என் மலர்
புதுச்சேரி

பாப்பாஞ்சாவடி ஸ்ரீ வர்ணமுத்து மாரியம்மன் கோயில் உற்சவர் வீதிவில் உலா வரும் வாகனத்தை ஜி.கே ராஜன் தனது சொந்த செலவில் வழங்கினார்.
வர்ணமுத்து மாரியம்மன் கோவில் உற்சவர் வாகனம்
- சிறப்பு பூஜை செய்து பாப்பாஞ்சாவடி ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஜி.கே ராஜனுக்கு கோவிலில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பாப்பாஞ் சாவடி கிராமத்தில் ஸ்ரீ வர்ண முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது.
இந்தக் கோவிலில் உற்சவர் வீதி உலா வரும் வாகனம் இல்லாமல் இருந்த நிலையில் கோயில் நிர்வாகிகள் ஜி.கே.ஆர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமை யாளர் ஜி.கே ராஜனிடம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அவர் உற்சவர் வீதி உலா வாகனம் தனது சொந்த செலவில் தயார் செய்து கோயிலுக்கு அர்ப்பணித்தார்.
உற்சவர் வாகனத்திற்கு திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் உள்ள வரசிக்தி விநாயகர் கோவிலில்சிறப்பு பூஜை செய்து பாப்பாஞ்சாவடி ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் உற்சவர் வீதி உலா வாகனம் பாப்பஞ்சாவடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வர்ணமுத்து மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த வாகனத்தை தனது சொந்த நிதியில் வழங்கிய ஜி.கே.ஆர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஜி.கே ராஜனுக்கு கோயிலில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது.






