என் மலர்
புதுச்சேரி

சேதம் அடைந்த பயிர்களை படத்தில் காணலாம்.
100 ஏக்கர் பச்சை பயிர் சேதம்
- மழை பெய்து வரும் நிலையில் தானிய வகைகளான எள்ளு, பச்சைபயிர், உளுந்துகள் அழுகிவிட்டது.
- விவசாய பயிர் காப்பீடு திட்டம் இல்லாதவர்கள் பயன்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் விவசா யத்திற்கு பெயர்போன பாகூர் பகுதியில் கோடை வெயிலையொட்டி சம்பா பருவ சாகுபடி முடிந்தவுடன் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் தானிய வகைகளை பல இடங்களில் விவசாயிகள் விதைத்திருந்தனர். குறிப்பாக உளுந்து, பச்சை பயிர், எள்ளு விதைத்துள்ளனர்.
வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த 1- ந் தேதி இரவு அடை மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நெல் விவசாயம் மற்றும் தானிய வகை விவசாயம் படும் கடுமையாக பாதிக்கப் பட்டது. மேலும் தொடர்ந்து அவ்வப்போது லேசான மழை பெய்து வரும் நிலையில் தானிய வகைகளான எள்ளு, பச்சைபயிர், உளுந்துகள் அழுகிவிட்டது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மணப்பட்டு வருவாய் பகுதியில் 8 ஏக்கர், பாகூர் வருவாய் பகுதியில் 20 ஏக்கர், பரிக்கல் பட்டு வருவாய்ப்பகுதியில் 10 ஏக்கர், குருவிநத்தம், இருளன்சந்தை சேலியமேடு, அரங்கனூர், கிருமாம் பாக்கம், மணமேடு, கரையாம்புத்தூர், மடுகரை, நெட்டப்பாக்கம், கரிக்க லாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் 100 ஏக்கர் மழையில் நனைந்து அழுகி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆகியுள்ளது.
திடீர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உழும் நிலை ஏற்பட்டிருப்பதாக கவலை யுடன் தெரிவிக்கின்றனர். புதுவை அரசு தானிய பயிர்களுக்கு இலவச பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு வந்துள்ளது. பல இடங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தானிய பயிருக்கு காப்பீட்டு திட்டத்தில் பல விவசாயிகள் பதிவு செய்யப்படாமல் இருந்து வருகின்றனர். இதனால் விவசாய பயிர் காப்பீடு திட்டம் இல்லாதவர்கள் பயன்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் வந்து பயிர் காப்பீட்டு திட்டத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.






