • மழை பெய்து வரும் நிலையில் தானிய வகைகளான எள்ளு, பச்சைபயிர், உளுந்துகள் அழுகிவிட்டது.
    • விவசாய பயிர் காப்பீடு திட்டம் இல்லாதவர்கள் பயன்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் விவசா யத்திற்கு பெயர்போன பாகூர் பகுதியில் கோடை வெயிலையொட்டி சம்பா பருவ சாகுபடி முடிந்தவுடன் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் தானிய வகைகளை பல இடங்களில் விவசாயிகள் விதைத்திருந்தனர். குறிப்பாக உளுந்து, பச்சை பயிர், எள்ளு விதைத்துள்ளனர்.

     வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த 1- ந் தேதி இரவு அடை மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நெல் விவசாயம் மற்றும் தானிய வகை விவசாயம் படும் கடுமையாக பாதிக்கப் பட்டது. மேலும் தொடர்ந்து அவ்வப்போது லேசான மழை பெய்து வரும் நிலையில் தானிய வகைகளான எள்ளு, பச்சைபயிர், உளுந்துகள் அழுகிவிட்டது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மணப்பட்டு வருவாய் பகுதியில் 8 ஏக்கர், பாகூர் வருவாய் பகுதியில் 20 ஏக்கர், பரிக்கல் பட்டு வருவாய்ப்பகுதியில் 10 ஏக்கர், குருவிநத்தம், இருளன்சந்தை சேலியமேடு, அரங்கனூர், கிருமாம் பாக்கம், மணமேடு, கரையாம்புத்தூர், மடுகரை, நெட்டப்பாக்கம், கரிக்க லாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் 100 ஏக்கர் மழையில் நனைந்து அழுகி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆகியுள்ளது.

    திடீர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உழும் நிலை ஏற்பட்டிருப்பதாக கவலை யுடன் தெரிவிக்கின்றனர். புதுவை அரசு தானிய பயிர்களுக்கு இலவச பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு வந்துள்ளது. பல இடங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தானிய பயிருக்கு காப்பீட்டு திட்டத்தில் பல விவசாயிகள் பதிவு செய்யப்படாமல் இருந்து வருகின்றனர். இதனால் விவசாய பயிர் காப்பீடு திட்டம் இல்லாதவர்கள் பயன்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அரசு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் வந்து பயிர் காப்பீட்டு திட்டத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொள்கின்றன.
    • அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி விபரங்களை அறியலாம்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பிரதம மந்திரி தேசிய பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 8-ந் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.

    முகாமில், புதுவை மாநிலத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொள்கின்றன.இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முகாமுக்கு வருபவர்கள் அனைத்து சான்றிதழ்கள், ஆதார்கார்டு நகல், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டுவர வேண்டும். பயிற்சி பெறுவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள துணை தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி விபரங்களை அறியலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×