என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கொத்தனார் மர்ம சாவு
- மனைவி சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றுவிட்டார்.
- வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த சோரி யாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் வயது (35). இவருக்கு வெண்மதி என்கிற மனைவி, அகிலன் என்கிற 9 வயது மகன் இருந்து வருகின்றனர்.
கொத்தனார் வேலை செய்துவரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இது சம்பந்தமாக அவரது மனைவி பலமுறை கண்டித்தும் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றுவிட்டார்.
வீட்டில் பிரபாகரன் தனியாக இருந்து வந்துள்ளார். கிரிவலம் முடித்துவிட்டு வீடுக்கு வந்து பார்க்கும்போது வீடு பூட்டப்பட்டு திறக்கப் படாமல் இருந்தது. பலமுறை தட்டியும் திறக்காததால் பின்பக்கம் வழியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார்.
இது சம்பந்தமாக பாகூர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார் புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஹமீது உசேன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிக போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






