என் மலர்

  நீங்கள் தேடியது "farmer murdered"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருப்புக்கோட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பாலையம்பட்டி:

  அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டிய பட்டி முத்துராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இருவருக்கும் அந்த பகுதியில் அருகருகே தோட்டம் உள்ளது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அழகர்சாமி தனது தோட்டத்தில் குப்பைகளை எரித்துள்ளார்.

  அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகர்சாமியும், அவரது பேரன் தமிழரசனும் சேர்ந்து கட்டையால் கண்ணனை தாக்கினர்.

  இதில் படுகாயமடைந்த கண்ணனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, தமிழரசனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்விரோத தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள கோடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைஅருள் (வயது55), விவசாயி. இவர் வயலுக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை தேடி உறவினர்கள் வயலுக்கு சென்றனர்.

  அங்கு சூசை அருள் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து சத்திரக்குடி போலீசில் சூசை அருள் மகன் வின்சென்ட் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  முன்விரோத தகராறில் கொலை நடந்து இருப்பது தெரியவர சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவசாயியை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  சின்னசேலம்:

  விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29), விவசாயி. இவரது மனைவி ரஞ்சிதா (26). இவர்களுக்கு தனுஷ் (9) என்கிற மகனும், ஆர்த்தி (3) என்ற மகளும் உள்ளனர்.

  மணிகண்டன் நேற்று காலை தனது நிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த சிலர் இதுபற்றி சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சிதா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

  அப்போது ரஞ்சிதா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது கணவரை கள்ளக்காதலன் ஆறுமுகம் (43) மற்றும் 18 வயது சிறுவனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

  இதையடுத்து மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

  மணிகண்டன் தனது நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இதனால் ஆறுமுகத்துக்கும், மணிகண்டனின் மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தங்களது கள்ளக்காதலை வளர்த்துவந்தனர்.

  இவர்களது கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆறுமுகத்திடம் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தையும் மீட்டார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் ஆறுமுகத்துக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. மணிகண்டன், மனைவியை மீண்டும் கண்டித்ததால் அவரை தீர்த்துக்கட்ட ரஞ்சிதா முடிவு செய்தார்.

  அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிகண்டனுக்கு ரஞ்சிதா மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்தார். மணிகண்டன் அந்த மதுவை அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் தனது கள்ளக்காதலன் ஆறுமுகம், 18 வயது சிறுவன் ஆகியோரை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி மணிகண்டனை கொலை செய்தார். உடலை அவரது நிலத்தில் வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.

  இதையடுத்து ரஞ்சிதா, கள்ளக்காதலன் ஆறுமுகம் மற்றும் 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×