என் மலர்
விருதுநகர்
சாத்தூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் உட்கோட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வெம்பக்கோட்டை ரோட்டில் மதுவிற்ற காளிமுத்து (வயது 42), வடிவேல் (40) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் அருகே புகையிலை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை விற்ற மேட்டமலை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 39), நாகராஜன் (38), படந்தாலை சேர்ந்த லதா (36) , நேசகுமார் (45) அவர்களிடம் இருந்து 75 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குன்னக்குடி கிராமம் உள்ளது. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியாக இந்த கிராமம் அமைந்துள்ளது.
இதற்கு அடுத்துள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர், வள்ளிநாயகம் (வயது 52). விவசாயியான இவர் அந்த ஊர் நாட்டாண்மையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் வள்ளிநாயகம் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஒரு தரப்பினர் தாக்கியதால் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் வள்ளிநாயகம் புகார் செய்தார். இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளிேய சென்ற வள்ளிநாயகம் மீண்டும் திரும்பவில்லை. இதுதொடர்பாகவும் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர்.
இதற்கிடையே அவரது இருசக்கர வாகனம் குன்னக்குடி கிராமத்தில் மெயின் ரோட்டில் கிடந்தது. எனவே அங்கு அவரை தேடினர். அப்போது, அங்குள்ள முட்புதருக்குள் ரத்தக்காயங்களுடன் வள்ளிநாயகம் பிணமாக கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து, வள்ளிநாயகத்தின் உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாவட்ட எல்லைப்பகுதியாக இருப்பதால் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறம்பு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வள்ளிநாயகம் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
விருதுநகர்:
மாவட்டத்தில் ஏற்கனவே 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. 16,198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
69 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,509 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மாவட்டத்தில் 7 மையங்களில் போடப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக திட்டமிட்டபடி தடுப்பூசி போட வாய்ப்பில்லை.
நேற்று 575 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 869 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி 3 நாட்களில் 2,100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு 9,720 டோஸ் மருந்து அனுப்பப்பட்டுள்ளது.
10,000 சுகாதாரப்பணியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்ட போதிலும் நடைமுறையில் தடுப்பூசி போட முன் வருபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.

உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா முத்து கூறினார்.
சிவகாசி:
தமிழகம் முழுவதும் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் சுற்றி வருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள உணவு பொருட்களை கொடுத்து அதில் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் கடந்த 2 நாட்களாக சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வாகனத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன்குமார், ராஜாமுத்து, செல்வராஜ் ஆகியோர் பொதுமக்கள் தரும் உணவு பொருட் களில் கலப்படம் இருந்தால் அதை ஆய்வு மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா முத்து கூறியதாவது:-
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கடந்த 2 நாட்களாக 96 மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அதில் 54 பொருட்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் குடிக்கும் பாலில் அதிக அளவில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகாசி மணிநகர் பகுதியில் பால் விற்பனை செய்து வந்த ஒரு பால் வியாபாரிடம் மாதிரி எடுத்து அதை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் கேசரி பவுடர், தண்ணீர், சுக்ரோஸ், சீனி ஆகியவை கலந்து இருப்பது தெரியவந்தது. இதே போல் ஓட்டல்களில் வழங்கப்படும் கிரேவி, சால்னா போன்றவற்றிலும் அஜினோ, மோட்டோ, கலர்பொடி, கெட்டுப்போன முந்திரிபருப்பு ஆகியவை கலப்படம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய், கருப்பட்டி, மசலா பொருட்களிலும் கலப்படம் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் அடைந்தால் உடனடியாக 94440-42322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

சிவகாசி அருகே உள்ள கிராமங்களில் 150 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பருவம் தவறிய மழையால் நாசமானதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி:
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணபேரி, ஈஞ்சார், நடுவபட்டி, வடப்பட்டி, நாகலாபுரம், நிறைமதி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் வரை அப்பகுதி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டனர்.
ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் மக்காச்சோளங்கள் அனைத்தும் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணபேரியை சேர்ந்த விவசாயி அங்காளஈஸ்வரி கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தை கணக்கில் கொண்டு நாங்கள் மக்காசோளம் பயிரிடுவது வழக்கம். அதே போல் கடந்த ஆண்டும் மக்காசோளம் பயிரிட்டோம்.
ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் அறுவடைக்காக காத்திருந்த நிலையில் தொடர்ந்து பருவம் தவறிய பெய்த மழையால் மக்காச்சோளம் அனைத்தும் நாசமானது. எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நாங்கள் மக்காச்சோளம் பயிரிட்டோம். தற்போது அவை அனைத்தும் சேதமானது. எங்களை போல் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த பகுதியில் மக்காசோளம் பயிரிட்டு நஷ்டம் அடைந்துள்ளனர்.
நாங்கள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளோம். எங்கள் நிலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இதில் கால தாமதம் ஏற்பட்டால் என்னை போன்ற பல விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 231 ஆக உயர்ந்தது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,497 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
16,198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,506 ஆக உயர்ந்துள்ளது.
1,007 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,930 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் மாவட்ட சுகாதாரத் துறையினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரில்லை.
மேலும் உள்ளாட்சி அமைப்பினரும் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர். தொடர்ந்து விதிமுறைகளின்படி மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இம்மாவட்டம் நோய் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடும் நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் இன்னும் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தொடர்கிறது.
நேற்றும் மாவட்டத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்ததால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 2-வது நாளாக 153 பேருக்கு கொரோனா தடு்ப்பூசி போடப்பட்டது. கடந்த 2 நாட்களில் 333 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சாத்தூரில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பங்களா தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் மாவட்ட குற்றவியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவர் கீழே விழுந்தார்.
இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு காவல்துறை சார்பில் முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சாத்தூர் அருகே யூனியன் அலுவலக காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது56). இவர் சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலைபார்த்து வந்தார். பொங்கல் அன்று இரவு பணிக்கு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. நேற்று அவரது மகன் மாரீஸ்வரன் யூனியன் அலுவலகம் சென்று பார்த்தார். அப்போது அங்கு மேஜையிலேயே ராமமூர்த்தி இறந்து கிடப்பது தெரியவர அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. ராமமூர்த்தி எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே பொது இடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அனுமன்நகரை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). இவர் குல்லூர்சந்தை ரோட்டில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற சூலக்கரை போலீசார் சண்முகராஜ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர் அருகே மது குடித்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் மது கூடத்தில் சின்னதாதம் பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 34), அவரது உறவினர் பவானந்தன் (24) ஆகிய 2 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தபோது சூலக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்த 3 பேர் உடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரையும் பாட்டிலால் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 3 பேரையும் தேடி வருகின்றனர்.
விருதுநகரில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அணைகள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காரியாபட்டி தாலுகா காரைக்குளம் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காரைக்குளம் கண் மாய் மராமத்து பணி செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
காரை குளம் கண்மாய் மழை நீரால் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஏனென்றால் கண்மாய்க்கரை மிகவும் மோசமாக உள்ளதால் நீர் நிரப்ப முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் எசலிமடை, தாமரைக்குளம் மற்றும் காணல் ஓடை பகுதிகளிலிருந்து தண்ணீர் காரைக்குளம் கண்மாய்க்கு வருவதால் கண்மாய் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தோப்பூர் முருகன் ஆகியோர் சென்று பொதுமக்களை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீர் அதிக அளவில் ஊருக்குள் வராமல் அடைத்தும் வேறொரு பகுதியில் தண்ணீரை திருப்பி விட்டனர்.
இதனால் பொதுமக்கள சற்று நிம்மதி அடைந்தனர். காரைக்குளம் கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் கிராமத்தில் இருந்து கலிங்கப்பட்டி செல்லும் சாலையில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கீழராஜகுலராமன் கண்மாய் நிறைந்து, தற்போது மடை தட்டி தண்ணீர் செல்கிறது. மேலும் கண்மாய்க்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக, பாதுகாப்பு கருதி கண்மாயின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் வெள்ளம் போன்று ஓடுகிறது. கண்மாயில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தற்போது தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தரைப்பாலத்தை அடுத்துள்ள கோபாலபுரம், சிவலிங்காபுரம், நரிக்குடி, வடகரை, தென்கரை உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தற்போது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, கான்சாபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூர், அழகாபுரி, சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ெதாடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
ஆதலால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் இருந்து பிளவக்கல்பெரியாறு அணை செல்லும் சாலையில் உள்ள பட்டுப்பூச்சி மற்றும் ரகுமத் நகர் பகுதியில் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர் மழையினால் சேத்தூர், தேவதானம். சோலைசேரி, முகவூர், முத்துசாமிபுரம். தளவாய்புரம். செட்டியார்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்கள் தற்போது நிரம்பி மறுகால் செல்கிறது.
இந்த நீர் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பெய்த தொடர் மழையினால் சாஸ்தா கோவில் அணை நிரம்பி வழிகிறது.
ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி, மேலாண்மறைநாடு, புளியடிபட்டி கோபாலபுரம் சுண்டங்குளம், சீவலப்பேரி, உப்புபட்டி, எதிர்கோட்டை, மேல பழையாபுரம், கண்மாய் பட்டி, அருணாசலபுரம், நரிக்குளம், கோவிலூர். ஆகிய கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகின்றது.
ஆதலால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டி அருகே சூரனூர் கண்மாயில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த கண்மாய் கரை முழுவதும் மழையால் அரிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமாக உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் கண்மாய் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. தொடர் மழையால் காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளிலுள்ள கண்மாய்கள் பெரும்பாலும் நிரம்பிய நிலையில் உள்ளது. எனவே அனைத்து கண்மாய்களையும் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சூரனூர் கண்மாயை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.